அலையெனத் திரண்டு வந்த அன்பின் இனிய வலையக உறவுகளே
வணக்கம்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப
திண்ணியராய் செயல்பட்ட, சென்னைவாழ் வலையுலக இளைஞர்
படை, செயல் மறவராய் விளங்கி புயலெனச் செயல்பட்ட காட்சிகளை
நீங்களும் கண்டீர்கள்! நானும் கண்டேன்.
நன்றி! மறவரே! என்றும் மறவேன்!
அடுத்து, அழைப்பை ஏற்று, எதிர்பார்த்தைவிட அதிக அளவில, தம்
பணிகளை ஒதுக்கியும் பணத்தைச் செலவிட்டும், உள்நாடு மட்டுமல்ல
வெளிநாட்டு அன்பர்களும், குறிப்பாக, ஒருநாளும் இல்லாத திருநாள்
என்பது போல பெண்களும் திரண்டு வந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சி
ஆகும்
உங்களை,எல்லாம் பாராட்ட சொற்களே இல்லை!
நன்றி என்ற சொல்லை பலமுறை சொல்லி, நீங்கள் இருக்கும்
ஒவ்வொரு திசை நோக்கியும் சிரம் தாழ கரம் கூப்பி என் இனிய
பாராட்டையும், வாழ்த்துகளையும தெரிவித்துக் கொள்கிறேன்
இதுவரை பலரும் எழுதிய பதிவுகளை படித்துப் பார்த்ததில்
உளம் முழுவதும் நிறைந்த உவகைக் கொண்டேன் ஒருசிலர் சுட்டிய
குறை கூட யோசனை என்ற அளவில் தான் இருந்தது
பொதுவாக பதிவர் சந்திப்பு வெற்றி என்றே அனைவரும்
குறிபுபிட்டிருந்தது, ஏற்பாடு செய்த எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே
என்றால் அது மிகையல்ல
மேலும், இவ் வெற்றிக்குப் அடுத்து என்ன? என்ற கேள்வி
பலரது உள்ளத்திலும் இருப்பதாக உணர்கிறேன்
எப்படியோ தமிழ் வலைப்பதிவர் குழுமம் என்ற பெயரில்
ஓர் அமைப்பு உருவாகி விட்டது என்பது அனைவரும் அறிந்த
ஒன்றே! எனினும், இதுவரை............!
நாம் தனித்தனி குழுமம் அமைத்து செயல்பட்டாலும
அனைத்தையும் தழுவிய மாநில அமைப்பை உருவாக்கி பதிவு செய்வது
மிகவும் இன்றியமையாதது
இன்று வலையுலகம் அனைவராலும்
கவனிக்கத் தக்க ஒன்றாக ஆகி விட்டது
நாம், சுதந்திரமாக நடக்கும் ஊழல்களையும், தவறுகளையும் சுட்டி எழுதுவதால் எல்லா கட்சிகளுமே நம்
மீது உள்ளுக்குள் எரிச்சல்கொண்டே
உள்ளன என்பது உண்மை! இன்றும்
இனி, எதிர் வரும் நாளிலும் எந்த ஆட்சி வந்தாலும் நம்முடை வலைகள் மீதும் பதிவர்கள் மீதும் அடக்குமுறை வரும். அதுபோது எதிர்த்து அறவழியில் போராட மாநிலம் தழுவிய வலுவான அமைப்பைப் பதிவு செய்வது அவசியம் மேலும், இது காலத்தின்
கட்டாய மாகும்
இதற்கு, தங்களின் ஆதரவும்
ஒத்துழைப்பம் இருக்குமானால் உறுதியாக செயல்படுத்தலாம்
எனவே இது பற்றி தங்கள் மேலான கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
பிற பின்னர்
அனைத்தையும் தழுவிய மாநில அமைப்பை உருவாக்கி பதிவு செய்வது
மிகவும் இன்றியமையாதது
இன்று வலையுலகம் அனைவராலும்
கவனிக்கத் தக்க ஒன்றாக ஆகி விட்டது
நாம், சுதந்திரமாக நடக்கும் ஊழல்களையும், தவறுகளையும் சுட்டி எழுதுவதால் எல்லா கட்சிகளுமே நம்
மீது உள்ளுக்குள் எரிச்சல்கொண்டே
உள்ளன என்பது உண்மை! இன்றும்
இனி, எதிர் வரும் நாளிலும் எந்த ஆட்சி வந்தாலும் நம்முடை வலைகள் மீதும் பதிவர்கள் மீதும் அடக்குமுறை வரும். அதுபோது எதிர்த்து அறவழியில் போராட மாநிலம் தழுவிய வலுவான அமைப்பைப் பதிவு செய்வது அவசியம் மேலும், இது காலத்தின்
கட்டாய மாகும்
இதற்கு, தங்களின் ஆதரவும்
ஒத்துழைப்பம் இருக்குமானால் உறுதியாக செயல்படுத்தலாம்
எனவே இது பற்றி தங்கள் மேலான கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
பிற பின்னர்
விருந்தினில் உண்ட இனிப்பின் சுவை
ReplyDeleteநாவினைவிட்டு மறைந்தாலும் விருந்தின் நினைவு
மனதை விட்டு என்றும் அகலாதது போல
பதிவர் சந்திப்பு அமைந்தது மகிழ்வளிக்கிறது
இதனை அப்படியே விரிவு படுத்தவும் பலப்படுத்தவும்
சென்னைப்பதிவர்கள் குழுமத்தின் மூலமே
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு
அமைப்பாளரை நியமித்து அவர்கள் மூலம்
அந்த அந்த மாவட்டங்களில் துணை அமைப்பை
ஏற்படுத்தலாம்.
அங்கத்தினர்களை அவர்கள் மூலம் சேர்த்து
முறைப்படி தேர்தல்கள் நடத்தி நல்லதொரு
ஜன நாயக அமைப்பாக இதை மாற்றலாம் என்பதை
எனது கருத்தாக பதிவு செய்கிறேன்
tha.ma 1
ReplyDeleteநல்ல சரியான யோசனை .
ReplyDeleteஅவசியமான ஒன்றும் கூட.
இது போன்றே ஒற்றுமையாய் கைகோர்ப்போம்.
கட்டாயம் பதிவர் சங்கம் என்று ஒன்று தேவை!
ReplyDeleteதங்களின் கருத்தை நான் முன் மொழிகிறேன்...
ReplyDeleteஒரு வலுவான அமைப்பாக இவ்வமைப்பு உருவாக வேண்டும்...
நிச்சயமாக உருவெடுக்கும்,,,,
ReplyDeleteதலை நகரத்தில் 'தமிழ் பதிவர்கள் தலைமை குழுமம்' அமைக்க வேண்டும்... எல்லோரும் ஒற்றுமையுடன் சேர வேண்டும்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்... (TM 9)
ReplyDeleteசொல்லுங்கள் ஐயா செய்வோம்..
ReplyDeleteநான் என்றும் உங்களுடன் ஐயா.
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
ReplyDeleteமாநிலம் தழுவிய வலுவான அமைப்பைப் பதிவு செய்வது அவசியம் என்ற உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். தங்களின் சீரிய தலைமையில் அது இயங்க அனைவரும் ஒத்துழைப்போம்.
ReplyDeleteஅய்யா வலுவான அமைப்பு தேவை என்பதை உணர்த்தும் அழகிய பதிவு ..
ReplyDeleteநானும் எனது ஆமோதிப்பை பதிவு செய்கிறேன்.
ReplyDeleteதங்களுடைய எண்ணம்தான் இந்த விழா நடைபெற தூண்டுகோலாக இருந்தது.மற்றவையும் நிச்சயம் நிறைவேறும்.தங்களுடைய கருத்தையே எனது பதிவிலும் பிரதிபலித்திருக்கிறேன்.
ReplyDeleteசிந்தித்ததும் சந்தித்ததும் தித்தித்தது