Tuesday, August 28, 2012

பெண்ணே எரிந்துப் போனாயே!

மூவர்   தூக்குத்தண்டணையை நீக்க, தன் உயிரை மாய்த்துக் கொண்ட  
                       செங்கொடியின் நினைவு நாள்!  இன்று!
                                          வீரவணக்கம்


 பெண்ணே எரிந்துப் போனாயே-உயிர்
    பிரிந்து எங்கே போனாயோ
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
    வேலூர் சிறையில் நின்றாயா
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
    கதறி துயரில் விழுகின்றார்
 எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனி
    எத்தனை உயிர்கள் மாள்வாரே

 வஞ்சம்  மட்டுமே உருவாக-மூவர்
      வாழ்வைப் பறிக்கும் கருவாக
 நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிர்
     நீங்கின் மீண்டும் வருமொன்றா
 தஞ்சம் அடைந்த  பறவைக்கும்-தன்
     தசையைத் தந்தவன் தமிழனடா
 பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீ 
      பற்றி எரியும் திட்டாதீர்

 முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாம் 
     முடங்கியா விடுவோம் ஆகட்டும்
 அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
     அடக்கவும் தெரியும் தமிழனுக்கு
 திடமாய் முடிவு  எடுப்பாராம்-அவர்
     தினமும் அறப்போர் தொடுப்பாராம்
 விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
     விடத்தை அவரே தின்பாரா  

 இனிமேல்  உயிர்பலி வேணாவே-இன்று
    இழந்தோம் செங்கொடி வீணாவே
 குனியோம் எவர்கும் தலைகுட்ட-என்ன
    கோழையா நாமே தரைமுட்ட
 கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
    காக்க தமிழரே உடன்ஒல்லை
 துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
    தூக்குக்  கயிற்றை அறுப்பீரே

                                   புலவர் சா இராமாநுசம்

14 comments :

  1. தமிழ் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்து விட்டவள் தோழி செங்கொடி...



    தோழியின் தியாகம் போற்றப்பட வேண்டியது...

    ReplyDelete
  2. இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
    இழந்தோம் செங்கொடி வீணாவே...
    ஐயாவின் வரிகளில் வாழ்கிறாள் தோழி செங்கொடி.

    ReplyDelete
  3. மனம் நெகிழும் கவிதை வரிகள் !!!......
    வஞ்சம் மட்டுமே உருவாக-மூவர்
    வாழ்வைப் பறிக்கும் கருவாக
    நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிர்
    நீங்கின் மீண்டும் வருமொன்றா
    தஞ்சம் அடைந்த பறவைக்கும்-தன்
    தசையைத் தந்தவன் தமிழனடா
    பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீ
    பற்றி எரியும் திட்டாதீர்

    நன்றி ஐயா பகிர்வுக்கு .தங்கள் ஆசி
    பெற இந்த அன்பு உள்ளமும் காத்து
    இருக்கின்றது .முடிந்தால் வாருங்கள்
    என் ஆகம் வளம் பெற வாழ்த்துங்கள் .

    ReplyDelete
  4. மனதை நெகிழ வைக்கும் வரிகள் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. செங்கொடியின் தியாகம் - இன்னும்
    சிறை திறக்கவில்லை

    சோர்ந்திருக்கும் தமிழனை
    சேர்ந்திழுக்கும் தங்கள் வரிகள்

    ReplyDelete
  6. இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
    இழந்தோம் செங்கொடி வீணாவே

    கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
    காக்க தமிழரே உடன்ஒல்லை

    அழுத்தமான வரிகள் ஐயா

    வீரவணக்கம்


    ReplyDelete
  7. வழக்கம் போல அருமையான கவிதை ஐயா (TM 5)

    ReplyDelete
  8. அருமையான நினைவாஞ்சலி

    ReplyDelete
  9. இதயம் கனக்க வைக்கிறது கவிதை.
    த.ம. 7

    ReplyDelete
  10. கண்ணீர் முத்துக்கள் கோர்த்த கவிதை ஐயா!

    ReplyDelete
  11. தமிழ் பெண்களில் தைரியமிக்கவர்களும் உண்டு எனக் உலகுக்கு காட்டிச் சென்றவர் செங்கொடி... |TM 8

    ReplyDelete
  12. அழுத்தமான, ஆணித்தரமான கவிதை ஐயா! தோழர் செங்கொடிக்கு எம் வீர வணக்கங்கள்!

    ReplyDelete
  13. தங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி தோழரே..

    விரைவில் உங்கள் அறிமுக புகைப்படத்தை அனுப்பி வைக்கிறோம்.. மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்

    தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...