அன்பின் இனிய உறவுகளே-தினம்
அலைவழி காணும் உறவுகளே
துன்பில் துடித்தேன் சிலநாளாய்-எனை
துளைத்திட வேதனை கூர்வாளாய்
இருகை கூப்பி தொழுகின்றேன்-என்
இதயத்துள் குமுறி அழுகின்றேன்
ஒருகை தட்டின் இலையோசை-இதை
உணர்ந்திட வேண்டுதல் என்னாசை
பலநாள் முயற்சியே சந்திப்பாம்-அதில்
பழுதெனில் வருவது நிந்திப்பாம்
நலமுற வேண்டுவ ஒற்றுமையே-உடன்
நமக்குள் களைவோம் வேற்றுமையே
நடந்தது நடந்ததாய் போகட்டும்-இனி
நடப்பது நலமாய் ஆகட்டும்
கடந்ததை பேசிட வேண்டாமே-மன
காயத்தை மேலும் தூண்டாமே
வருவீர் அனைவரும் ஒன்றாக-தமிழ்
வலைப்பதி குழுமம் நன்றாக
தருவீர்! வாய்ப்பு உறவுகளே-சிரம்
தாழ வேண்டுவேன் உறவுகளே
சிறுதுளி வெள்ளமாய் போயிற்றாம்-சென்னை
செயல்மறவர் தம்கைப்பட ஆயிற்றாம்
வருவது ஒன்றே உம்பணியாம்-உமை
வாழ்த்தி வணங்குதல் எம்பணியாம்
புலவர் சா இராமாநுசம்
ReplyDeleteகிளம்பிய பிரச்சனைகள் இலவச விளம்பரம் என்று எடுத்துக் கொள்வோம்.
எல்லாம் நல்ல முறையில் நடக்கும்.
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி!
//நடந்தது நடந்ததாய் போகட்டும்-இனி
ReplyDeleteநடப்பது நலமாய் ஆகட்டும்//
தங்கள் விருப்பத்தை வழிமொழிகின்றேன். பதிவர் சந்திப்பு மனவேற்றுமைகள் மறைந்து வெற்றி பெற விழைகின்றேன்.
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி!
பெரியவரின் இந்த வேதனை கலந்த வேண்டுகோளை
ReplyDeleteஏற்க்க மறுத்தல் என்பது எம்மை நாமே தாழ்த்திக் கொள்வதற்கு
இணையானது .எடுத்த காரியம் சிறப்பாக நிகழப் பிரார்த்திக்கிறேன் .
கவலைகள் வேண்டாம் ஐயா .எது நடப்பினும் அவை யாவும்
நன்மைக்கென்றே கருதிக் கொள்வோம் .
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி!
கவலை வேண்டாம்.
ReplyDeleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி!
200 வது ஃபாலோயரை வரவேற்க உற்சாகமாக இருங்கள் :)
ReplyDeleteநன்றி!
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்...,
ReplyDeleteஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்...?
எல்லாம் சிறப்பாக அமையும் ஐயா... நன்றி... (TM 5)
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி!
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி!
எல்லாம் சிறப்பாக அமையவேண்டுகின்றேன் ஜயா
ReplyDeleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி!
ஐயா!
ReplyDeleteகீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும், அது எதிர்ப்பாகவும் இருக்கலாம். இவை அனுகூலமாகத் தான் அமையும்.
உங்கள் நல்ல முயற்சி வெற்றி பெறும்.
கோவிகண்ணன் கூறுவது போல் இது இலவச விளம்பரம். சில திரைப்படங்களுக்கு அமைவது போல்.
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி!
பதிவர் சந்திப்பிற்கு வருகை தரும் பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக நடக்கும் ஐயா.. உலகமே ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
ReplyDelete
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
வரிகள் உங்கள் வேதனையை அப்படியே வெளிபடுத்துகிறது
ReplyDeleteகவலை மறந்து உற்சாகம் கொள்ளுங்கள்,உங்கள் நீண்டநாள் கனவு/முயற்சி அல்லவா இது !
இனி நடப்பவை எல்லாம் நலமாய் அமையும்.
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
வணக்கம் அய்யா
ReplyDeleteகவலை வேண்டாம் .மாநாடு வரலாற்றீல் இடம் பெறும்.கலந்து கொள்ள இயலா தூரத்தில் இருப்பதே நம் போல் பலருக்கு பிரச்சினை .எனினும் உடல் மட்டுமே இங்கே,உள்ளம் உங்களோடு!!!
நன்றி
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
ஐயா விழா நன்றாக நடக்கும் கவலை வேண்டாம். இத்தகைய சம்பவங்களை தாண்டி தானே ஆக வேண்டும்? நீங்கள் அறியாததா?
ReplyDeleteஒரு சலசலப்பு ... அவ்வளவே.
ReplyDeleteஇனி எல்லாம் நன்கு நடந்தேறும் - உங்கள் பின்னால் படையாக நிற்கும் இளைஞரணி கூட்டம நடக்கு முழு நாளையும் வரலாற்றில் ஏற்றி வைப்பார்கள்.
உங்கள் முயற்சிக்கு என் பாராட்டும் நன்றியும்.
//நடந்தது நடந்ததாய் போகட்டும்-இனி
நடப்பது நலமாய் ஆகட்டும்//
ஆமீன்!
கவலை வேண்டாம் ஐயா வெற்றியின் இலக்கை நோக்கி நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம் இறைவனின் ஆசியுடன் விழா இனிதே நடைபெறும் நேரில் சந்திப்போம்
ReplyDeleteஐயா..என்ன இது...
ReplyDeleteநாம கலக்குறோம்...
சென்னை சந்திப்பு இனி எல்லாருக்கும் ஒரு அடையாளம்...
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
பதிவர் சந்திப்பு சிறப்பாக நிச்சயம் நடக்கும்
ReplyDeleteசிறிதும் ஐயமில்லை
அவர்கள் அதை எழுதி இருக்கவேண்டியதில்லை
அவர்கள் எழுதி விட்டார்கள் என்பதற்காக
அதை இவ்வளவு பெரிதுபடுத்தி இருக்கவேண்டியதில்லை
என்பது என் கருத்து
ஞாயிறு மாலைவரை அனைவரின் சிந்தனையும்
நேர்மறையானதாகவே இருக்கட்டும்
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
tha.ma 11
ReplyDelete
Deleteநன்றி!அன்பரே!
சந்திப்பு சிறப்பாய் நடக்கும்.... :)
ReplyDeleteஎல்லாம் நன்மைக்கே! இந்த சிறு சலசலப்பு பதிவர்கள் மத்தியில் இந்த விழாவை இன்னும் பிரபல்யப்படுத்தியுள்ளது. எனவே நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே அமையும். கவலை வேண்டாம்.
ReplyDelete
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
இச்சந்திப்பை நாளை வரலாறுகள் பேசும்...
ReplyDeleteகலக்கத்த தூக்கி கடாசுங்க புலவரே....
ReplyDeleteபுலவர்னாலே பெருமைகளை எடுத்து வுடனும்..... இப்படி கலங்கி நிக்கப்படாது.,
சந்திப்பு நிச்சயம் நல்லமுறையில் நடக்குமாக...!
ஆகவேண்டியத பாருங்க....
அனைத்தும் நன்மைக்கே! விழா நிச்சயம் சிறப்பாக நடக்கும்.
ReplyDelete
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
நல்லதே எண்ணித்தொடங்கினோம்
ReplyDeleteஅல்லது நடக்குமோ உம் ஆசியிருக்கையில்
பொல்லாங்கு பேசுவோரை புறந்தள்ளி
வெல்வோம் எனப் புறப்பட்டதே இந்தப்படை!
கவலுறற்க!
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
அன்பு அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஉங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுட்டுமாக...
நீங்க எதிர்ப்பார்த்ததை விடவும் விழா சூப்பரா நடக்கும் (இன்ஷா அல்லாஹ்). கவலைய விடுங்க...என் மனமார்ந்த பிரார்த்தனைகள்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
பலரின் முயற்சியின் தோல்வியில் உங்கள் அனைவரின் வெற்றி ஆரம்பமாகிறது.கலந்துரையாடலும்,சந்திப்பும் மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDelete
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
பதிவர் திருவிழா ஒரு சாதனை நிகழ்வாக அமையும்.
ReplyDeleteஅனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிடும் அளவுக்கு விழா சிறப்பாக நடக்கும் என்பது என் நம்பிக்கை.
புலவர் ஐயா மனம் கலங்க வேண்டியதில்லை.
வாழ்த்துகள்.
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
புலவர் இராமாநுசம் அவர்களே, பதிவர் திருவிழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்! தங்களைப் போன்ற சான்றோர் இருக்கும் வலைப்பதிவுகளில் சக எழுத்தாளராக நாங்களும் இருக்கின்றோம் என்பதே எங்களுக்கு பெருமை!! தங்கள் பணி சிறக்கட்டும்! நன்றி!
ReplyDeleteஎங்களைப் போன்றோர் (வெளிநாட்டில் வசிப்போர்) ஊரில் இருக்கவில்லையே என்று ஏங்கச் செய்து விட்டீர்கள் இந்த பதிவர் திருவிழா மூலம்!!
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
ஸலாம் சகோ.புலவர் சா ராமானுசம்,
ReplyDeleteஇரண்டு நாட்களுக்கு முன்னர் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம் பலருக்கும் உள்ளத்தின் ஓரத்தில் இருந்தது உண்மைதான்..! அப்படி இனி ஏதும் இடர்ப்பாடு ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வூட்டப்பட்ட நிலையில், தற்போது இறைவன் அருளால், அனைத்தும் சரியாக அமைந்து, அனைவரும் பிறர்நலன் பேணி ஒத்துழைத்து, நீங்கள் எதிரபார்த்ததை விட பன்மடங்கு சிறப்பாக, பதிவர் மாநாடு நடக்கப்போகிறது பாருங்கள்..! அதன் ஊக்கமே இக்கவிதை..! நன்றி சகோ..!
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
//நடந்தது நடந்ததாய் போகட்டும்-இனி
ReplyDeleteநடப்பது நலமாய் ஆகட்டும்
கடந்ததை பேசிட வேண்டாமே-மன
காயத்தை மேலும் தூண்டாமே
//
மறப்போம் மன்னிப்போம் என்பது தான் நாம் அனைவருக்கும் இப்போது தேவையான ஒன்று !!!
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டதாக எண்ணி, எல்லாம் நன்மைக்கே என்று ஒன்றிணைவோம் !!!
மூத்தோர் மனம் வெந்தால் அது இளையோருக்கு நல்லதும் அல்ல, அழகுமல்ல என்பதால் அனைவரும் பொறுப்புடன் நடந்துக் கொள்வோமாக !!!
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
விழா சிறக்க வாழத்துக்கள்.
ReplyDelete
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள். பதிவுலகில் எல்லோரும் சந்திப்பு தொடர்பாக இடுகையிட்டதால் சந்திப்பு பற்றி பலர் அறிந்துள்ளார்கள் இதனால் கூடுதலாக பதிர்வர்கள் வந்து பதிவு சிறக்கும்.
ReplyDelete
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
விழா சிறப்புற நடக்க வாழ்த்துகள்....
ReplyDeleteநிச்சயம் நன்றாகவே நடக்கும். கவலைப்படேல்....
இரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
Deleteஅதன் விளைவே இக்கவிதை! நன்றி
நாளை சந்திப்போம் நண்பரே...
ReplyDelete
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் ஐயா (TM 24)
ReplyDelete
Deleteஇரண்டு நாட்களாய் இனமறியாத ஏதோ ஒரு கலக்கம்
அதன் விளைவே இக்கவிதை! நன்றி
அன்பின் ஐயா,
ReplyDeleteஉங்கள் உடலும் மனமும் என்றும் அமைதியுடன் மகிழ்வுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்....
மனம் சோர்ந்து போக காரணமாக இருப்போரை மனம் கனிந்து மன்னித்துவிட்டால் நம் மனமும் அமைதியாகிவிடும்...
சோகத்தில் சோர்ந்து உட்கார்ந்துவிடாமல் இதோ உங்கள் மனதை நீங்களே மன்னித்து, கவிதை எழுதி அமைதியாக்கிய இந்த உங்கள் மனப்பக்குவம் எல்லோருக்குமே இருந்துவிட்டால் பிரச்சனை என்ற பெயருக்கே இடமிருக்காது...
எல்லாம் நல்லபடி நடக்க இறைவனிடம் என் வேண்டுதல் தொடரும் ஐயா...
பதிவர் சந்திப்பு சிறப்புடன் நடக்க அன்பு வாழ்த்துகள்...
Deleteஅன்பின் இனிய மகளே!
நலமா! என்ன காரணமோ, நீண்டநாள் காண
இயலவில்லை! நாளை பதிவர் சந்திப்புக்காண ஏற்பாடுகளை கவனித்து விட்டு
இப்போதுதான் வீடு வந்தேன்.
பிற பின்னர் எழுதுகிறேன்.
உங்கள் வயதுக்கு இந்த அளவுக்கு உண்டான முயற்சியில் ஈடுபட்டதற்கே பாராட்டு சொல்ல வேண்டும். வயது அதிகமாக சகிப்புத்தன்மை அதிகமாகத்தானே இருக்க வேண்டும். விழா சிறக்க வாழ்த்துகள். இந்த விழாவை செந்தில் முதல் பலரும் பல ஆண்டுகள் சொல்லிக் கொண்டுருந்தார்கள். ஆனால் அவர் தற்போது மலேசியாவில் இருக்க உங்களைப் போன்றவர்கள் எடுத்து நடத்துவது எனக்கு ஆச்சரியமே. இது ஒரு விதமான அனுபவம். கைக்காசு, அலைச்சல், தொடர்ச்சியான அலைபேசி உரையாடல் போன்ற அத்தனையும் தாண்டி விழா முடிந்ததும் உங்களுக்கு ஒரு விதமான மகிழ்ச்சி மனதில் வரும். அதைப்பற்றி அப்போது நெகிழ்வோடு எழுதுவீர்கள், காத்துருக்கின்றேன்.
ReplyDeleteஎல்லாம் இனிதே நடக்கும் சார்! :-)
ReplyDeleteபதிவர் சந்திப்பில் தாங்கள் பெற்ற மகிழ்சிச் செய்தியை
ReplyDeleteஅறிய ஆவலுடன் இந்த அன்பு உள்ளமும் காத்திருக்கின்றது
ஐயா .வாழ்த்துக்கள் .
Nice article, good information and write about more articles about it.
ReplyDeleteKeep it up
blogger tutorial in tamil
quotes in tamil