Friday, August 31, 2012

உறவுகளே! ஒரு முக்கிய அறிவிப்பு

      உறவுகளே
                               வணக்கம்
    
        நேற்று ஒருகருத்தை என் வலையில் பதிவிட்டிருந்தேன் அதை
திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் எனவே, இனி ஆதரித்தோ, எதிர்த்தோ
யாரும் எழுத வேண்டாம் என்பதை மெத்தப் பணிவன்போடு தெரிவித்துக்
கொள்கிறேன்

        ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் தாழ்வு, என
நான் உணர்ந்தவன் மட்டுமல்ல வகுப்பறையில் மாணவருக்குப் பாடம
நடத்தியவன்

        இன்று உள்ள சூழ் நிலை அதற்கு ஏற்றதாகயில்லை என்பது தெரிகிறது
நமக்கென ஒரு பாதுகாப்புத் தேவை என்றுதான் நான் கருதினேன்!அது
தவிர,வேறு, ஏதும் நோக்கமில்லை.

        ஆனால என் முயற்சி,  உள்ள ஒற்றுமைக்கும் ஊறு விளைவித்து விடுமோ  என்ற அச்சம் ஏற்படுவதாலும், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற அவப் பெயர் எனக்கு வந்துவிடக்கூடாது
என்பதாலும், நான் இந்த கருத்தை எழுத நேரிட்டது. மனிக்கவும்!

        நான், என்னதான் வயதில் மூத்தவனாக இருந்தாலும் வலையுலகில்
இளையோன் தானே

         ஆகவே, இப்போதும் சொல்கிறேன்! தங்கம் செய்யாததைக் கூட சங்கம்
செய்யும் என்பதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன என்ற காரணத்
தினால் மூத்தப் பதிவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து சங்கப் பதிவினை செய்ய முன்வர வேண்டுமென , விரும்பி, வேண்டி, கேட்டுக்
கொள்கிறேன்

                                                 நன்றி


                                                                                புலவர் சா இராமாநுசம்

          

19 comments:

  1. தாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.தங்கள் நோக்கம் உயர்ந்தது.

    ReplyDelete
  2. தங்களின் கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது மிகவும் வருத்தத்தை தருகிறது...

    மூத்த பதிவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செய்ய வேண்டும்...

    /// தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும் ///

    அனைவரும் அறிய வேண்டும்... நன்றி ஐயா...

    ReplyDelete
  3. இந்தப் பதிவின் மூலம் ஏதோ பிரச்ச்னையிலிருந்து விடுபட விரும்புகிறீர்கள் என்று புலனாகிறது...
    படிக்க தவறிய பதிவுகளைப் படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  4. நூறு பேர் ஒற்றுமையாக இருப்பதே சிரமமான காரியம். மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே குரலெழுப்புதல் சாத்தியமற்றது. எந்த ஒரு நல்ல முயற்சியைக் கண்டும் தன்னால் செய்ய இயலாத வறட்டுத் தவளைகள் கத்திக் கொண்டுதான் இருக்கும் ஐயா.

    ReplyDelete
  5. உங்கள் அனுபவம் தெரிகிறது தெறிக்கிறது... அய்யா நீங்கள் முன் நின்று நடத்தி வெற்றியைத் தேடித் தந்த சந்திப்பு இது... போற்றுவோர் போற்றட்டும் தோற்றுவோர் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே என்பதை அறியாதவரா நீங்கள்

    ReplyDelete
  6. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நிச்சயமாக பதிவர்கள் என்றொரு பெரிய ஆழமரம் விரைவில் உருவாகும்,,

    ஒன்றாக சேர்ந்து என்ன செய்ய போகீறீர்கள் என்ற கேள்விக்கு விடையை கேட்பவர்கள் அப்போது புரிந்துகொள்வார்கள்,,

    முயற்சி என்றும் பயனளிக்கும்,,

    தளராமல் முயற்சி செய்வோம்,,

    ReplyDelete
  8. இதை விதைகளான எடுத்துக்கொள்வோம்...

    விரைவில் விருட்சமாக எழும்...

    ReplyDelete
  9. //தங்கம் செய்யாததைக் கூட சங்கம்
    செய்யும் //!!!........

    இதில் எந்தவிதமான ஐயமும் கிடையாது .
    இது ஒரு உறுதியான எண்ணம் .தங்கள்
    அனுபவம் என்றோ ஒரு நாள் வெற்றிப் படிகளில்
    நிற்கும்போது நிட்சயம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் படும் .
    கவலை வேண்டாம் .தங்கள் கடமை தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  10. காரணம் இல்லாமல் நீங்கள் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டீர்கள்.இருப்பினும் காலம் வரும் நல்ல முடிவெடுக்க. காத்திருப்போம் அதுவரை.

    ReplyDelete
  11. புரிந்து கொண்டோம் ஐயா!

    ReplyDelete
  12. ஐயாவை வருத்தப்பட வைத்த நிகழ்வுக்கு வருத்தப்படுகிறேன்!
    ஒன்றுபடுவோம்! உயர்வோம்!

    இன்று என் தளத்தில்
    ருத்திராட்சம் சில தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

    ReplyDelete
  13. விடுங்க ஐயா..இதுக்கெல்லாம் கவலைப் பட்டால் எப்படி? நம்மால் முடிந்ததை செய்வோம்.. வாருங்கள்..

    ReplyDelete
  14. சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தது பலருக்கு வயிற்றெரிச்சல்!
    கவலைப்ப்படாதிர்கள்.நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  15. அன்புள்ள புலவர் ஐயா அவர்களுக்கு, வணக்கங்கள் கோடி.
    ஒரு வாரம் கழித்து உங்களுக்கு நன்றி சொல்லிக் கடிதம் எழுதுவது பற்றி தவறாக நினைக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
    விழாவில் உங்களை சந்தித்தது பெரிய பாக்கியம்! தமிழ் எழுத்துக்கள் தெரியும் என்ற ஒரே காரணத்தினால் பதிவு எழுத ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் புலமை முன் நிற்கக்கூட தகுதி இல்லாதவள். உங்களிடமிருந்து நிறைய பணிவும் தன்னடக்கமும் கற்றுக் கொண்டேன் ஐயா. புகழுரை அல்ல இது. மனதில் இருந்து வருவது.
    உங்கள் மனது வேதனை அடைந்தது அறிந்து உள்ளம் தவிக்கிறது.
    நீங்கள் போட்ட விதை நாளை கட்டாய ஆலமரமாகி வேரூன்றி நிற்கும் ஐயா, கவலைப்படதீர்கள்.
    அன்புடன்,
    ரஞ்ஜனி
    ranjaninarayanan.wordpress.com

    ReplyDelete
  16. கட்டாயம் ஆலமரமாகி.... என்று வாசிக்கவும்.
    தவறுக்கு மனிக்கவும்.
    அன்புடன்
    ரஞ்ஜனி

    ReplyDelete