Monday, August 20, 2012

பதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி!நன்றி!

என்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான்
    எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே
நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும்
    நலம்பெற பல்வேறு வழிகள் நாட
தன்னலம் இல்லாது ஓடி வந்தார்-இன்று
    தடையற்று ஆதரவு மிகவே தந்தார்
அன்னவர் கரம்பற்றி போற்று கின்றேன்-அவர்
    அன்புக்கு அடிமைநான் சாற்று கின்றேன்

விருந்துண்டு வாழ்கின்ற வயதாஇல்லை!-நாளும்
    
விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
    
மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை சங்கப் பதிவை- பற்றி
     
எழுதினேன்! வலைதன்னில்! எனினும்முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
    
பொறுப்பேற்பீர்! தக்கோரே! வருக! வருக!

தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
     
தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவை
    
சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-நல்
    
அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பூர்-உம்
    
சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்

தன்நலமே இல்லாமல் சேவை செய்ய-கொள்கைத்
    
தடுமாற்றம் இல்லாமல் அன்பைப் பெய்ய
பொன்மனமே கொண்டவரே வருக! வருக-நல்
    
பொதுநலமே சேவையெனத் தருக! தருக!
எத்தனைப்பேர் வருவார்கள் தெரிய வில்லை-ஆனால்
    
ஏற்றயிடம் உறுதிசெய்தே விட்டோம் ஒல்லை
சித்தமதைவருகைதனைச் செப்ப வேண்டும்!-உடன்
    
செயல்பட அதுவொன்றே எம்மைத் தூண்டும்!

                                       
புலவர் சா இராமாநுசம்

32 comments:

  1. ஆஹா... அனைத்து நண்பர்களுக்கும் அழகுத் தமிழில் நீங்கள் வைத்திருக்கும் வேண்டுகோள் அருமை. எல்லோரின் ஒத்துழைப்புடன் விழா சிறக்கட்டும்.

    ReplyDelete
    Replies


    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. நிச்சயம் இந்த பதிவர் சந்திப்பு வெற்றி சந்திப்பாக அமையும். அதற்கு வித்திட்ட தங்களுக்கும் தங்கள் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
    Replies

    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete


    2. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. ஆஹா... அனைத்து நண்பர்களுக்கும் அழகுத் தமிழில் நீங்கள் வைத்திருக்கும் வேண்டுகோள் அருமை. எல்லோரின் ஒத்துழைப்புடன் விழா சிறக்கட்டும்.உபயம்-கணேஷ்

    ReplyDelete
    Replies


    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete


    2. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. அற்புதமான வரிகளால் அனைவரையும் அழைக்கும் தங்கள் அன்பும் அரவணைப்பும் காணவே அனைவரும் அணி திரண்டு வருவார்கள் ஐயா.

    ReplyDelete
    Replies


    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. சிறப்பான வேண்டுகோள் ஐயா...

    விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    நன்றி… (TM 5)

    ReplyDelete
    Replies


    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. பிள்ளையார் சுழி போட்டது நீங்கள்.உங்கள் தலைமையில் இளைஞர் படை வீறு கொண்டு எழுந்து பீடு நடை போடுகிறது!

    ReplyDelete
  7. விதைத்தவர் விளைச்சளைக் காணக் கொள்ளும் ஆனந்தம்
    தங்கள் கவிதை வரிகளில்..
    சிறப்பாக பதிவர் சந்திப்பை நடத்தி முடித்து
    ஒரு புதிய சரித்திரம் படைப்போம்

    ReplyDelete
    Replies

    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. பதிவர்களோடு ஒரு தினத்தை கழிக்க போகிறோம் என்பதை நினைத்தால் இனிமையாக உள்ளது அய்யா ...
    நன்றி

    ReplyDelete
    Replies


    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. //ஆஹா... அனைத்து நண்பர்களுக்கும் அழகுத் தமிழில் நீங்கள் வைத்திருக்கும் வேண்டுகோள் அருமை. எல்லோரின் ஒத்துழைப்புடன் விழா சிறக்கட்டும்.//

    ReplyDelete
    Replies


    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  10. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
    Replies


    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  11. அனைத்து பதிவுலக நண்பர்கள் துணையுடன் பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெறும்

    ReplyDelete
    Replies


    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete

  12. தன்நலமே இல்லாமல் சேவை செய்ய-கொள்கைத்
    தடுமாற்றம் இல்லாமல் அன்பைப் பெய்ய
    பொன்மனமே கொண்டவரே வருக! வருக-நல்
    பொதுநலமே சேவையெனத் தருக! தருக!

    நானும் அழைக்கிறேன்.
    வருக! வருக!

    ReplyDelete
    Replies


    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  13. நீங்கள் இட்ட விதை விருட்சமானது இன்று. அதற்கு துளிகளாய் தண்ணீர் இட்ட திருப்தி எங்களுக்கு.

    ReplyDelete
    Replies


    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete


  14. மிக்க நன்றி!

    ReplyDelete
  15. பதிவர் மாநாட்டுக்காக உழைக்கும் தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ! இந்த முறை என்னால் கலந்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது வருத்தம் தருகின்றது !!!

    :(

    ReplyDelete
    Replies


    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  16. தங்கள் பணிக்கு தலை வணங்கி ஒத்துழைப்பு நல்குவோம்.விழா தங்கள் எண்ணப்படி சிறப்புற நடைபெறும்.
    த.ம 10

    ReplyDelete
    Replies



    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete