Friday, August 17, 2012

அன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது.!



அன்பின் இனிய உறவுகளே!

                     வணக்கம்!

        அன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது.
நேற்று,பதிவர் சந்திப்புக்கான விழாவிற்கு காவல் துறையின் ஒப்புதல் பெற,
நானும் கவிஞர் மதுமதியும்,நண்பர் செயக்குமார் அவர்களும் சென்று
ஒப்புதல் பெற்றோம்!
         இதில், மிகவும் மகிழ்ச்சியான செய்தி, நாங்கள் கொடுத்த
மனுவில், தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம் என்ற அமைப்பின் சார்பாக
என்றே குறிப்பிட்டு, கையொப்பமிட்டுக் கொடுத்தோம்
           ஆக, முதற்கண் நமக்கென ஓர் அமைப்பு காவல் துறையில்
தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம் என்ற பெயரில் பதிவாகி விட்டது.
         இனி, இதனை முறைப்படுத்துவதும், செயல்படுத்துவதும்
வருகைதருகின்ற உங்கள்  கையில்.....!!!
            இதுபற்றி நான் எட்டு திங்களுக்கு முன் எழுதிய பதிவினை
மீள்பதிவாக கீழே வெளியிட்டுள்ளேன் அதுபோது, ஐம்பதிற்கும் மேற்பட்டோர்
ஆதரவு தெரிவித்திருந்தனர்
                                             அன்புடன்
                                           சா இராமாநுசம்

பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?

          அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
வணக்கம்!
          விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல
வலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில்
அரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது
        அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை
சுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும்
முற்படலாம். அதனால்  சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை
எதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும்.
 
    இதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி
சட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில்
பதிவு செய்யவேண்டும்
        தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும்
என்று சொல்வார்கள்
       நீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும்
தலைவனாகவும்  நான் பணியாற்றி உள்ளதால்
இவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை
எப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்
 
       உலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்
         -----------------------------------------------------------------------------
 என்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப)
  பெயரிலோ செயல்படலாம்
  
          முதற்கண், இக்கருத்தை ஏற்றுச் செயல்படலாம்,
அமைப்பை உருவாக்கலாம் என்று கருதுகின்றவர்கள்  இப் பதிவின்
கீழ் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
         நிறைவாக நீங்கள் ஆதரவு தெரிவித்தால் எப்படி
அமைக்கலாம் என்பதை விரிவாக ஆராயலாம்
        முதலில், அமைப்பு  வேண்டுமா வேண்டாம
 என்பதைத் தெளிவுப் படுத்துங்கள்
            
                           பிற பின்னர்
 





49 comments:

  1. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும். அழகாகச் சொல்லியிருக்கீங்க ஐயா. நான் என்றும் உங்களின் பக்கம்தான். காவல் துறையின் அனுமதி கிடைத்தது மிக்க மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அழகான ஒரு முயற்சிய ஐயா..... வாழ்த்துக்கள்
    சென்னையில் ஒரு சுனாமி வருகின்ற ஞாயிறில்........

    ReplyDelete
  3. வியப்பான விடயம் .வாழ்த்துக்கள் ஐயா தங்கள் எண்ணம் எதுவோ
    அவை சிறப்பாக அமைய .

    ReplyDelete
  4. சிறப்பாய் செய்வோம் ஐயா..

    ReplyDelete
  5. நல்ல யோசனை. அவசியம் பதிவர்களுக்கு ஒரு பதிவு செய்யப்பட சங்கம் தேவை. உங்கள் கருத்தோடு நான் உடன்படுகின்றேன்.

    ReplyDelete
  6. தங்கள் எண்ணத்தில் மொட்டாக இருந்தது
    தற்போது மலர்ந்து மணம் வீசப்போவது
    எங்களுக்கும் அதிக மகிழ்வளிக்கிறது
    சங்கம் தொட்ர்ந்து சிறப்பாக செயல்பட
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. கண்டிப்பாக ஒரு சங்கம் வேண்டும் ஐயா.
    அதுவும் நீங்கள் குறிப்பிட்டபடி
    ' உலக தமிழ் வலைப்பதிவர்கள் சங்கம் '
    என்ற அழகுத் தமிழ் பெயரிலேயே !
    ஆளாளுக்கு விருதுகள் தருவதைத் தவிர்த்து ,
    புத்தக வெளியீட்டு விழாக்கள் மற்றும்
    சந்திப்புகள் நடத்தி , மிக முக்கியமாக தரமற்ற பதிவுகள் ஒதுக்கி
    [ ரிப்போர்ட் என்னும் பட்டன் வைக்க வேண்டும் அனைத்துப் பதிவின் கீழும் ]]
    செவ்வனே செயலாற்ற ஓர் அமைப்பு அத்தியாவச அவசியமே.
    தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி. விழாக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  8. சிறப்பாக வழி நடப்போம்....

    ReplyDelete
  9. ஐயாவின் ஆசியுடன் சிறப்பாக நடைபெறும் ஐயா.

    ReplyDelete
  10. சந்தோஷம் உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்... விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... நன்றி ஐயா... (TM 7)

    ReplyDelete
  12. சங்க தலைவர் நீங்க சொன்ன சரிங்க ...

    ReplyDelete
  13. அருமை ஐயா மகிழ்ச்சி

    ReplyDelete



  14. மிக்க நன்றி!

    ReplyDelete
  15. ப.சீனிவாசன் என்ற அந்த காவலர் நமக்கு மகிழச்சியுடன் வழ்த்துக்கள் சொன்னதயும் இங்கு நினைவு படுத்துகிறேன் ஐயா.....:)

    ReplyDelete
  16. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

    சங்கம் சிறப்பாக செயல்பட
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. விழா வெற்றிகரமாக நடைபெற மனமார்ந்த இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. கனவு மெய்ப்படுகிறது!எண்ணிய முடிகிறது.

    ReplyDelete
  19. நல்ல கனவு
    நினைவாகி வருதல் கண்டு
    வாழ்த்தி வணங்குகிறேன்.
    பலரின் கைகள் சேர்ந்து தட்டுவதால்
    ஓசை உலகத் தமிழ் வலைஞர்களின்
    காதுகளில் தேனாய்ப் பாய்கிறது.

    வளரட்டும். வாழ்க!

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ஐயா!.இலங்கையில் இருந்தாலும் இச்செய்தி எனக்கும் இனிப்பே!வாழ்த்துக்கள்.!

    இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

    ReplyDelete


  21. மிக்க நன்றி

    ReplyDelete
  22. விழா சிறப்புடன் நடை பெற வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  23. நிச்சயமாக ஜயா உங்கள் கனவு மெய்ப்படும்.
    என் ஆதரவு எப்பவும் உண்டு

    ReplyDelete