ஆடுவோமே பள்ளுப் பாடு வோமே-மீண்டும்
ஆனந்த சுதந்திம் தேடு வோமே
எங்கும் சுதந்திரம் என்பது போச்சே-ஆனால்
எதிலும் சுயநலம் என்பதே ஆச்சே
(ஆடுவோமே)
சங்கு கொண்டே இதனை ஊதுவோமே-நம்
சமுதாயர்ம் அறிய எடுத்து ஓதுவோமே
இங்குக் காணும் அரிய காட்சியாமே-ஏக
இந்திய நாடே நல்ல சாட்சியாமே
(ஆடுவோமே)
ஏழையின் வாழ்விலே ஏற்ற மில்லை-சாதி
ஏற்றத் தாழ்விலே மாற்ற மில்லை
பேழையுள் உறங்கும் நோட்டுக் கட்டே-விலைப்
பேசியே வாங்கும் ஓட்டு சீட்டே
(ஆடுவோமே)
ஊற்றாக ஓடுதாம் ஊழல் இங்கே-அதை
ஒழிப்பதாய் சொல்வாரும் பெறுவார் பங்கே
மாற்றமே இல்லாது இன்றும் என்றும்-இதை
மாற்றிட வழிதானே இல்லை ஒன்றும்
(ஆடுவோமே)
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் அய்யா ...
ReplyDeleteபாரதியார் மன்னிக்க அவசியமில்லை ..
அவர் எழுத வேண்டியதை அவரின் இடத்தில இருந்து தாங்கள் எழுதி இருக்கீங்க ..
நன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
Deleteநல்ல கவிதை ஐயா (தம 2)
ReplyDeleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
Deleteநல்ல வரிகள் ஐயா... (TM 3)
ReplyDeleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
பாரதியார் இருந்திருந்தால்
ReplyDeleteஇப்படித்தான் நிச்சயம் எழுதி இருப்பார்
சுதந்திர தின சிறப்புக்கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்
அருமை .
ReplyDeleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
இன்றைய இந்தியாவைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்.பாரதி மன்னிப்பதா?பாராட்டித்தான் இருப்பார் இன்றிருந்தால்.
ReplyDeleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
நல்ல கவிதை !
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள் !
நன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
இன்றைய தினத்துக்கேற்ற கவிதை ஐயா.சுதந்திர தின வாழ்த்துக்கள் !
ReplyDeleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கவிதை .. பாரதி இன்று உயிருடன் இருந்தால் இப்படித் தான் பாடியிருக்க வேண்டியிருக்கும் .
ReplyDeleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
நன்றி!!
வெள்ளைக் காரர்களிடம் இருந்த நாடு கொள்ளைக் காரர்களிடம் மாட்டிக்கொண்டதை எடுத்தியம்பும் கவிதை.பாரதி இருந்தாலும் இக்கருத்தையே வெளிப்படுத்தி இருப்பார்.
ReplyDelete
Deleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
த.ம. 8
ReplyDelete
Deleteநன்றி!
அய்யா
ReplyDeleteஏன் மன்னிப்பு
எம் முறுக்கு மீசை பாரதியார் இந்த காலத்தில் இருந்திருதால்
இப்படித்தான் எழுதி இருப்பார்
மெய்யை உறைக்கும்படி சொன்னீர்கள் ஐய்யா
Deleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
நன்றி அய்யா..பாரதியின் தங்க வரிகள் தங்கள் தளத்தில் வாசிக்க கிடைத்தமைக்கு நன்றி...
ReplyDelete
Deleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
//ஆடுவோமே பள்ளுப் பாடு வோமே-மீண்டும்
ReplyDeleteஆனந்த சுதந்திம் தேடு வோமே//
உண்மைதான் மீண்டும் ஒரு சுதந்திரத்தைத் தேடவேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம். உண்மை நிலையை எடுத்துக்காட்டும் கவிதையைத் தந்தமைக்கு நன்றி!
திரு.இராமாநுசம் அவர்களுக்கு,
ReplyDeleteநல்ல வரிகள்...
இன்றைய ஆதங்கம் உங்களது வார்த்தை வரிகளில் வருகிறது..
ஒரு சந்தேகம்-வெண்பாவில் நான்காம் ஒட்டுச் சீர், இரண்டாவது வரியில் வருவதுதான் மரபு என்று நினைத்தேன்; மூன்றாவது வரியில் ஒட்டுச் சீர், ஏற்றுக் கொள்ளப் பட்ட வெண்பா வடிவமா?
நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால் இந்தக் கேள்வி.. :))
நன்றி.
Deleteவெண்பா இலக்கணப்படி, தனிச் சொல் இரண்டாவதுவரியில் வருவதுதான் இலக்கணமாகும்
அது, மூன்றாவது வரியில் வருவது தவறாகும்.
இன்றைய நிலையை எடுத்து காட்டும் கவிதை வரிகள் ஐயா
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள்
பாரதி பாட்டு பாரதிக்கே சமர்ப்பணமாக.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் ஐயா..
ReplyDelete
Deleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
சிறப்பு கவிதை அருமை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html
Deleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
பாரதியார் பெருமைப்படுவார்
ReplyDelete
Deleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாரதியார் இன்னும் கோபம் காட்டி எழுதியிருப்பார். ஆகவே தாங்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்பது என் கருத்து.
ReplyDelete
Deleteநன்றி! பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
ஐயா வணக்கம்,
ReplyDeleteபாரதியார் எதற்கு மன்னிக்க வேண்டும் ! இது போன்ற ஒரு கவிதையைப் பார்த்து பெருமையில் மீசை துடிக்காதா அந்த முண்டாசுக் கவிஞனுக்கு ! சிறு புல்லைப் போன்ற என் போன்றவர்களும் ' உயிர்வாழ ' தாங்கள் தொடர்ந்து பெய்யெனப் பெய்ய வேண்டும் தமிழ் மழையை !