முதுமையிலே மூன்றுநாடுகள் சுற்றி வந்தேன்-ஆனால்
முதுகுவலி, கால்வலியும் பெற்று நொந்தேன்
மதுவருந்தி விட்டவன்போல் கால்கள் தள்ள-எனினும்
மனதினிலே உற்சாகம் மிகவும் கொள்ள
புதுமைமிகு காட்சிபல கண்டும் வந்தேன்-நல்
புத்துணர்வும் புதுத்தெம்பும் என்னுள் தந்தேன்
இதுவரையில் இப்படியோர் இன்பம் துன்பம்-வாழ்வில்
இணைந்துவரும் சூழ்நிலையை பெற்ற தில்லை
விண்முட்ட முகில்தவழ அடுக்கு வீடே-மேலும்
விரிவாக,ஆங்காங்கே பசுமைக் காடே
கண்கொட்ட இயலாத காணும் காட்சி-மனக்
கற்பனைக்கும் எட்டாத மிகுந்த மாட்சி
பண்பட்ட மக்களென பழக்க வழக்கம்-அதைப்
பார்போரின் கவனத்தை தன்பால் ஈர்க்கும்
புண்பட்டேன்! நம்நாட்டை எண்ணிப் பார்த்தேன்-ஏனோ
புலம்பத்தான் இயன்றது! நெஞ்சம் வேர்த்தேன்
சாலைகளோ தூய்மைதனை எடுத்துச் சொல்ல-ஏதும்
சத்தமின்றி வாகனங்கள் நின்றுச் செல்ல
ஆலைகளும் மாசின்றி இயங்கக் கண்டேன்-அந்த
அழகுதனை மனக்கண்ணில் படமாய்க் கொண்டேன்
காலையிலே, பரபரப்பு! பணிக்குச் செல்வோர்-மிக
கண்ணியமாய் வரிசையிலே நின்று கொள்வர்
வேலையின்றி இருப்பாரைக் காணல் அரிதே-சாலை
விதிகளையே மதிக்கின்ற பண்புப் பெரிதே
( தொடரும் )
அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்.
சென்னையில் பதிவர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகள்
சிறப்பாக நடைபெற, ஆயத்தப் பணிகள் செய்யவேண்டி
இருப்பதால், இனி, என் வலையில், என்னுடைய பதிவுகள்,
பதிவர்கள் சந்திப்பு முடிந்த பிறகே வெளிவரும் என்பதை
அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்
பதிவர் சந்திப்புக்கு அனைவரும் வருகை தருமாறும், ஒத்துழைப்பு நல்குமாறும், விரும்பி வேண்டிக்
கேட்டுக்கொள்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
வெளிநாட்டுப் பயணம் பற்றிய தங்கள் கவி அருமை...
ReplyDeleteபதிவர் சந்திப்பை ஆவலோடு எதிர் நோக்கி
மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
santhippukku vaazththukkal
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
அயல்நாட்டு அனுபவ பதிவு அருமை ஐயா.
ReplyDeletewelcome back !
மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
உங்களை சிங்கையில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
வெகு நாட்களுக்கு பிறகு வலையில் நல்ல அனுபவ கவிதையோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி (TM 3)
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
வணக்கம் ஐயா நலந்தானா?...அருமையான வெளிநாட்டுப்
ReplyDeleteபயணம் முடித்து சென்றுள்ளீர்கள் அதன் அனுபவங்கள்
தங்கள் மனதைக் கவர்ந்த விதத்தைக் கவிதையாகத் தந்த
விதம் அருமை!...வாழ்த்துக்கள் .விரைந்து வந்து மீண்டும்
நலமாக கவிதை மழை தொடரட்டும்.மிக்க நன்றி ஐயா
பகிர்வுக்கு .
மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
உலகம் சுற்றும் வாலிபரான தங்களை முதுமை என்ன செய்யும்?தோற்றோடிப் போகும்!
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா.
மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
வாங்க ஐயா
ReplyDeleteஉங்கள் பயணம் சிற்றப்பாய் அமைத்து இருக்கும்
கவிதையில் உங்கள் பயணத்தை உணர முடிந்தது
சற்று இளைப்பாறிவிட்டு விட்டு தொடருங்கள் பதிவர் சந்துப்பு வேலைகளை
மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
அன்புடைய புலவர் பெருந்தகையே,
ReplyDeleteநலமா?
சுற்றுப் பயணம் இனிதாக நடந்தேறியது மகிழ்ச்சி..
சந்திப்போம் ஐயா சென்னையில்...
காத்திருக்கிறேன் அத்தருணத்திற்காக ..
மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
பண்பட்ட மக்களென பழக்க வழக்கம்-அதைப்
ReplyDeleteபார்போரின் கவனத்தை தன்பால் ஈர்க்கும்
புண்பட்டேன்! நம்நாட்டை எண்ணிப் பார்த்தேன்-ஏனோ
புலம்பத்தான் இயன்றது! நெஞ்சம் வேர்த்தேன்
அருமையாய் புலம்பியிருக்கிறீர்கள் புலவர் ஐயா.
கவிதையில் எந்தெந்த நாடு என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.
நன்றிங்க ஐயா.
மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
நானும் ஆச்சரியம் அடைந்தேன்....
ReplyDeleteதங்களுக்கு கடவுள் இன்னும் நல்ல ஆரோக்கியத்தை தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
பதிவர் சந்திப்பில் சந்திப்போம்
இதுவரை கவிதையில் எந்த நாடு எனக் குறிப்பிடாதபோதும், சிங்கையாக இருக்கலாம் என எண்ணிப் பின்னூட்டங்கள் படித்த போது , கோவி. கண்ணன் - புதிரை விடுவித்தார்.
ReplyDeleteஅருமையாக, ஆற்றொழுக்குப் போல் தங்கள் அனுபவக் கவிதை
இனிய பயணத்தின் அருமை வரிகள் ஐயா !
ReplyDeleteநன்றி.(TM 9)
மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
பயண கவிதை .
ReplyDeleteஅருமை.
மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
சிறப்பான பயணக்கவிதை
ReplyDeleteதங்கள் தளம் தற்போது மிக அழகாக இருக்கின்றது ஜயா
அயல்நாட்டு சுற்றுப்பயணத்தை கவிதையால் சொல்லி அசத்திவிட்டீர்கள்..அருமை ஐயா..
ReplyDeleteபயண அனுபவங்களை விரிவாகப் பகிருங்கள் புலவர் ஐயா. பதிவர் சந்திப்பு மகிழ்வுடன் முடிந்தபின் அடுத்த மகிழ்வாக அமையட்டும் உங்களின் பயண அனுபவங்களை நாங்கள் படிப்பது.
ReplyDeleteதங்கள் வெளி நாட்டு பயண அனுபவங்களை
ReplyDeleteநாங்களும் தங்கள் எழுத்தின் மூலம் அனுபவிக்க
ஆவலாக உள்ளோம்
பதிவர் சந்திப்பில் சந்தித்து மகிழ்வோம்
மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
பயணம் நல்ல படியாக முடிந்து பதிவுலகிற்கு மீண்டும் வந்ததற்கு வாழ்த்துகள் புலவரே.
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெறவும் வாழ்த்துகள்.
பயண அனுபவக் கவிதை! அழகு! அருமை! நன்றி!
ReplyDeleteஇன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html
மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
தளர்ந்திடும் முதுமை வரினும் தளர்வுறாத் தமிழே வலிமை தங்களுக்கு.
ReplyDeleteஐயா இனிதே பயணம் முடிந்து சந்திப்பு நிகழ்வில் உற்சாகமாக கலந்து கொள்ளும் தங்களைப் பார்த்தாலே எங்களுக்கு உற்சாகம் வந்துவிடும்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
நல்லபடியாக சுற்றுபயணம் முடிந்து வந்துள்ளமை குறித்து மிகவும் மகிழ்ச்சி ஐயா. நன்கு ஓய்வெடுத்துக்கொண்டு பின் பணிகளைத் தொடருங்கள். கவிதை வாயிலாய் தங்கள் அனுபவங்களை அறிய மகிழ்வாக உள்ளது.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
வணங்குகிறேன் ஐயா... நன்றி... நல்லதொரு பா
ReplyDeleteதங்கள் பயண அனுபவத்தை அழகிய கவிதையாக்கியுள்ளீர்கள்.அருமை ஐயா.
ReplyDeleteKavingarae mika mika arumai.Unkal paravasam engal palan .by DK.,
ReplyDelete