தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத்
தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl
இனிஈழம் வாழ்நாளின் நோக்கம் என்றே-மேலும்
இயம்பாதீர்! கலைந்தது வேடம் நன்றே
கனிகேட்டு காய்கவர நினைத்தல் தீதே-உரிய
காரணம்தான் யாமறியோம் சொல்வீர் யாதே
பனிபட்டு பூக்கருகி உதிரல் போல-ஏனோ
பதில்சொல்ல இயலாது விழித்தல் சால
உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்
ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!
வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக
வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!
வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்
வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!
நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்
நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!
அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை
அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!
கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்
குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!
உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்
உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!
திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி
தேவதையும் தேடிவர வழிதான்! விண்டோம்!
ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்
உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்
கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு
கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!
எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த
எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!
புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது
பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!
புலவர் சா இராமாநுசம்
ஐயா..தங்களின் கவிதை சொல்கிறபடி பொறுத்திருப்போம்..நிச்சயம் ஓர் விடியும்..அந்நாளில் தென்புறம் ஈழம் மலரும்..
ReplyDeleteநன்று சொன்னீர்.
ReplyDeleteநன்றி!மிக்க நன்றி!
Deleteவிடுயும் என்ற நம்பிக்கையில் நானும் காத்திருக்கிறேன்...
ReplyDeleteஐயா பதிவு ரொம் கீழே வருதுங்க...
ReplyDeleteஅது என்னன்னு பார்த்து சரி செய்யுங்க...
நன்றி!மிக்க நன்றி!
Deleteஅருமையான கவிதை
ReplyDelete//கனிகேட்டு காய்கவர நினைத்தல் தீதே//
இரண்டாம் முறை படிக்கும் பொழுது இந்த வரிக்கு வேறு ஒரு பொருளும் புலப்படுகிறது.
நன்றி!மிக்க நன்றி!
Deleteகாலம் ஒரு நாள் மாறும்...
ReplyDeleteநம் கவலைகள் எல்லாம் தீரும்..
பகிர்வுக்கு நன்றி ஐயா...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...(த.ம. 4)
நன்றி!மிக்க நன்றி!
Deleteஒரு கை தட்டினால் ஓசை வருமா ஐயா...?
ReplyDeleteஒட்டு மொத்தமும் ஒரேசமயம் தட்ட வேண்டும் அல்லவா...?
காத்திருப்போம்.
கவிதை அருமையாக உள்ளது புலவர் ஐயா.
நன்றி!மிக்க நன்றி!
Deleteவழக்கம் போல் அருமை ஐயா (TM 5)
ReplyDeleteமிக சிறப்பான கவிதை! தனி ஈழம் விரைவில் மலர நம்பிக்கை ஊட்டும் வரிகள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteநன்றி!மிக்க நன்றி!
Deleteவாக்குக்காய் நாட்காலிக்காய் வீணர்கள் கதை கேட்டு இனியும் ஏமாறுவோமா? எம் உள்ளக் குமுறல் உங்கள் கவிதையாய். நன்று புலவரே பொறுத்திருப்போம். எம் தலைவன் வழியில் தமிழீழம் நிச்சயம். நன்றி கவிஞரே உங்கள் வாக்கு பலிக்கட்டும்.தமிழகம் ஒன்று சேரட்டும் எம் மண்ணின் விடிவுக்காய் உலகத் தமிழர் அமைதிக்காய்.
ReplyDeleteநன்றி!மிக்க நன்றி!
Deleteபொறுத்திருப்போம், காலம் மாறும்.
ReplyDeleteநன்றி!மிக்க நன்றி!
Deleteஇன்னமும் மஞ்சள் துண்டுவை நம்பினால்....
ReplyDeleteநாளை நம் தலையில் இடி விழும்......
\\வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்
ReplyDeleteவேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!\\
மனம் வருந்தச் செய்யும் உண்மை. நொந்த மனத்தினை மேலும் நோகடிக்காமல் இருப்போம்.
மிகவும் மனம் நெகிழச் செய்த கவிதை. பாராட்டுகள் ஐயா.
அருமை!.....அருமை!....ஐயா ஒவ்வொரு வரிகளிலும்
ReplyDeleteஉண்மை கலந்த ஆதங்கமும் உணர்வும் பொங்கி வடியக்
கண்டேன்!!....அதிலும் இந்த வரிகள் முற்றிலும் உண்மையானவையே.
ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்
உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்
கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு
கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!
அரசியல் லாபங்களுக்காக மட்டும் ஈழப் பிரச்சனையை கையில் எடுப்போரை பாட்டுச் சாட்டையால் அடித்திருப்பது நன்று. என்று திருந்தப் போகிறார்கள் இவர்கள்?
ReplyDeleteத.ம 9
வணக்கம் ஐய்யா,
ReplyDeleteஎன்னுடன் தொடர்புகொள்ள 96235852
நல்ல கருத்தை கவிதை மூலம் எடுத்தியம்பிச் சென்றுள்ளீர். நன்றிகள் பல. ஈழம் இன்று அரசியல் ஆயுதமாகப் போய்விட்டதேனோ அறியேன். நம் தளத்துக்கும் வந்து கருத்திட்டுச் செல்ல பணிவுடன் அழைக்கிறேன்.
ReplyDeletehttp://newsigaram.blogspot.com
கவிதை வரிகள் அருமை! அந்த மக்கள் அமைதியுடன் வாழ பிரார்த்திக்கிறேன். ஆனால் தனி ஈழம் நிரந்தர தீர்வாகாது என்பது எனது கருத்து.
ReplyDeleteவணக்கம் ஐயா...இதுவரை காத்திருந்தோம்..இப்படியும் இனியும் காத்திருப்போம்!பகிர்விற்கு நன்றி ஐயா!உயிருள்ள உணர்விற்கும் நன்றி ஐயா!
ReplyDelete