கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்
அதன் விளைவே, நினைவே இக் கவிதை
பொறுப்பே அறியா பொறுக்கி சிங்களர்
வெறுப்பே உருவாய் வஞ்சமே கருவாய்
கறுப்பு ஜூலை என்பத்தி மூன்றாம்
பிறப்பில் தமிழனா-?ஒழித்திடு என்றே
அழிக்கத் தொடங்கிய அந்நா ளாகும்
செழிக்க வாழ்ந்த ஈழத் தமிழன்
செத்தனர் மூன்று ஆயிரம் ஆமே
எரிந்தன எங்கும் எரிந்திட நெஞ்சம்
விரிந்தன கலவரம் இரண்டு மாதம்
அன்றுத் தொடங்கி இன்று வரையில்
கொன்று அழிப்பதேக் கொள்கை யாக
அகதிக ளாக ஈழரின் இரத்தம்
சகதிக ளாக வாழ்வதா நித்தம்
ஓடினார் ஓடினார் உலகு எங்கும்
தேடினார் பிழைக்க வழிதனை அங்கும்
பஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்
நெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா
பிறந்த நாடும் பிரிந்த உறவும்
மறந்து போகும் ஒன்றா சொல்வீர்
மண்ணின் மறவரே நீரே வெல்வீர்
வெறுப்பே உருவாய் வஞ்சமே கருவாய்
கறுப்பு ஜூலை என்பத்தி மூன்றாம்
பிறப்பில் தமிழனா-?ஒழித்திடு என்றே
அழிக்கத் தொடங்கிய அந்நா ளாகும்
செழிக்க வாழ்ந்த ஈழத் தமிழன்
செத்தனர் மூன்று ஆயிரம் ஆமே
எரிந்தன எங்கும் எரிந்திட நெஞ்சம்
விரிந்தன கலவரம் இரண்டு மாதம்
அன்றுத் தொடங்கி இன்று வரையில்
கொன்று அழிப்பதேக் கொள்கை யாக
அகதிக ளாக ஈழரின் இரத்தம்
சகதிக ளாக வாழ்வதா நித்தம்
ஓடினார் ஓடினார் உலகு எங்கும்
தேடினார் பிழைக்க வழிதனை அங்கும்
பஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்
நெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா
பிறந்த நாடும் பிரிந்த உறவும்
மறந்து போகும் ஒன்றா சொல்வீர்
மண்ணின் மறவரே நீரே வெல்வீர்
இன்று இல்லை! எனினும் வருநாள்
நன்று வருமே ஈழத் திருநாள்
சித்தம் கலங்க வேண்டாம்! உறுதியே
சிங்களர் அழிந்து பெறுவார் இறுதியே
புலவர் சா இராமாநுசம்
//ஓடினார் ஓடினார் உலகு எங்கும்
ReplyDeleteதேடினார் பிழைக்க வழிதனை அங்கும்
பஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்
நெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா///
எப்படி இப்படி வார்த்தைகளை அடுக்க முடிகிறது ஐயா ..நன்றி நன்றி
நானே இன்று முதல்வன் ஹி ஹி
ReplyDeleteவாக்களித்ததில் ஐயா வேறொன்றும் இல்லை
நன்றி!மிக்க நன்றி!
Deleteநல்லது தலைவரே...
ReplyDeleteகவிதை வேதனையைப் பகிர்ந்து மனதை வேதனையடையச் செய்தாலும் கூட சித்தம் கலங்க வேண்டாம் உறுதியே - சிங்களர் அழிந்து போவது இறுதியே... ஆறுதலான வார்த்தைகள்.
ReplyDeleteதீயை மித்தித்தான் சூடு கண்டு தான் போவான், இறுதி வரிகள் ஆறுதலானவை
ReplyDeleteநன்றி!மிக்க நன்றி!
Deleteசித்தம் கலங்க வேண்டாம்! உறுதியே
ReplyDeleteசிங்களர் அழிந்து பெறுவார் இறுதியே.
முடிவில் நம்பிக்கை தரும் வரிகள்.
அருமையான கவிதை ஐயா.!
ReplyDeleteஉணர்ச்சிகரமான கவிதையின் கடைசி வரிகள் நம்பிக்கையைத் தருகிறது. வாழ்த்துகளுடன்.
ReplyDeleteவலி கூடியது உண்மையில் அந்த நிகழ்வும் மிகவும் கொடூரமானது என பெரியோர்கள் பேச கேட்டுள்ளேன்...
ReplyDeleteவருநாள்
ReplyDeleteநன்று வரும்.
நல்ல வரிகள் ஐயா...காலம் ஒரு நாள் மாறும்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...(த.ம. 8)
இன்று இல்லை! எனினும் வருநாள்
ReplyDeleteநன்று வருமே ஈழத் திருநாள்
சித்தம் கலங்க வேண்டாம்!
அருமையான நம்பிக்கையுட்டும் வரிகள் புலவர் ஐயா.
உணர்ச்சிகரமான கவிதை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி!மிக்க நன்றி!
Deleteமுடிவில் நம்பிக்கை தரும் உணர்ச்சி வரிகள்...
ReplyDeleteநன்றி!மிக்க நன்றி!
Deleteதளராத தன்னம்பிக்கை கொடுக்கும் வரிகள் ஐயா...
ReplyDeleteவேதனையும் நம்பிக்கையும் கலந்து வடித்த
ReplyDeleteகவிதை அருமை!..மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
நன்றி!மிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteதங்கள் பதிவுகளும் அருமை,
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன் ,