Monday, July 16, 2012

இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி எழுதுதல் மிகவும் சிறப்பாகும்!


 ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி  வந்திட இக்கவிதை-ஐயா
    நவின்றேன் இங்கே காணுமிதை!
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
   தேவை அளவே நீர்சேர்த்தே,
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
   படையல் இட்டுத் தொழுவாரே!


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
     எழுதுதல் மிகவும் சிறப்பாகும்!
ஒன்றே சொல்வேன் உழுவாரை-இவ்
     உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
     நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
     அகத்தில் அதனைக் கொள்வீரே!

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
     உலக வாழ்வே முடங்கிவிடும்!
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்,
    வருவாய் ஒன்றும் நிலையன்றோ!
எழவே முடியா நட்டத்தில்-அரசு
    எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
    அனைவரும் வருகிறார் நகர்தோறும்!

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
    இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
    எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
     அரசு செய்யுமா சொன்னாலே!
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
      தவறின் பஞ்சம் ஈண்டமே


                         புலவர் சா இராமாநுசம்


31 comments :

  1. ஆடி மாதத்தை வரவேற்று உழவுத் தொழிலின் மகிமையை இனிய தமிழில் கூறியதற்கு நன்றி.முதல் கருத்தும் முதல் வாக்கும் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ReplyDelete
  2. இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
    எழுதுதல் மிகவும் சிறப்பாகும்!
    ஒன்றே சொல்வேன் உழுவாரை-இவ்
    உலகம் ஏத்தி தொழுவாராய்
    நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
    நன்மை விளையா அதுவரையில்
    அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
    அகத்தில் அதனைக் கொள்வீரே!//

    ஆடியின் சிறப்பையும் அதனை வரவேற்றும்
    தாங்கள் படைத்துள்ள சிறப்புக்கவிதை
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. அற்புதம் எப்போதும் போல

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. ஆடி மாத பிறப்பில் ஓர் அசத்தலான கவிதை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. ஆடியை வரவேற்றதுடன் உழவனின் மனக்குமுறலை வெளிபடுத்திய பாங்கு அருமை! உழவு தொழில் நசிந்து வருவது குறித்த உங்களின் ஆதங்கம் கவிதையில் தெரிகிறது.

    அழகு தமிழை காலையில் பருகியதில் மகிழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
    2. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. “ ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை
    நாடி வந்திட இக்கவிதை “

    ஆம்! ஆடிப் பட்டம் , ஆடிப் பெருக்கு, நல்லேர் கட்டுதல் என்று சிறப்பு வாய்ந்த ஆடி மாதம் உங்களை கவிதை பாட அழைத்ததில் வியப்பில்லை.

    ReplyDelete
  8. ஆடியுடன் உழவர் பெருமைகளையும் அவர்கள் இல்லாவிட்டால் நாம் படும் அவலங்களையும் கூறியது சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
    2. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. ஆடியின் சிறப்புக்கவிதை அருமை ஐயா..

    தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 9)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  10. ஆடிக்காற்றில் நகரும் அம்மி போல தங்கள் வரிகளால் ஆழ்மனதும் மகிழ்ந்து போனது ஐயா நன்றி .

    ReplyDelete
  11. ‘ஆடி’த்திங்களை வரவேற்கும் முகத்தான் தாங்கள் பாடிய கவிதை இன்றைய உழவனின் நிலையை சரியாய் படம் பிடித்துக் காட்டுகிறது. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டு உழவுத் தொழிலைக் காப்பாற்றும் என நம்புவோம். கவிதைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அருமை ஐயா வழக்கம் போல் :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  13. உழவர் கைகள் முடிங்கி விடின், உலக வாழ்வே முடங்கி விடும். இதுதான் என் கவலையும். நிறைய விவசாய நிலங்கள் ப்ளாட்களாக மாற்றம் பெறுவதைப் பார்க்கும போது பகீர் என்கிறது நாளைய தலைமுறையை நினைக்கையில். நற் சிந்தனையை விதைத்த அருமையான கவிதை ஐயா. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  14. ஆண்டாண்டும் வந்து விடுகிறாள் ஆடியாடி!
    கூண்டாகப் பாடுகிறார் பாவலர்கள் கோடிகோடி!
    வாழ்த்தாகப் பாடினீர்! வார்த்தை வளம்கண்டு
    வாழ்த்தி வணங்கினேன் தாழ்ந்து!

    ReplyDelete
  15. ஆடிக் கவிதை அருமை!

    ReplyDelete
  16. ஆடியை வரவேற்கும் அருமையான கவிதை....

    ReplyDelete
  17. unmaithaan ayya!


    vivasaayaai kal...

    nilai. ....?

    ReplyDelete
  18. அருமை...மிகவும் ரசித்தேன் .

    ReplyDelete
  19. ஆடியின் சிறப்புக்கவிதை அருமை ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...