போதுமென்ற மனங் கொண்டே
புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
சொல்லில் இன்றைய மனிதநிலை!
மாறிப் போனது மனிதமனம்
மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
இதுதான் இன்றைய மனிதநிலை!
மேடையில் ஏறினால் ஒருபேச்சே
மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
குணமே இன்றைய மனிதநிலை!
பற்று பாசம் எல்லாமே
பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
காண்பதே இன்றைய மனிதநிலை!
புலவர் சா இராமாநுசம்
விரக்தியின் எல்லையில் நின்று நீங்கள்
ReplyDeleteகொடுக்கும் கவிதைகளை விட
தங்கள் நம்பிக்கையூட்டும் கவிதைகளே
\இயல்பானவைகளாகவும் மனதிற்கு
இசைந்தவைகளாகவும் எனக்குப்படுகிறது
மிக்க நன்றி!
Deleteமனித நிலையை அப்படியே படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது. எல்லா வரிகளும் அருமை. த.ம. 2
ReplyDeletemmmmm அப்பட்டமான உண்மை...
ReplyDeleteமனித குணத்தின் போட்டோ கொப்பிதான் இது
மிக்க நன்றி!
Deleteமேடையில் ஏறினால் ஒருபேச்சே
ReplyDelete// மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
குணமே இன்றைய மனிதநிலை!////
இப்படி நல்ல கவிதை தந்து எங்களுக்கு ஆசிரியராய் இருப்பதற்கு நன்றி ஐயா மிக்க நன்றி ...
மிக்க நன்றி!
Deleteமனித மனத்தை அளவிட்டு அழகாய் வடிக்கப்பட்டுள்ள கவிதை. அருமை.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉண்மையை உரக்கச் சொன்ன வரிகள் அற்புதம் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவழக்கம் போல் அருமை ஐயா..!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteunmai ayya!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇதுதான் இன்றைய மனித நிலை!அருமை ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Delete//கற்றும் அறியா மூடநிலை
ReplyDeleteகாண்பதே இன்றைய மனிதநிலை!//
சரியாய் சொன்னீர்கள். கருத்து அருமை!
மிக்க நன்றி!
Deleteசிறப்பான கவிதை! சிந்தனையை தூண்ட வைக்கும் நடை! அருமை!
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா,,
ReplyDeleteஐயா எவ்வளவு யதார்த்த உலகை பிரதிபலிக்கும் கவிதை. சொற்களும், சொல்லிய விதமும், கருத்தும் கவர்கின்றன ... பகிர்ந்தமைக்கு நன்றிகள் !!!
ReplyDeleteஇந்த நிலை மாற வேண்டும் இதற்கு இணையான நல்ல வழிகளைக்
ReplyDeleteகாட்டும் இனிய கவிதை தொடர வாழ்த்துக்கள் ஐயா .
உண்மையான உண்மை... ஆனால் இவை எல்லாம் மாற வேண்டும்... பகிர்வுக்கு நன்றி ஐயா. வாழ்த்துக்கள். (த.ம. 12)
ReplyDelete//தீதே செய்யார் இவரென்றே
ReplyDeleteதேடிப் பார்பினும் எவரின்றே// உண்மையான வரிகள்
படித்துப் பாருங்கள்
தல போல வருமா (டூ) பில்லா டூ
http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html
மிக்க நன்றி!
Deleteமிக்க நன்றி!
ReplyDeleteஅருமையான கவிதை. பயண ஏற்பாடுகள் எல்லாம் ஆகிவிட்டதா புலவரே....?
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமனிதத்தின் இன்றைய மனநிலையைப்
ReplyDeleteபடம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள் புலவர் ஐயா.
செயற்கை பூசாத உண்மையான கருத்துக்கள் ஐயா...!வாழ்த்துக்கள்.!:)
ReplyDeleteஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!