மழையே மழையே வாராயோ-நீரும்
மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?
விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை
விழைவா ரிடமே பொய்கின்றாய்!
அழையா விருந்தென போகின்றாய்-இங்கே
அழைத்தும் வந்துடன் ஏகின்றாய்!
பிழையார் செய்யினும் பொறுப்பாயே-உற்ற
பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!
சிறப்பொடு பூசனை செல்லாதே-வான்துளி
சிந்தா விட்டால் நில்லாதே!
அறத்தொடு வாழ்வும் அகன்றுவிடும்-மனதில்
அன்பும் பண்பும் இன்றிகெடும்!
துறவும் தவறித் தோற்றுவிடும்-பசித்
தொல்லை அதனை மாற்றிவிடும்!
மறவாய் இதனை மாமழையே-மக்கள்
மகிழ்ந்திட வருவாய் வான்மழையே!
உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
உண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!
வானின்றி உலகம் வாழாது!-ஐயன்
வகுத்த குறளுக்கு நிகரேது!
ஏனின்று அவ்வுரை சரிதானே-மழை
இன்றெனில் வாழ்வும் முறிதானே!
கானின்று குறைந்திட இத்தொல்லை-இனி
காண்போம் ஓயாப் பெருந்தொல்லை!
தான்நின்று பெய்யா மழைமேகம்-எனில்
தவிர்த்திட இயலா தரும்சோகம்!
புலவர் சா இராமாநுசம்
தங்கள் கவிதை இந்திரன் காதுக்கு எட்டியிருக்குமோ
ReplyDeleteநேற்று சென்னையில் மழையென என் பெண் போன் செய்தாள்
கவிமழை கோரீகையை ஏற்று வான்மழை தொடர்ந்து பொழியட்டும்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
முத்தான வாழத்துக்கு மிக்க நன்றி!
Deleteமுத்தான வாழத்துக்கு மிக்க நன்றி!
DeleteTha.ma 1
ReplyDeleteவாக்குக்கு நன்றி
Deleteஉழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
ReplyDeleteஉண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
கவர்ந்த வரிகள்... எனக்கும் உஙகளைப் போல எழுத வேண்டும் போல உள்ளது...
முத்தான வாழத்துக்கு மிக்க நன்றி
Deleteநல்ல கவிதை....
ReplyDeleteமழை வரத்தான் வேண்டும். தில்லியில் 45 டிகிரி வெயில். இரவு 09.30 மணிக்கு 42 டிகிரி... எப்படா மழை வரும்னு மேலேயே பார்த்துக் கொண்டிருக்கிறோம் தில்லி வாசிகள்....
முத்தான வாழத்துக்கு மிக்க நன்றி
Deleteமழையை நோக்கி தவமாய் ஒரு கவிதை! மலை மீது ஏறி வா என்று நிலவை அழைத்த காலம் போய், இப்போது நிலவை நோக்கியே பயணம். இதே போல் மழையை வாராயோ என்று அழைக்கும் காலம் போய் வரவழைக்கும் காலம் வரவேண்டும்.
ReplyDeleteமுத்தான வாழத்துக்கு மிக்க நன்றி
Deleteஇக்கவிதை கணாடாவது மழை நன்கு பொழியட்டும்:)
ReplyDeleteமுத்தான வாழத்துக்கு மிக்க நன்றி
Deleteஎப்போதும் போல், அற்புதம்.
ReplyDeleteமுத்தான வாழத்துக்கு மிக்க நன்றி
Delete//உழவுத் தொழிலும் நடக்காதே-யாரும்
ReplyDeleteஉண்ண உணவும் கிடைக்காதே!
அழிவே அனைத்தும் பெற்றுவிடும்-நெஞ்சில்
அரக்க குணமே முற்றிவிடும்!
எழுமே அலைகடல் தன்நீர்மை-விட்டு
ஏகும் என்பதும் மிகுஉண்மை!
தொழுமே வாழ்ந்திட மனிகுலம்-மழைத்
தூறிட வந்திடும் இனியவளம்!
//
அழகிய வரிகள்
முத்தான வாழத்துக்கு மிக்க நன்றி
Deleteஇன்று
ReplyDeleteவாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்
மிக்க நன்றி
Deleteவழக்கம் போல் அருமை ஐயா (TM 5)
ReplyDeleteமுத்தான வாழத்துக்கு மிக்க நன்றி
Deleteநல்ல வரிகள்... அருமை ஐயா !
ReplyDelete(TM 6)
முத்தான வாழத்துக்கு மிக்க நன்றி
Deleteகவிதை மழையில் நனைந்தேன்.புலவர் குரல் கேட்டு விரைந்து வாராதோ மழை!
ReplyDeleteபுது டெம்ளேட் சூப்பர்
ReplyDeleteபுது டெம்ப்ளேட் அருமை
ReplyDeleteமுத்தான வாழத்துக்கு மிக்க நன்றி
Deleteவிடாமல் அடை/கவிதை மழை பொழிய வாழ்த்துக்கள் புலவரே ...
ReplyDeleteபுது டெம்ப்ளேட் போன பதிவில் மக்கார் பண்ணியது...இன்று ஓகே...
முத்தான வாழத்துக்கு மிக்க நன்
Deleteமழை போன்றே ஜில்லென்று இருந்தது உங்கள் கவிதை!.
ReplyDeleteஅருமை அய்யா!.
முத்தான வாழத்துக்கு மிக்க நன்றி
Deleteஎல்லா இடமும் மழை ஒரு குறையாகத்தான் இருக்கிறது...ஒவ்வொருவரும் நீங்கள் பதிவிட்டது போல் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் இறைவனை பிரார்த்தித்தால் நிச்சயம் மழை கிட்டும்...:)
ReplyDeleteத.ம 10
முத்தான வாழத்துக்கு மிக்க நன்றி
Deleteமழைவேண்டி ஒரு கவிதைமழை! வானம் பொய்த்தாலும் தங்கள் மன ஆகாயம் பெய்யும் கவிமழை பொய்க்காது. மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteஅருமைங்க புலவர் ஐயா!
ReplyDeleteமழை வேண்டி மிக அருமையான ஆசிரிய விருத்தத்தை எழுதியுள்ளீர்கள் ஐயா. என் பெயர் சுந்தரராஜ் தயாளன். வயது அறுபது. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தில்(Indian council of Agricultural Research)முதுநிலை விஞ்ஞானியாக(Principal Scientist)பணிபுரிகிறேன். மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் இருபது ஆண்டுகள் பணிபுரிந்தேன். தற்போழ்து பெங்களூரில் உள்ளேன். சமயம் கிடைக்கும்போது கவிதை எழுதுவேன். புதுக்கவிதை பிடிக்காது. மரபுக்கவிதை முழுமையாகத் தெரியாது.அகரம் அமுதா அவர்களின் வலைத்தளம் மூலமாக் உங்களின் தளத்தைக் கண்டேன்.உங்கள் கவிதைகளை கடந்த சில நாட்களாக படித்து வருகிறேன். எனது ஒரு கவிதை இதோ உங்களின் பார்வைக்கு:
ReplyDeleteநோயின்றி நாம்வாழ முடியும் சாவு
----- நோக்காட்டை வேரறுக்க முடியும் பிள்ளை
தாயின்றித் தான்வாழ முடியும் தங்கம்
----- தானின்றிப் பெண்வாழ முடியும் ஆனால்
காயின்றிக் கனிவருவ துண்டோ நெஞ்சில்
----- கருத்தின்றிக் கவிவருமோ அதுபோல் மழையே
நீயின்றி நிலவுலகே இல்லை உந்தன்
----- நீரன்றோ எங்களின் உயிர்வாழும் எல்லை.
எனது வலைத்தளம்: sundararajthayalan.com
மழைக்கும் ஆசை இருக்கும் ஐயாவின் வரிகள் காண வரும் கண்டிப்பாக.
ReplyDeleteஐயா தங்கள் கவிதை உள்ளத்தை தொடுகிறது. மிக அருமை!!
ReplyDelete