மனித நேயம் இல்லையா
புலவர் சா இராமாநுசம்
மத்திய அரசே சொல்லையா?
தினமேத் தொல்லைப் படுகின்றான்
தேம்பியே மீனவன் கெடுகின்றன்
மனமே இரங்க வில்லையா
மனதில் அரக்கனா சொல்லையா!
சுண்டைக் காய்போல் அந்நாடே
சொன்னால் வெட்கம் பெருங்கேடே
அண்டையில் இருந்தேத் தரும்தொல்லை
அளவா? அந்தோ துயரெல்லை!
கச்சத் தீவைக் கொடுத்தீரே
காரணம் எதுவோ ?கெடுத்தீரே
அச்சப் பட்டே மீனவனும்
அல்லல் படுவதைக் காண்பீரே!
படகொடுப் பிடித்தே மீனவரைப்
பாழும் சிறையில் தள்ளுகின்றான்!
இடமிலை மீனவர் உயிர்வாழ
எண்ணமும் உமக்கிலை அவர்வாழ!
மாநில அரசையும் மதிப்பதில்லை!
மத்திய அரசுக்கோ செவியில்லை!
நாமினி செய்வதை ஆய்வோமா?
நல்லது நடப்பின் உய்வோமா?
தினமேத் தொல்லைப் படுகின்றான்
தேம்பியே மீனவன் கெடுகின்றன்
மனமே இரங்க வில்லையா
மனதில் அரக்கனா சொல்லையா!
சுண்டைக் காய்போல் அந்நாடே
சொன்னால் வெட்கம் பெருங்கேடே
அண்டையில் இருந்தேத் தரும்தொல்லை
அளவா? அந்தோ துயரெல்லை!
கச்சத் தீவைக் கொடுத்தீரே
காரணம் எதுவோ ?கெடுத்தீரே
அச்சப் பட்டே மீனவனும்
அல்லல் படுவதைக் காண்பீரே!
படகொடுப் பிடித்தே மீனவரைப்
பாழும் சிறையில் தள்ளுகின்றான்!
இடமிலை மீனவர் உயிர்வாழ
எண்ணமும் உமக்கிலை அவர்வாழ!
மாநில அரசையும் மதிப்பதில்லை!
மத்திய அரசுக்கோ செவியில்லை!
நாமினி செய்வதை ஆய்வோமா?
நல்லது நடப்பின் உய்வோமா?
கடிதம் எழுதினால் போதாதே
காரியம் அதனால் ஆகாதே!
முடிவது எதுவென எடுப்பீரா
முடங்கிட மீனவர் விடுப்பீரா?
அலைகடல் தானே அவன்வீடாம்
அந்தோ! இன்றது சுடுகாடாம்!
நிலைமை அப்படிப் போகுமன்றோ
நிம்மதி, அமைதி ஏகுமன்றோ?
புலவர் சா இராமாநுசம்
மத்திய அரசை கவிதையின் மூலம் நன்றாகவே சாடியிருக்கிறீர்கள்..
ReplyDelete"கடிதம் எழுதினால் போதாதே
காரியம் அதனால் ஆகாதே"
உண்மைதான் ஐயா.
அன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி!
Deleteஅருமை ஐயா
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி!
Deleteநல்ல சிந்தனை ஐயா..
ReplyDeleteவருகைக்கு நன்றி..
Deleteஎது செய்தாலும் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. என்ன செய்ய வேண்டுமென்பதும் தெரியவில்லை. மனம் புலம்பித்தான் ஆறுதல் கொள்கிறது. நல்ல கவிதை ஐயா.
ReplyDeleteசாடல்.....
ReplyDeleteஏன் இப்படி மத்தியில் மவுனமோ?
அண்டை மாநிலத்தாராலும், அண்டை நாட்டாலும் அல்லல் படுத்தப்படும் தமிழனுக்கு என்று விடிவுகாலம் பிறக்குமோ? கவிதையின் மூலம் வெளிப்படுத்தியுள்ள தங்களின் குரல் கேட்கவேண்டியவர்களுக்கு கேட்டு,மீனவர்களின் துயர் துடைக்கப்பட்டால் சந்தோஷமே.
ReplyDeleteநல்ல சிந்தனை ஐயா ! நாம் நொந்து போவதை தவிர வேறென்ன செய்ய முடியும் ?
ReplyDeleteசிட்டுக்குருவி
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி!
பா.கணேஷ்
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி!
மனசாட்சி™
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
வே.நடனசபாபதி
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
ஆள்வோர்களின் ஆணவப் போக்குக்கு
ReplyDeleteஇடித்துரைக்கும் கவிதை நன்று ஐயா....
அருமை ஐயா.!
ReplyDeleteபுதிய பின்புல அட்டை என்று மாற்றினீர்கள் என்று தெரியவில்லை இன்றே நான் காண்கிறேன். அருமை!
tha ma 8
அருமையான, மத்திய அரசின் நிலையை உணர்த்தும் கவிதை.. அருமை..
ReplyDeleteமகேந்திரன்
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
வரலாற்று சுவடுகள்29 June 2012 8:32 AM
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
சக்தி கல்வி மையம்29 June 2012 8:53 AM
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
அருமை ஐயா....
ReplyDeleteதள வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.....
unmai ayya!
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
Seeni
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
இடித்துரைப்பு என்பதற்கு சரியான மாதிரி..வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
Deleteபுலவர் அய்யாவுக்கு வணக்கம்! வடிவ அமைப்பில் மாற்றம் செய்துள்ளீர்கள். நன்றாக உள்ளது. இங்கு ”என்னைப் பற்றி” (PROFILE) என்ற இடத்தில், உங்கள் பெயரும், மதுமதி என்ற பெயரும் வருவதால் “ புலவர் கவிதைகள் “ என்ற இந்த தளத்தை இருவர் சேர்ந்து நடத்துவது போல் தோன்றுகிறது. எனது சந்தேகத்தை தீர்க்கவும். தவறாக இருப்பின் மன்னிக்கவும்.
ReplyDeleteஅன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கும் நன்றி
Deleteஅன்பர் மதுமதி அவர்கள் தான் இல்லம் வந்து வடிவ அமைப்பை மாற்றித் தந்தார்! அவருக்கு என் உளங்கனிந்ந அன்பையும்
நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் இன்று சரியாகிவிடும்! பொறுத்தருள்க!
மனித நேயம் இல்லையா
ReplyDeleteமத்திய அரசே சொல்லையா? அருமை ...
அன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
Deleteபுதிய வடிவமைப்பு அழகாக உள்ளது ஜயா...
ReplyDeleteமத்திய அசிற்கு மனித நேயம் இல்லை இது தானே ஜயா.....
அருமையான கவிதை......
அன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
Deleteமாநில அரசையும் மதிப்பதில்லை!
ReplyDeleteமத்திய அரசுக்கோ செவியில்லை!
நாமினி செய்வதை ஆய்வோமா?
நல்லது நடப்பின் உய்வோமா?
டாஸ்மாக் வாசலில் கி(உ)றங்கிடக்கிறது நம்மின ஒற்றுமை. விடியலை நோக்கி போராட நேரமில்லை நமக்கு.
அன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
Deleteஐயா தங்களின் மனக்குமுறல் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது...
ReplyDeleteஅன்புச் சகோதரன்
ம.தி.சுதா
ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்
அன்பின் இனியீர்!வருகை நன்று!வாழ்த்துக்கு நன்றி
Deleteஇந்த பதிவை-
ReplyDeleteவலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!
வருகை தாருங்கள்-
அய்யா!
தலைப்பு; மூத்தவர்கள்,,