புத்தம் புதுமலரே பூங்கொத்தே உனைப்போன்றே
நித்தம் ஒருகவிதை நினைக்கின்றேன்! எழுதிவிட
சித்தம் கலங்கிவிட சிலநேரம் குழம்பிவிட
எத்தனை முயன்றாலும் இயலாது போகுமந்தோ!
அலைபோல ஓயாது அலைகின்ற உள்ளத்தில்,
விலைபோகாப் பொருளாகி வீணாகும்!பள்ளத்தில்
நிலைதவறி வீழ்கின்ற நிலைதானே! என்நிலையும்
வலையேற ஒருகவிதை வாரது போகுமந்தோ!
எடுத்த அடிதன்னை எப்படியோ முடித்தாலும்
அடுத்த அடிகாணா! அடிப்பட்டு போகுமனம்
தொடுத்த மாலையது துண்டுபல ஆனதுவே
விடுத்த விடுகதையாய் விடைகாணாப் போகுமந்தோ!
தேன்தேடும் வண்டெனவே திரிகின்ற என்மனமோ
தான்தேடி அலைந்தாலும் தவிப்பேதான் கண்டபலன்
மான்தேடி ஏமாந்த வேடனது நிலையேதான்
நான்தேடி அலைந்திடவும் நாட்கள்பல போகுமந்தோ!
கூடிக் கருமேகம் மின்னலிட்டும் இடிமுழக்கி
ஓடிக் கலைந்தனவே ஒருசொட்டும் பெய்யாமல்
வாடும் பயிர்பச்சை வானநோக்க, என்கவிதை
தேடும் மனவெளியில் திசையறியா போகுமந்தோ!
இலவே காத்தகிளி என்நிலையும் ஆனதய்யா!
உலவாத் தென்றலென உள்ளம்தான் போனதய்யா
நிலவே காணாத நீள்வானாய் நெஞ்சந்தான்!
பலவே நினைத்தேனோ பாழ்பட்டு போகுமந்தோ!
புலவர் சா இராமாநுசம்
புலவருக்கு கவிதையே உயிர் மூச்சாய் நிற்கும் போது
ReplyDeleteஅங்கே தேடுதலுக்கு வேலையில்லை. வலையை வீசுங்கள்! வந்து விழும் வார்த்தைகள்!
நன்றி! நன்றி
Deleteநீங்கள் புலவர்
ReplyDeleteவார்த்தை மலர்கள்
உங்களை தேடிவரும்
கவிதை மாலை கோர்க்க சொல்லி
தங்களுக்கே வார்த்தை பஞ்சமா.?
ReplyDeleteநன்றி! நன்றி
Deleteவார்த்தைத் தேடல்களுக்கே இவ்வளவு வார்த்தைகள் ஊறும்
ReplyDeleteஅற்புதக் கேணியல்லவா நீங்கள்...
நன்றி! நன்றி
Deleteஅன்பின் புலவர் சா.இராமானுசம்
ReplyDeleteகவிதை அருமை - இக்கவிதை சொற்கள் தேடுகிறதா ? சிந்தனை நன்று. செயலாற்றுக - கவிதை தானே மணக்கும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நன்றி! நன்றி
Deleteஅருமையான கவிதை. உங்களின் கவிதை ஆறு என்றும் வற்றாதது தான் ஐயா.
ReplyDeleteகண்களைக் காணாமல் கண்மணிகள் தேடியதை
ReplyDeleteஎன்னவென்று சொல்வேன் எடுத்து!!
புலவரே நீர் வாழ்க!
கவிதை வரவில்லையே என்று புலம்பும் கவிதையை என்ன சொல்வேன்!
ReplyDeleteஉங்களுக்கு வசப்படாத கவிதை உண்டா என்ன?பெய்யட்டும் கவிதை மழை!
ReplyDeleteதங்களுக்கேவா ...?
ReplyDeleteநன்றி! நன்றி
Deleteதங்களுக்கு வார்த்தைப் பஞ்சமே இல்லை புலவரே. அப்படி நினைத்ததை ”பா” ஆக்க எத்தனை வார்த்தைகள்....
ReplyDeleteநல்ல கவிதை.... வாழ்த்துகள்.
neengalumaaa...?
ReplyDeleteபுலவர்கா புனைவதற்கு வார்த்தைகள் இல்லை..
ReplyDeleteஇதோ புனைந்து விட்டீர்களே ஜயா....
நன்றி! நன்றி
Deleteநீங்கள் கவிதைக்காக குழம்புவதும், தேடுவதும் நல்லதுதான்.அதனால்தானே இது போன்ற கவிதைகளும் எங்களுக்கு கிடைக்கின்றன. தொடரட்டும் உங்கள் தேடுதல்!
ReplyDeleteநன்றி! நன்றி
Deleteகவிதை அருமை ! நன்றி ஐயா !
ReplyDeleteகவிதையே கவிதையை தேடுவது முரணாயிருக்கிறதே.
ReplyDeleteஉங்கள் எண்ணம்போல் வண்ணக் கவிதை
ReplyDeleteஅருவியாகக் கொட்டிட வாழ்த்துகின்றேன் ஐயா!...
சிறு பிள்ளையேனும் உங்கள் தவிப்பை என்னால்
நன்கு உணர முடிகிறது கவலை வேண்டாம் .
தொடர்ந்தும் முயற்சியுங்கள் .மிக்க நன்றி ஐயா
பகிர்வுக்கு .
நன்றி! நன்றி
ReplyDeleteவார்த்தைகள் வந்து உங்கள்
ReplyDeleteகவிதையில் விரும்பி விழுந்து புரள்வதை பார்த்தால்
கவிதையை நீங்கள் விட நினைத்தாலும்
அதுவிடாது போலிருக்கே
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 8
ReplyDelete