மதி!
விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு
விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்!
மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை
மழைமேகம் சிலபோது மறைக்கின்ற தாலே!
கண்பட்டே விட்டதென கலங்கிடவும் நெஞ்சம்-அந்த
கருமேகம் விளையாடி போவதென்ன கொஞ்சம்!
தண்ணென்ற குளுமைதனைத் தருகின்ற நிலவே-நாளும்
தருகின்ற கற்பனைகள் சொல்வதெனில் பலவே!
தென்றல்!
தவழ்ந்தோடி வருகின்ற தென்றலெனும் காற்றே-மேனி
தழுவுகின்ற காரணத்தால் இன்பமது ஊற்றே!
உவந்தோடிப் பெருகிடவும் கரைகாண வெள்ளம்-நன்கு
உருவாகி உணர்வாகப் பாயுதுபார் உள்ளம்!
சிவந்த்தோடும் வெட்கத்தில் காதலியின் முகமோ-உனை
செப்பிடவும் ஒப்பிடவும் காதலிக்கும் அகமோ!
தவழ்ந்தாடி வருகின்றாய் தென்றலெனும் சேயோ-இன்பத்
தமிழ்போல எமைநாடி தொடுகின்ற தாயோ!
நினைவு!
கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக்
கண்மூட முயன்றாலும் கலையாத கனவே
தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய
தடமாறி தடுமாறி தவித்திடுவாய் தானோ
சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
சிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்
குறைபட்டும், குறைசொல்லும், குறையெதற்காம்! தேவை-நற்
குணங்காணும் வழிச்சென்று செய்திடுவாய் சேவை
புலவர் சா இராமாநுசம்
இனிய உறவுகளே! நடக்க இருக்கும் பதிவர் சந்திப்புப் பற்றி
அனைவரும் அறிவீர்கள். எனவே மேலும் இங்கே நான் அதை
போடத் தேவையில்லை எனக் கருதுகிறேன்
ஆனால்
ஒரு முக்கிய( திருத்த) அறிவிப்பு
அக்கூட்டதிற்கு தலைவராக மூத்த பதிவரான சென்னைப் பித்தன்
அவர்கள இருப்பார்கள். நான் முன்னிலை வகிக்கிறேன். அதுதான
முறையானதாகும் சரியானதாகும். இது என் விருப்பம் மட்டுமல்ல
வேண்டுகோளாகும்
அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்

உதிரிப் பூக்கள் மூன்றும் அருமை ஐயா !
ReplyDeleteசென்னையில் நடக்கப் போகும் பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைய அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் !
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
அருமையான கவிதை ஐயா....
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெர வாழ்த்துகிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
அருமை அய்யா
ReplyDeleteநல்ல கவிதை ஐயா.,
ReplyDeleteபதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற எமது நல வாழ்த்துக்கள்.!
த.ம.ஓ 1
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
nalla irukku!
ReplyDeleteayyaa!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
மூன்றுமே நல்முத்துகள்.....
ReplyDeleteபதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.....
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
கவிதை அருமை ஜயா
ReplyDeleteபதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்....
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
"சிவந்தோடும் வெட்கத்தில் காதலியின் முகமோ-உனை
ReplyDeleteசெப்பிடவும் ஒப்பிடவும் காதலிக்கும் அகமோ"
அப்படிபோடுங்க..மூன்றும் அருமை..
உங்கள் விருப்பப்படியும் வேண்டுகோள்படியும் செய்வோம் ஐயா..பதிவர்களை திரட்டுவோம் சந்திப்போம்.சந்திப்பு பயனுள்ளதாக இருக்கட்டும்..
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
மூன்று கவிதைகளும் முக்கனிகள். சுவைத்தேன். ரசித்தேன். உங்களின் திருத்தத்தின் படியே இனிது செயல்படுவோம் நன்றி.
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
உதிரிப்பூக்கள் மூன்றும் அழகு ஐயா. பதிவர் சந்திப்பில் சிந்திப்போம் .
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
உதிரிப்பூக்கள் மூன்றெடுத்தே உண்டான பாக்கள்
ReplyDeleteகதிரென மின்னிடக் கண்டு - மதியில்
உதித்திட்ட வண்ணம் உடன்உம் வலையில்
பதித்திட்டேன் நானுமோர் பாட்டு!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
விண்மீது தவழ்கின்ற வெண்மதியையும், தவழ்ந்தோடி வருகின்ற தென்றலையும் நினைக்காத பாடாத கவிஞர்கள் உலகில் உண்டோ?
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
// சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
ReplyDeleteசிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்//
உண்மை. உண்மை.
எல்லா கவிதைகளுமே அருமை.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
முத்துக்கள் மூன்று!
ReplyDeleteகடைசியில் காணப்படும் அறிவிப்பு பற்றி இப்போது ஏதும் பேச வேண்டாம் ஐயா.அன்புக்கு நன்றி
கவிதைகள் அருமை புலவரே..
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
உதிரிப் பூக்கள் மூன்றும் அருமை ஐயா...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசா இராமாநுசம்
உதிரிப் பூக்களின் மணம் உள்ளம் கவர்ந்தது
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு சென்னைவர உத்தேசித்துள்ளேன்
எழுத்தில் சந்தித்த அனைவரையும் எதிரில் சந்திக்க
இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்
பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைய மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
Tha.ma 9
ReplyDeleteஉதிரிப்பூக்கள் கொண்டு தொடுத்திருக்கும் கதம்பமாலை வாசம் மிகுந்தது.
ReplyDeleteபூக்கள் மூன்றும் சாசயையும் அற்புதமும்.பாக்களில் வென்று விட்டிர்களட ஐயா...!வ◌ாழ்த்துக்கள்.
ReplyDeleteஉதிரிப்பூ கண்டெந்தன் உள்ளம் மகிழ்ந்தேன்
ReplyDeleteஅதிரசம்போல் அஃதினித்த திங்கு