ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-பலவும்
எழுதிட நாளும் களைப்பாவே!
தேனாய் இனித்தது தொடக்கத்தில்-ஏதும்
எழுதிட நாளும் களைப்பாவே!
தேனாய் இனித்தது தொடக்கத்தில்-ஏதும்
தேடுத லின்றி இதயத்தில்!
தானாய் வந்தது அலைபோல-இன்று
தவியாய் தவிக்குதே சிலைபோல!
வானாய் விரிந்திட சிந்தனைகள்-கவிதை
வடித்தால் வருஞ்சில நிந்தனைகள்!
உண்ணும உணவும் மறந்தாச்சே-அந்த
உணவின் சுவையும் துறந்தாச்சே!
எண்ண மெல்லாம் வலைப்பூவே-பொழுதும்
எழுதத் தூண்டின தலைப்பூவே!
போதை கொண்டவன் நிலையுற்றேன்-நாளும்
புலம்பும் பயித்திய நிலைபெற்றேன்!
பொழுதும் சாய்ந்தே போனதுவே-களைப்பில்
புலவன் குரலும் ஓய்ந்ததுவே!
பாதி இரவில் எழுந்திடுவேன்-உடன்
பரக்க பரக்க எழுதிடுவேன்!
வீதியில் ஒசைவந்தவுடன்-அடடா
விடிந்த உணரவும் வந்திடிமே!
தேதி கேட்டால தெரியாதே-அன்றைய
தினத்தின் பெயரும் தெரியாதே!
காதில் அழைப்பது விழுந்தாலும-என்
கவன மதிலே செல்வதில்லை!
படுத்த படியே சிந்திப்பேன்-என்
பக்கத் தில்பேனா தாளுமே!
தொடுக்க நெஞ்சில் இருவரிகள்-வந்து
தோன்றும் ஆனல் நிறைவில்லை!
அடுத்த வரிகள் காணாதாம்-அந்தோ
அலையும் நெஞ்சே வீணாதாம்!
எடுத்த பாடல் முடியாதாம்- எனினும்
ஏனோ இதயம் ஒயாதாம்!
அப்பா வேதனை ஆமப்பா-தினம்
ஆனது என்நிலை பாரப்பா
தப்பா-? தொடங்கின வலைப்பூவே-நெஞ்சம்
தவிக்க எண்ணம் சலிப்பாவே!
ஒப்பா யிருந்ததே என்னுள்ளம்-தேடி
ஓடுமா சிந்தனைப் பெருவெள்ளம்
இப்பா போதும் முடியப்பா-சோர்வு
எழவே தொடரா படியப்பா!
புலவர் சா இராமாநுசம்
அருமையான கவிதை புனைவு ஐயா..உங்களுக்கும் வலைப்பூவுக்குமான உறவையும் உங்கள் தினம் நகரும் விதத்தையும் கவிதை விளக்குகிறது..
ReplyDelete"உண்ணும உணவும் மறந்தாச்சே-அந்த
உணவின் சுவையும் துறந்தாச்சே!
எண்ண மெல்லாம் வலைப்பூவே-பொழுதும்
எழுதத் தூண்டின தலைப்பூவே"
அருமை ஐயா..
இன்று தங்களைப் பற்றி என் வலைத்தளத்தில் எழுத நேர்ந்தது. ஆச்சர்யம் வலைத்தளத்தைப் பற்றியே ஒரு கவிதை. இப்போது உணர்கிறேன், என்பதிவில் நான் இட்ட கருத்துக்கள் எள்ளவும் பொய்யில்லையென்று.
ReplyDeleteஎடுத்த பாடல் முடியாதாம்- எனினும்
ஏனோ இதயம் ஒயாதாம்!
வாழ்த்த வயதில்லை, வார்த்தைகளும் வரவில்லை.
வலைப்பூக்களில் பதிவெழுதும் பலரின் நிலையும் இது தான் புலவரே... இந்நிலையை அழகிய கவிதை மூலம் சொல்லி அசத்திட்டீங்க!
ReplyDeleteநானும் இன்று காலை “மகிழ்ச்சித் தீயும் சிரிப்பொலியும்” என பதிவொன்று எழுதி உள்ளேன். நிறைய பேர் படிக்கவில்லை எனப் பார்த்தபோது, தொடர்பவர்களின் டேஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை எனத் தெரிந்தது. :)
http://www.venkatnagaraj.blogspot.in/2012/06/blog-post_13.html
வலைப்பூவினுடனான
ReplyDeleteஉங்களின் உறவை உணர முடிந்தது வரிகளில்
அருமை அய்யா
உண்ணும உணவும் மறந்தாச்சே-அந்த
ReplyDeleteஉணவின் சுவையும் துறந்தாச்சே!
எண்ண மெல்லாம் வலைப்பூவே
அழகாகச் சொன்னீர்கள் புலவரே..
சொந்த வலைப்பதிவு என்பது இன்று பலருக்கு சொந்த வீடு போலத்தான் இருக்கிறது.
இன்பதுன்பங்கள் என எந்த சூழ்நிலையிலும் வலையை மறப்பதில்லை..
// தேனாய் இனித்தது தொடக்கத்தில்-ஏதும்
ReplyDeleteதேடுத லின்றி இதயத்தில்!
தானாய் வந்தது அலைபோல-இன்று
தவியாய் தவிக்குதே சிலைபோல! //
அய்யா வலைப்பூவையே நினைத்துக் கொண்டிராமல் கொஞ்சம் குடும்பத்தாரோடும் உறவாடுங்கள்! உடல் நிலையையும் கவனியுங்கள்! தினமும் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கருத்துரைகளில் கொஞ்சம், எழுதுதல் கொஞ்சம் என்று இருங்கள். எல்லாம் சரியாகி விடும். எனது அனுபவம் இது!
ஐயா நீங்களே இப்படி சலித்தால் எப்படி...:(
ReplyDeleteஅருமையாக சொல்லியிருக்கிறீர்கள் பதிவர்கள் படும் கஷ்டத்தை...:(....இது உங்களைப் போன்ற அனுபவசாலிகளால்தான் முடியும்.
ReplyDeleteதொடர்ந்தும் சலைக்காமல் எழுத இந்த பின்னூட்டத்தை உரமாக சமர்ப்பிக்கிறேன்,,,,த ம ஓ 6
அருமை.. . எனக்கும் மட்டும் தாணு நினைச்சேன் ... எல்லாருக்குமா.. வாழ்த்துக்கள்
ReplyDeleteதப்பே இல்லை உம்செயலில்
ReplyDeleteதமிழும் மகிழ்வாள் உம்கவியில்!
உப்பே இல்லாப் பண்டகமாய்
உலகில் இருந்தும் என்னபயன்?
நட்பை வளர்க்கும் வலைப்பூவால்
நாளும் சேறும் சொந்தங்கள்!
இப்பூ வாழ்வே இன்பமென
இனிக்கத் தொடர்ந்து எழுதிடுக!
புலம்பல் அற்புதம்.. :-)
ReplyDeleteபதிவெழுதும் பலரின் நிலையும் இது தான் புலவரே...
ReplyDeleteவலைபூ எழுதும் ஒவ்வொருவரின் மண நிலையையும் ஒரு கவிக்குள் கொண்டு வந்த விதம் அருமை தமிழ்ப் புலவரே
ReplyDeleteபடித்துப் பாருங்கள்
சென்னையில் ஓர் ஆன்மீக உலா
வலைப்பூ வைத்திருப்போர் அனைவரது நிலையும் இதுதான் போல :)
ReplyDeleteத.மா.ஓ 8
aamaangayyaaa..!?
ReplyDeleteவலைப்பதிவர்கனின் மனக்குரலாய் உங்களின் குரல் ஒலித்திருக்கிறது. அருமை.
ReplyDeleteஅப்பா வேதனை ஆமப்பா-தினம்
ReplyDeleteஆனது என்நிலை பாரப்பா
தப்பா-? தொடங்கின வலைப்பூவே-நெஞ்சம்
தவிக்க எண்ணம் சலிப்பாவே!
ஐயா என் உள்ளுணர்வுகளை உங்கள் வரிகளில் கண்டேன் .
எல்லாப்பதிவர்களின் நிலையும் இதுதான் ஐயா!நான் இனி வாரம் இரண்டு நாட்களாவது வலைப்பூவுக்கு விடுமுறை விடலாம் என எண்னியிருக்கிறேன்!(இது வரை பல முறை அவ்வாறு எண்ணியிருக்கிறேன்!!)
ReplyDeleteஉங்களின் உணர்வே எங்களுடையதும்.
ReplyDeleteAROUNA SELVAME
ReplyDeleteதப்பே இல்லை உம்செயலில்
தமிழும் மகிழ்வாள் உம்கவியில்!
உப்பே இல்லாப் பண்டகமாய்
உலகில் இருந்தும் என்னபயன்?
நட்பை வளர்க்கும் வலைப்பூவால்
நாளும் சேறும் சொந்தங்கள்!
இப்பூ வாழ்வே இன்பமென//
இவருடைய கருத்தே என் கருத்தும்
மனம் கவர்ந்த கவிதைக்கு
மனமார்ந்த நன்றி
இனிக்கத் தொடர்ந்து எழுதிடுக!
Tha.ma 11
ReplyDeleteமதுமதி said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
முஹம்மது யாஸிர் அரபாத் said.
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said.
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
செய்தாலி said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
தி.தமிழ் இளங்கோsaid...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
சிட்டுக்குருவி said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
சிட்டுக்குருவி said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
ராசை நேத்திரன்said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
AROUNA SELVAME said
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
சின்னப்பயல்said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
ரெவெரி said
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
சீனுsaid...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
Seeni said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
பா.கணேஷ் said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
Sasi Kalasaid...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
வே.நடனசபாபதிsaid...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteமிக்க நன்றி
சா இராமாநுசம்