Friday, June 15, 2012

பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா?


பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா?
உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வாரா?
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லில் விளக்க வாய்பாக-உள்ள
சூழ்நிலை! தனியார் பள்ளிகளே! 

தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியரவரே தெழிலாளி
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட!
கனிவாய் அவர்சொலல் இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே!
பிணியாய் ஆனதே இந்நாளில்=இப்படி
பிழைப்பதும் மறைவது எந்நாளில்!

ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே!
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதே தனியார் பள்ளிகளே!
கோழைகள் நடுத்தர குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை!
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதார்!
எனவே,
வாழவழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா?
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக!
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்!
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே!

புலவர் சா இராமாநுசம்

39 comments:

  1. நுண்ணறிவு உடைய மாணவர்களை மட்டும் பள்ளியில் சேர்த்து பெயர் வாங்கும் கல்விக் கொள்ளையரைத் தான் இந்த சமூகம் நம்புகிறது. எந்த வித பின்புலமும் இல்லாத இவர்களால் வேலையில் அனுப்பப்பட்ட மாணவர்களே அரசு பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.வைரங்களையே பட்டைதீட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களேயன்றி. கூழாங்கற்களை இவர்கள் கண்டுகொள்வதில்லை.
    தாங்கள் சொல்வது போல இதை பணம் சம்பாதிக்கும் தொழிலாகத்தான் நடத்துகிறார்கள்.

    த.ம.1

    ReplyDelete
  2. நுண்ணறிவு உடைய மாணவர்களை மட்டும் பள்ளியில் சேர்த்து பெயர் வாங்கும் கல்விக் கொள்ளையரைத் தான் இந்த சமூகம் நம்புகிறது. எந்த வித பின்புலமும் இல்லாத இவர்களால் வேலையில் அனுப்பப்பட்ட மாணவர்களே அரசு பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.வைரங்களையே பட்டைதீட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களேயன்றி. கூழாங்கற்களை இவர்கள் கண்டுகொள்வதில்லை.
    தாங்கள் சொல்வது போல இதை பணம் சம்பாதிக்கும் தொழிலாகத்தான் நடத்துகிறார்கள்.

    த.ம.1

    ReplyDelete
  3. kavalaikuriya visayam!

    kandu kolvaaralaa?

    ReplyDelete
  4. பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
    பணத்தைத் தேடி எடுப்பதற்கா?
    உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே
    உரைப்பதை காதில் கொள்வாரா? //

    சரியான சமயத்தில் சரியான கேள்வி
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பள்ளிக் கூடஙகள் பணம் பறிக்கும் இடமாய் மாறிப் போனதும், பிணி நீக்கும் மருத்துவர் சேவை மருத்துவத் தொழிலாக மாறிப் போனதும் காலத்தின் கோலம். இந்நிலை மாற வேண்டும் எனப்தே அனைவரின் விருப்பம். ஆதங்கத்தில் விளைந்த உங்களின் பா அருமை. (3)

    ReplyDelete
  6. // ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
    இருப்பது அரசுப் பள்ளிகளே!
    பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
    போவதே தனியார் பள்ளிகளே! //

    அய்யா கவலை வேண்டாம். அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான் நமது நாட்டில் பெரும்பாலும் கலெக்டர்களாக, தாசில்தார்களாக, அரசுத் துறையில் உயர் அதிகாரிகளாக, ஆசிரியர்களாக, விரிவுரையாளர்களாக இருக்கிறார்கள். தமிழ் நாட்டு நிர்வாகம் அவர்கள் கையில்தான்.

    ReplyDelete
  7. பள்ளிகள் தொடங்கி,பெற்றோர் செலவுதாங்காமல் விழி பிதுங்கி நிற்கும் நேரத்தில்,எல்லோர் மன ஆதங்கத்தையும் அருமையான கவிதையாக்கி விட்டீர்கள் ஐயா.

    ReplyDelete
  8. ்!
    எனவே,
    வாழவழியும அவர்க் குண்டா-கல்வி
    வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா?
    சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
    சொன்னதை முற்றும் ஆய்வாக!
    பாழும் ஏழை பணக்காரர்-என்ற
    பாகு பாடே குணக்கேடாம்!
    வீழும் கல்வி வளர்சிதான்-இது
    வேண்டுமா தனியார் பள்ளிகளே! //நல்ல சிந்தனைஅருமையாக எழுதி இருக்கின்றீர்கள்

    ReplyDelete
  9. //பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
    பணத்தைத் தேடி எடுப்பதற்கா? //

    எண்ணற்ற பெற்றோர்களின் மனக் குமுறலை ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள். நன்று!

    ReplyDelete
  10. T.N.MURALIDHARAN said

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  11. Seenisaid...


    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  12. Ramani said...

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  13. Ramani said...

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  14. பா.கணேஷ்said...
    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. தி.தமிழ் இளங்கோ said...

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  16. சென்னை பித்தன் said...


    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. ஸாதிகாsaid...

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. வே.நடனசபாபதி said...


    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  19. ஆதங்கங்களின் வெளிப்பாடு..:)

    இன்று நடிகர் சூர்யா கூட SMS மூலம் தான் படிப்புக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறேன் என அறிவித்துக் கொண்டிருக்கிறார் அவரைப் போன்றவர்களும் உங்களைப் போன்றவர்க்களும் கல்விக்கு கொடுக்கும் அக்கரை மிகப்பெரியதே...தொடருங்கள் உங்கள் விழிபுனர்வு கவிகளை...

    ReplyDelete
  20. வணக்கம் அய்யா, தங்கள வலை பூவிற்கு இன்று தான் முதலில் வருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகில் தொல்காப்பியம் கூறும் மரபு கவியை தற்காலத்தில் உங்கள் வார்த்தைகளில் இருந்து காண்கிறேன். மட்டற்ற மகிழ்ச்சி, புதுக் கவிதை ஓங்கி நிற்கும் வேளையிலே உங்கள் கவி தனி இடம் பிடித்துள்ளது

    // பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
    பணத்தைத் தேடி எடுப்பதற்கா? //

    //பாழும் ஏழை பணக்காரர்-என்ற
    பாகு பாடே குணக்கேடாம்! //

    மேற் கூறிய இரண்டு கூர்டுகளும் அதல் வழியும் நிலையம் நன் அறிவேன்,

    தொடருங்கள் உங்களைத் தொடர்கிறேன். நன்றி அய்யா

    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்




    தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்

    ReplyDelete
  21. பெற்றவர்கள் தம்தம் பிள்ளைகளின் மேலே
    நம்பிக்கை வைத்து அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும்.
    இந்த நம்பிக்கை இல்லாமல் பணத்தைக் கொட்டிக் கொடுத்து படிக்க வைக்க அவர்களே முன்வரும் போது
    நாம் தனியார் பள்ளிகளைக் குறைக்கூறி பயன் இல்லை ஐயா.
    முதலி எல்லாம் இந்த வாத்தியாரிடம் படித்தொம் என்பதைக் கௌரவமாகச் சொல்லிக் கொள்வார்களாம்.
    இப்பொழுது இந்த தனிவார் பள்ளியில் நான் படித்தேன் என்பதைத் தான் கௌரவமாகச் சொல்கிறார்கள்.
    இங்கே பள்ளிகளுக்குத் தான் முதல் இடம்.
    ஆசிரியர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது ஐயா.
    இங்கே பழியைப் பெற்றவர்களின் மீது போடுவது தான் பொருந்தும்.

    ReplyDelete
  22. ஆதங்க கவிதை ஐயா...

    ReplyDelete
  23. அருமையான பா. கல்விக்கூடங்கள் அனைத்தும் கொள்ளையர்களின் கூட்டங்கள்... எத்தனை பணமாவது கொடுத்து அங்கே சேர்க்கும் பெற்றோர்களையும் தான் கொஞ்சம் சொல்லவேண்டும்....

    ReplyDelete
  24. சிட்டுக்குருவி said...

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  25. சிட்டுக்குருவி said...

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  26. சீனு said..

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  27. AROUNA SELVAME said

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  28. ரெவெரி said...


    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  29. வெங்கட் நாகராஜ்said...

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  30. முன்பெல்லாம், நல்ல ஒழுக்கத்தையும், மனிதத்தையும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தன குருகுல கல்வி பாடசாலைகள்... இப்போதுள்ள கல்வி நிலையங்கள் பணம் அச்சடிக்கும் (சம்பாதிக்கும்) எந்திரத்தைதான் உருவாக்குகின்றன மனிதனை அல்ல.

    tha.ma 9

    ReplyDelete
  31. அருமை ஐயா. நீங்கள் அதை சொல்லும் போது அனைவரும் சிந்திப்பர்

    த. ம 10

    ReplyDelete
  32. முற்றிலும் உண்மை ஐயா..
    இன்று கல்விக் கூடங்கள்
    வணிகச் சந்தையாகிப் போயின...

    ReplyDelete
  33. ///முனைவர் பரமசிவம் said...
    உங்களோட ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போது தவறாம வயித்துவலி வந்துடுது. நான் உங்க பக்கத்தூர்க்காரன்தான்...நாமக்கல்லுங்க.///

    கட்டாயம் வருகிறேன்! ஈரோட்டில் எனக்கு ஒன்றும் கிடையாது. எனது இரண்டு தாத்தாக்கள் ஊர்; அவ்வளவு தான்; எனது அப்பாவின் இளைமைக்காலம் பள்ளி வரை அங்கெ! அம்மாவும் பிறந்து வளர்ந்து சென்னை தான். அப்புறம் அப்பா, St. Joseph Trichy, Guindy Engineering (now Anna university)...அப்பா அம்மா வசிப்பது சென்னையில்.

    கோவை செல்லும் போது ஈரோட்டை பார்ப்பேன். அது தான் எனக்கும் ஈரோடுக்கும் உள்ள "நெருங்கிய" சம்பந்தம்! நான் வரும் போது எங்க குலதெய்வம் பூஜை இருந்தால் வருவேன். குமாரபாளையதில்., "C.P.சென்னிமலை" அருகில் உள்ள ஒரு மிகச் சிறிய கிராமம்; அங்கு ஒன்றரை வீடுகள் உள்ளது; அது என்னா அரை வீடு? ஏனென்றால் அந்த வீட்டிற்கு கூரை கிடையாது!

    எங்க குலதெய்வம் குமாரபாளையத்தில் வேம்பரசு!(வேம்பு+அரச மரம்) இரண்டு மரங்கள்! நாங்களும் காட்டுமிராண்டி டோய்!

    சென்னிமலையை மக்களுக்கு நன்றாக அறிமுகப் படுத்தியதற்காக இனிமேல்...C.P.சென்னிமலை என்றும் அழைக்கலாம்!

    ReplyDelete
  34. வரலாற்று சுவடுகள் said..

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  35. மோகன் குமார் said..
    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  36. மகேந்திரன் said...

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  37. நம்பள்கி said...

    தங்கள் வரவுக்கு மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  38. நீயா ? நானா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உங்கள் கவிதைக்கான சாரம் குறித்து காண நேரிட்டது.காசு சம்பாதிப்பதுதான் முக்கியம்ங்கிற மாதிரி நிறைய கல்வியாளர்களும்,குறைந்த கட்டணம் வாங்கியே பள்ளி நடத்துகின்றேன் என்று ஒரே ஒருவர் மட்டும் வாதாடினார்கள்.

    நிகழ்ச்சியில் வென்றது என்னமோ குறைந்த கட்டணக்காரரே.

    ReplyDelete