Tuesday, June 12, 2012

பத்மஸ்ரீ விருது பெற்ற வெங்கடபதி ரெட்டியாருக்கு பாராட்டும் வாழ்த்தும்

          பத்மஸ்ரீ விருது பெற்ற இவரின் பள்ளிப்படிப்பு
  நாலாவது மட்டுமே! ஆனால் விவசாயத்துறையில்
  கற்றவர்களை விட மேலான ஆய்வு செய்து, சவுக்கு
  மரங்களையும்,கனகாம்பரப் பூக்கள் பல நிறங்களிலும்,
  பல மடங்கும் அமோக விளைச்சல் தர தன் இயற்கை
  அறிவின் மூலம் ஆய்ந்து வெற்றி கண்டார்
           விவசாய விஞ்ஞானி யான இவரது திறன் கண்டே,
 மத்திய அரசு, படிக்காத மேதையான இவருக்கு இவ் விருதினைத்
 தந்துப் பாராட்டியுள்ளது


 .
 படிக்காத மேதை யெனும் கெட்டியாரே-கூட
    பாக்கத்து விவசாயி ரெட்டி யாரே!
கொடுத்தாரே பத்மஸ்ரீ விருது யின்றே-நம்
    குடியரசு  தலைவரின் கையால் நன்றே!
எடுத்தாராம் உழுதொழிலும் பெருமை காண-ரெட்டி
   இனமக்கள் அனைவருமே மகிழ்ச்சி பூண!
தொடுத்தேனே ரெட்டிமலர் கண்டுப் பாவே-மேலும்
   தொடரட்டும் நல்லாய்வு புதுவைக் கோவே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வா ரென்றே-தம்
   உள்ளத்தில் தெளிவான உறுதி நின்றே!
பழுதுண்டு போனராம் பாடு பட்டும்-அதில்
   பலனின்றி பல்வகையில் மனமே கெட்டும்
தொழுதுண்டு வாழவும் தோன்ற வில்லை-வேறு
  தொழில்செய்ய அனுபவம் ஏது மில்லை!
அழுதுண்டு முடங்கிட எண்ண வில்லை-பல
   ஆய்வுகள்! முயற்சிகள்! உண்டோ! எல்லை!

பூவிலே அவர்கண்ட முயற்சி வெற்றி-சவுக்குப்
    போடுவதில் அவர்கண்ட முயற்சி வெற்றி!
மேவினார் வெங்கட பதியும் வெற்றி-மிக
    மேலான விருதுக்கும் பெற்றார் வெற்றி!
பாவிலே சொல்வதா அவரின் வெற்றி-அவர்
   பள்ளியே வயல்தானே! தந்த வெற்றி!
ஆய்விலே படித்தவரும் காணா வெற்றி-இவர்
   அனுபவம் கண்டதே வெற்றி! வெற்றி!


வருத்தமுற அவர்சொன்ன செய்தி யொன்றே-நம்மை
    வாட்டுகின்ற நிலைதானே கண்டோ மின்றே!
திருத்தமுற ஆய்ந்தேதான் விருது தந்தார்-அங்கே
   தேடிவந்து வாழ்துவரோ? இல்லை! நொந்தார்!
நடிகர்களை! கலைஞர்களை! தேடிச் சென்றே-அரசியல்
   நடிகர்கள்! அலுவலர்! அருகில் நின்றே
பிடிகவெனப் புகைப்படமும் எடுத்துக் கொள்ள-இவர்
  பேச்சற்று நின்றாராம் துயரம் தள்ள!

உலகுக்கே அச்சாணி உழவர் என்றார்-அங்கோர்
   உழவரைத் துச்சமாய் விலக்கிச் சென்றார்!
நிலவுக்கே சென்றாலும் பயனென் உண்டே-பசி
    நீங்கிடச் செய்வது உழவன் தொண்டே!
இலவுக்குக் காத்தகிளி ஆவார் ஒருநாள்-அது
   இன்றல்ல! என்றாலும் வருமே அந்நாள்!
பலகற்றும் கல்லாரே! அறிவார் நன்றே-அழி
    பசிவர அனைத்தும் பறக்கும் அன்றே!

                    புலவர் சா இராமாநுசம்

29 comments:

  1. வணக்கம் ஐயா!
    பத்மஸ்ரீ விருது பெற்ற வெங்கடபதி ரெட்டியார் அவர்களுக்கு கவி மூலம் தொடுத்த மாலையில் என் வாழ்த்தையும் கோர்த்துக் கொள்ளுகின்றேன்.....

    ReplyDelete
  2. இப்படி ஒருவருக்கு விருது கிடைத்தது என்பது எங்களைப் போன்ற பலருக்குத் தெரியாது. அதற்காக நாங்கள் வெட்க படுகிறோம் ஊடகங்கள் கலைத்துறையில் உள்ளவர்கள் விருதுபெற்றால் அதை பெரிய செய்தியாக்கி விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். ஆனால் ரெட்டியார் போன்று உழைப்பவர்களுக்கு எந்த விளம்பரமும் கிடைப்பதில்லை என்பது வேதனை. தாங்கள் வாழ்த்துப் பா பாடியது ஒரு ஆறுதல்.

    ReplyDelete
  3. பத்மஸ்ரீ விருது பெற்ற வெங்கடபதி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்....

    அழகான பா மூலம் உங்கள் வாழ்த்து.... ரசித்தேன்...

    ReplyDelete
  4. மனம் இனிக்கும் செய்தி ஒன்றை
    இனிதாய் சொன்னீர்கள் ஐயா..
    விவசாயத் துறையை
    கண்டுகொள்ளாமல் இருக்கும் சூழ்நிலையில்
    ஐயா வெங்கடபதி ரெட்டியாருக்கு இந்த
    விருதைக் கொடுத்ததன் மூலம்
    அந்த விருதுக்கே பெருமை
    கிடைத்தது ஐயா..

    ReplyDelete
  5. விருதுக்காக அவருக்கும் பகிர்ந்தமைக்காக உங்களுக்கும் வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete
  6. வழமையான உங்கள் வரிகளின் வீரியம் குறையவில்லை...

    விருது பெற்றவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. முகநூலில் தான் இவரை பற்றி முதலில் படித்து தெரிந்துகொண்டேன் ஐயா., நிறைய பேருக்கு இன்னும் இவரை பற்றி சரி வர தெரியவில்லை :(

    பா மாலையால் அவருக்கு வாழ்த்து கூறியமை நன்று..!

    ReplyDelete
  8. வீடு சுரேஸ்குமார் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  9. T.N.MURALIDHARANsaid...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  10. வெங்கட் நாகராஜ் said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  11. மகேந்திரன்said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  12. அமர பாரதி said


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  13. சிட்டுக்குருவி said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  14. வரலாற்று சுவடுகள் said...



    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. முரளிதரன் சொன்னது மிகச் சரி. இவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்ததில் வருத்தமும். இப்போது உங்களின் அழகிய பா மூலம் அறிந்து கொண்டதில் மிகமிக மகிழ்வும் அடைகிறேன். அவருக்கு என் உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. உங்கள் கவிதையைப் படித்த பிறகு பத்மஸ்ரீ பெற்ற வெங்கடபதி ரெட்டியார் பற்றி கூகிளில் சென்று தெரிந்து கொண்டேன். இதற்காக உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  17. பத்மஸ்ரீ விருது பெற்ற வெங்கடபதி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்.
    Tha.ma.7

    ReplyDelete
  18. பெருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  19. உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்!
    த.ம.8

    ReplyDelete
  20. // விவசாயத்துறையில்
    கற்றவர்களை விட மேலான ஆய்வு செய்து, சவுக்கு
    மரங்களையும்,கனகாம்பரப் பூக்கள் பல நிறங்களிலும்,
    பல மடங்கும் அமோக விளைச்சல் தர தன் இயற்கை
    அறிவின் மூலம் ஆய்ந்து வெற்றி கண்டார்.//

    வேளாண் அறிவியல் படித்தவன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன். ஆனால் அவரை நம்மவர்கள் கண்டு கொள்ளவில்லையே என அறியும்பொது வெட்கப்படுகிறேன். அவரை கவிதை மூலம் வாழ்த்திய தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. நடிகர்களை! கலைஞர்களை! தேடிச் சென்றே-அரசியல்
    நடிகர்கள்! அலுவலர்! அருகில் நின்றே
    பிடிகவெனப் புகைப்படமும் எடுத்துக் கொள்ள-இவர்
    பேச்சற்று நின்றாராம் துயரம் தள்ள!

    கவலை தோய்ந்த வரிகள்

    உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  22. பா.கணேஷ் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  23. தி.தமிழ் இளங்கோ said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. Sasi Kalasaid...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  25. பழனி.கந்தசாமி said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  26. சென்னை பித்தன்said

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  27. வே.நடனசபாபதி said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  28. AROUNA SELVAMEsaid...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  29. பத்மஸ்ரீ விருது பெற்ற வெங்கடபதி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete