தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரி
தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்!
வேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக
வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்!
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
போகவில்லை!அறிந்தின்று! சிறுமைப் பட்டோம்!
ஆண்டாரே, ஆள்வோரே எண்ணிப் பாரும்-இந்த
அவலத்தைப் போக்கவழி விரைந்துக் கூறும்!
ஊராட்சி தலைவரென தலித்தும் வந்தால்-அவர்
உட்கார நாற்காலி ஒன்று தந்தால்!
பாராட்சி போனதெனல், சாதி வெறியே-நற்
பண்பல்ல! ஒம்புங்கள் உயர்ந்த நெறியே!
யாராட்சி செய்தாலும் மனிதன் தானே-என்ற
எண்ணமின்றி நடப்பது அனைத்தும் வீணே!
சீராட்சி நடந்திட வழியே காண்பீர்-சாதிச்
சிந்தனையை ஒழித்திடவே உறுதி பூண்பீர்!
ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-அது
ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை!
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
நிலைப்பது ஒற்றுமை காணும் ஒன்றா?
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை!-நம்முள்
சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை!
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்!
ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என
உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்!
நன்றேதான் அதுவென்றே ஏற்றுக் கொண்டோம-நம்
நாடெங்கும் கொள்கையென பரப்பி விண்டோம்!
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே!
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
ஏங்கிட நீங்குமா சாதி மடமை!
சா இராமாநுசம்
அய்யா!
ReplyDeleteஉங்கள் ஆதங்கம் புரிகிறது-
ஆனால் தீண்டாமை ஒழியுமா?
ஒழியும்!
மக்கள் 'சிந்தித்தால்'........
உங்கள் கருது வரவேற்க தக்கது!
உலகத்தில் கடைசி மனிதன் உயிரோடு இருக்கும் வரை இந்த சாதி அழியாது ஐயா., கொடுமையான விஷயம் இது :(
ReplyDeletesupper...
ReplyDeleteஐயா நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டியது இந்த சாதிக்கொடுமை.மரபு நிலை சமுகம் மறுத்தாலும் இனியேனும் மாற்றங்கள் உருவாக வேண்டும் கட்டாயம்.
ReplyDelete// என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
ReplyDeleteஏங்கிட நீங்குமா சாதி மடமை! //
உங்களைப் போன்ற ஆசிரியப் பெருமக்கள் இப்போது பள்ளிகளில் இருந்தால் நிச்சயம் இந்த மடமை நீங்கும்.
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
- பாடல்: கண்ணதாசன் ( படம்: பணக்கார குடும்பம் )
அற்புதம்
ReplyDelete///வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteஉலகத்தில் கடைசி மனிதன் உயிரோடு இருக்கும் வரை இந்த சாதி அழியாது ஐயா., கொடுமையான விஷயம் இது :///
உலகத்தில் அல்ல! இந்த சாதி என்ற வியாதி இந்தியாவின் என்ற நாட்டிற்கே உரித்தானது!
தூங்கரவனை எழுப்பலாம்; தூங்குரா மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது. உலகத்தில் இருக்கும் எல்லா கொடுமைகளுக்கும் புகை தான் காரணம் என்று சிலர் நினைக்கிறார்கள்; தவறு. பாருங்கள் இதை..
ReplyDeleteஇந்தியாவில் புகைபிடித்தால் தப்பேயில்லை; தொடர், பகுதி-1
http://www.nambalki.com/2012/06/1.html
சமூக நீதியை மட்டும் எவனும் தொடக கூடாது! மலம் அள்ளுவது தவறு என்றால், அதற்கு போராடுவார்களாம்! இதை இங்கு (அமெரிக்காவில்) சொன்னால் அதில மட்டும் தான் சிரிப்பார்கள்; எதற்கு போராடுவது என்ற விவஸ்தையே இந்தியாவில் எந்த “சமூக நீதி காக்கும் புயல்களுக்கு” கிடையாது.
அது என்ன புரட்சிப் புயல், வைகைப் புயல் மாதிரி! சமூக நீதி காக்கும் புயல்! நல்ல கூத்துபா!
மலம் அள்ளுவது தவறு என்று கோர்ட்டுக்குப் போகணுமாம்! தயவு செய்து எந்தனாடிலேயும் பொய் இதை சொல்லிவிடவேண்டாம்! இதுக்கும் நாங்க கோர்ட்டுக்கு தான் போகணும் என்று!
மனிதர்தம் மனங்களில் சாதி பற்றிய எண்ணம் ஒழிந்தாலேயன்றி இக்கொடுமைக்கு முடிவில்லை. அழகிய கவிதையாய் சொன்னதை மிக ரசித்தேன்!
ReplyDeleteSeeni said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள்said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
எஸ்தர் சபி said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
Athisayasaid...
ReplyDeleteவாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
முஹம்மது யாஸிர் அரபாத்said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
நம்பள்கி said
ReplyDeleteவாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
நம்பள்கி said
ReplyDeleteவாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
பா.கணேஷ்said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
மனங்களை மதிக்கும் நிலை வந்தால்தான் மதம், இனம், சாதி வேற்றுமைகள் ஒழியும். ஆதங்கம் தீரும் நாள் விரைவில் வருமென்றே நம்பிக்கை கொள்வோம். மனந்தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.
ReplyDelete“யாராட்சி செய்தாலும் மனிதன் தானே-என்ற
ReplyDeleteஎண்ணமின்றி நடப்பது அனைத்தும் வீணே!“
பதவிக்கு வந்து விட்டால் கடவுள் என்ற எண்ணம் வந்துவிடுவதை அழகாக ஆழமாக சொல்லியிருக்கிறீர்கள் புலவர் ஐயா.
“உலகத்தில் அல்ல! இந்த சாதி என்ற வியாதி இந்தியா என்ற நாட்டிற்கே உரித்தானது!“ -நம்பள்கி கருத்து உண்மையிலும் உண்மை. சாதி என்ற வியாதி தொத்து வியாதியாக இல்லாத வரையில் மற்ற நாடுகளுக்கு நன்மை தான்.
மனிதனென்ற ஓரினமே
ReplyDeleteவேறு ஒரு இனமில்லையென
இயம்பிடுகவென உரைத்திட்ட
கவிக்கரு அருமை ஐயா...
ஆதியில் இருந்த மனிதர்களிடத்தில் ஜாதிகள் இருந்ததில்லை.
ReplyDeleteபாதியில் வந்து பாதகம் செய்தது இதுபோல் எதுவுமில்லை.
என்ற கருத்தை வலியுறுத்தியது நன்று.