Saturday, June 2, 2012

மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்!


உண்ணும் உணவும் நஞ்சாகும்-நாம்
     உட்கொள்ளும் மருந்தும் நஞ்சாகும்
எண்ணும் எண்ணமும் நஞ்சாகும்-நம்
     எழுதும் எழுத்தும் நஞ்சாகும்
கண்ணும் பார்வையால் நஞ்சாகும்-சில
     கருத்துகள் கூட நஞ்சாகும்
பண்ணும் பாடலில் நஞ்சாகும்-இறை
    படைப்பில் சிலவும் நஞ்சாகும்

காற்றும் இன்றே  நஞ்சாகும்-அலை
    கடல்தரும் உணவும் நஞ்சாகும்
தூற்றும் குணமே நஞ்சாகும்-உற்ற
    துணையே சிலருக்கு நஞ்சாகும்
போற்றும் போலிகள் நஞ்சாகும்-சேர்த்த
    பொருளும் சிலருக்கு நஞ்சாகும்
ஆற்றல் மிகுதியும் நஞ்சாகும்-ஏதும்
    அறியா நிலையும் நஞ்சாகும்

உற்றார் சிலரும்  நஞ்சாகும்-பெற்ற
      உரிமையும் கூட நஞ்சாகும்
பெற்றவர் பிள்ளைக்கே  நஞ்சாகும்-சில
      பிள்ளைகள் அதுபோல் நஞ்சாகும்
கற்றநல் கல்வியே நஞ்சாகும்-அதை
      கல்லார் வாழ்வும் நஞ்சாகும்
மற்றவை பலவே நஞ்சாகும்-இதை
     மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்


            புலவர் சா இராமாநுசம்


19 comments:

  1. வலையுலகில் வெண்பா கவிதை வடிப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே.., அருமை ஐயா ..!

    ReplyDelete
  2. அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சென்பார். தமிழும் தங்கள் கவிதையும் விதிவிலக்கு. எத்தனைமுறை படித்தாலும் நெஞ்சம் நிறைத்து, உள்ளத்தை, உணர்வை உயிர்ப்பிக்கும் அதிசயம். பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  3. தொடர்ந்து அருமையான கவிதைகளை வழங்கி வருகிறீர்கள்.. அருமை..

    ReplyDelete
  4. ம்ம்ம்ம்ம் அருமையான கவி ஜயா...

    ReplyDelete
  5. அருமையான கவிதை! கீதமஞ்சரியின் வார்த்தைகளை அப்படியே வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  6. நல்ல கவிதை. ரசித்தேன் புலவரே.....

    ReplyDelete
  7. நஞ்சுகளின் பட்டியல் நற்றமிழில் தந்தீர்-அய்யா!
    நெஞ்சில்அது நினைக்கும் வண்ணம் நன்குரைத்தீர்!
    த.ம. 3

    ReplyDelete
  8. எப்படி அனைத்துமே நஞ்சாகும்? என ஆச்சரியத்தோடு படித்தேன் ஐயா! கடைசி வரியில் புரிந்துகொண்டேன்! மிக்க நன்றி ஐயா! அழகிய கவிதை :-)))

    ReplyDelete
  9. வரலாற்று சுவடுகள் said...


    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!வாழ்த்துக்கும்
    நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  10. கீதமஞ்சரிsaid...

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!வாழ்த்துக்கும்
    நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  11. கோவி said...



    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!வாழ்த்துக்கும்
    நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  12. Seenisaid...


    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!வாழ்த்துக்கும்
    நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  13. எஸ்தர் சபி said...


    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!வாழ்த்துக்கும்
    நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  14. பா.கணேஷ்said...

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!வாழ்த்துக்கும்
    நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. வெங்கட் நாகராஜ் said...


    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!வாழ்த்துக்கும்
    நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  16. T.N.MURALIDHARANsaid...

    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!வாழ்த்துக்கும்
    நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. மாத்தியோசி - மணி said...


    அன்பான வருகைக்கு மிக்க நன்றி!வாழ்த்துக்கும்
    நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. வாழ்வின் அனுபவங்களை எப்பிடியெல்லாம் சொல்லித்தருகிறீர்கள் ஐயா.வாழ்வைப் படித்துக்கொண்டிருக்கலாம்போல இருக்கு !

    ReplyDelete