அவலம் அவலம்! அவலம் தானே!-இங்கே
அரசியல் கட்சிகள்! காட்சிகள்! தானே!
கவலை கவலை! கவலை தானே!-நாம்
காண்பது இன்றே கவலை தானே!
மத்தியில் கூட்டாம் பொரியல் தானே-இங்கே
மத்தியில் கூட்டாம் பொரியல் தானே-இங்கே
மக்கள் மத்தியில் மறியல் தானே!
புத்தியில் மக்களாய் ஆனோம் தானே-நாம்
புரிந்தும் மறந்து போவோம் தானே!
அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
அடுக்குமா? சொல்லியும் பலனே இலையே!
சும்மா அவரும் நடத்து கின்றார்-நமக்கு
சுரணை இலையெனக் காட்டு கின்றார்!
பேருந்து கட்டணம் குறைய வில்லை-அதைப்
பேருந்து கட்டணம் குறைய வில்லை-அதைப்
பேசிட கேட்கவும் நாதி இல்லை!
சீரின்றி மின்கட்டணம் உயர்ந் ஒல்லை-அதைச்
செப்பிடின் வருவதோ பீதி எல்லை!
போலிகள் நடத்தும் நாடகம் தானே-செய்தி
போலிகள் நடத்தும் நாடகம் தானே-செய்தி
போடும் இங்குள ஊடகம் தானே!
கேலிக்கே உரியன இப்போ ராட்டம்-ஓட்டு
கேட்கவா இத்தகைஆர் பாட்டம்!
மருமகள் உடைத்ததும் மண்கு டமாம்!-அங்கே
மருமகள் உடைத்ததும் மண்கு டமாம்!-அங்கே
மாமியார் உடைத்ததும் மண்கு டமாம்!
அருகதை இல்லையே இருவ ருக்கும்-வீண்
ஆர்பாட்டம் செய்வது அருவ ருக்கும்!
இரட்டை வேடமே போடு கின்றார்-இங்கே
இரட்டை வேடமே போடு கின்றார்-இங்கே
ஏழைக்குக் கேடே தேடு கின்றார்!
அரட்டை அரங்கமே ஆகின் றதாம்-நமை
ஆளவோர் செயலும் போகின் றதாம்!
மௌனம் சம்மதம் என்ப தல்ல-மக்கள்
மௌனம் சம்மதம் என்ப தல்ல-மக்கள்
மனதில் இருப்பது மறதி யல்ல!
கவனத்தி கொண்டால் மீள்வ துண்டே-மேலும்
கனிவுடன் செயல்படின் ஆள்வ துண்டே!
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம்
Arumaiyaana kavi aiya.... Ippadiyaana kavikalin moolamaavathu thirunthattum ullangkal.....from mobile
ReplyDeleteஎன்னத்தைச் சொல்லி என்ன ஐயா...செவிட்டுப் பிடாரிகளிடம் !
ReplyDelete/அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
ReplyDeleteஅடுக்குமா? சொல்லியும் பலனே இலையே!
சும்மா அவரும் நடத்து கின்றார்-நமக்கு
சுரணை இலையெனக் காட்டு கின்றார்!
//
ஹா .ஹா . செம நக்கல்
எல்லா சுமையும் தாங்க சுமைதாங்கியாக நாம் இருக்கிறோமே
ReplyDeleteஇன்று
ReplyDeleteதமிழர் வரலாற்றை மறைக்கும் மத்திய அரசு - பூம்புகாரின் உண்மை வரலாறு என்ன ?
nalla saattai adikal!
ReplyDeleteaatchiyaalarkalukkum-
vaakku aliththavarkalukkum!
vaazhthukkal!
//மௌனம் சம்மதம் என்ப தல்ல-மக்கள்
ReplyDeleteமனதில் இருப்பது மறதி யல்ல!
கவனத்தி கொண்டால் மீள்வ துண்டே-மேலும்
கனிவுடன் செயல்படின் ஆள்வ துண்டே!///
தமிழகத்தில் கடந்த தேர்தலில் முந்தைய ஆட்சிக்கு உணர்த்தினோமே அதற்குள்ளாகவே மறந்துபோனார்களே இப்போது ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் .. :(
எத்தனை சொன்னாலும் புரியப் போவதில்லை இந்த அரசியல்வாதிகளுக்கு! மக்களுக்கும்....
ReplyDeleteநல்ல பா புலவரே.
நாம கத்தி என்ன வாறது ஜயா.. அவங்க புரிய வேணுமே....
ReplyDeleteதகுந்த இடித்துரைகள் ஐயா...
ReplyDeleteஒருநாள் கூத்திற்கு மீசையை வைத்து மேடையிலே ஆட்டம் போட்ட அரசியல்வாதிகளின், போலி வேடத்தை படமெடுத்துக் காட்டிய கவிதை!
ReplyDelete//போலிகள் நடத்தும் நாடகம் தானே-செய்தி
ReplyDeleteபோடும் இங்குள ஊடகம் தானே!
கேலிக்கே உரியன இப்போ ராட்டம்-ஓட்டு
கேட்கவா இத்தகைஆர் பாட்டம்!... இது உண்மை என்று தெரியா மக்கள் கூட்டம்... அடுத்த முறையும் போடுமே போடுமே பண ஆட்டம்...
அரசியலின் இன்றைய யதார்த்தம் அப்படியே கவிதையில்....!
ReplyDeleteஅருகதை இல்லையே இருவ ருக்கும்-வீண்
ReplyDeleteஆர்பாட்டம் செய்வது அறுவ ருக்கும்!
அருவருக்கும் என்றிருக்க வேண்டுமோ? அருவருப்பு தானே நீங்கள் சொல்ல வந்தது.. அறுவருக்கும் என்றால் ஆறு பேருக்கும் என்று பொருள் வருமே..
சிட்டுக்குருவி said...
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
ஹேமாsaid...
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteவந்தேன் ! படித்தேன்
சா இராமாநுசம்
Seeni said...
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
எஸ்தர் சபிsaid...
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
தி.தமிழ் இளங்கோ said.
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
GowRami Ramanujam Solaimalai said..
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
மாத்தியோசி - மணி said.
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
ரிஷபன் said...
ReplyDeleteஅன்பின் ஐய!
தாங்கள் சுட்டிய பிழை உண்மையே!
கவனிக்கத் தவறி விட்டேன்! திருத்திவிடுகிறேன்
நன்றி!
அன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
ReplyDeleteஅடுக்குமா? சொல்லியும் பலனே இலையே!
சும்மா அவரும் நடத்து கின்றார்-நமக்கு
சுரணை இலையெனக் காட்டு கின்றார்!
மனதை வாட்டுகிறது இந்த வரிகள்:(...
அம்பாளடியாள் said...
ReplyDeleteஅன்பான வருகைக்கு மிக்க நன்றி!
சா இராமாநுசம்
கவிதை அருமை ஐயா. நன்றிங்க.
ReplyDeleteஅடுத்தமுறை “செவிடனுக்குச் சங்கெதற்கு“ என்ற தலைப்பில் எங்களுக்கு கவிதை கொடுங்கள்.
நன்றிங்க ஐயா.