ஓடு மனிதா நீஓடு-இவ்
உலகம் அழியா வழிநாடு!
தேடு மனிதா நீதேடு-உன்
தேவை எதுவோ அதைநாடு!
சுயமாய் சிந்தனை செய்வாயா-உன்
சொந்தக் காலில் நிற்பாயா?
பயமே இன்றி செயலேற்று-நல்
பயன்தரக் காண்பாய் நீயாற்று!
தோல்வி வரினும் துவளாதே-உடன்
தொடர்ந்து முயலத் தயங்காதே!
வேள்வி என்றே பாடுபட- வரும்
வேதனை முற்றும் தவிடுபட!
முயற்சி ஒன்றே உருவாக்கும்-நம்
முன்னோர் மொழிந்தத் திருவாக்கும்!
அயற்சி போக்கும் அறிவாயா-நாளும்
அவ்வழி செயலும் புரிவாயா!
இன்னார் இனியர் பாராதே-ஏதும்
இல்லை என்றே கூறாதே!
உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
உதவின் அதுவே பேரளவே!
அன்பின் வழியது உயிர்நிலையே-நம்
ஐயன் சொன்னது பொய்யிலையே!
என்பும் தோலைப் போர்த்தியதே-அன்பு
இல்லா உடம்பு ஆகியதே!
காலமும் இடமும் கருதிடுவாய்-ஏற்றக்
காரிய மாற்ற முனைந்திடுவாய்!
ஞாலம் போற்ற வாழ்ந்திடுவாய்-நாடு
நலம்பெற பல்வழி சூழ்ந்திடுவாய்!
புலவர் சா இராமாநுசம்
இனிய காலை வணக்கம் ஜயா
ReplyDeleteகாலையில் ஒரு அழகான கவிதையை படித்த திருப்த்தி
இன்னார் இனியர் பாராதே-ஏதும்
ReplyDeleteஇல்லை என்றே கூறாதே!
உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
உதவின் அதுவே பேரளவே!
இதைப் பின்பற்றினாலே மகிழ்ச்சி நிச்சயம் !
நல்ல கருத்துள்ள கவிதை ஐயா....
ReplyDeleteநானும் ரிஷபன் சொன்னதுக்கு ஓ போடுறன்...மிக அருமையான கவிதை ஐயா...
ReplyDeleteமளிதன் ஓடிக் கொண்டுதான் இருக்கனும் ஜயா..
ReplyDelete////இன்னார் இனியர் பாராதே-ஏதும்
ReplyDeleteஇல்லை என்றே கூறாதே!
உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
உதவின் அதுவே பேரளவே!/////
நான் ரசித்த அருமையான வரிகள்., அருமையான ஆக்கம் ஐயா ..!
உன்னால் முடிந்தது ஓரளவே. நீ முயன்றால் அதுவே பேரளவே - அருமையன வரிகள் ஐயா. நல்ல கருத்துள்ள கவிதையைப் படித்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteதன்முனைப்பு கருத்துக்கள் கூறும் அருமையான கவியாக்கம், ஐயா.
ReplyDeleteகரு கொண்ட நாள்முதலே ஓட்டம் தானே!
குறள் வழிக் கருத்துக்களை இங்கே
ReplyDeleteஒருங்கிணையக் கண்டேன் ஐயா.
நல்வழி வாழ்ந்திடுவோம்
நற்பலன் பெற்றிடுவோம்.
thathuvangal-ayya!
ReplyDeleteK.s.s.Rajh said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
ரிஷபன்said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
சிட்டுக்குருவிsaid...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
எஸ்தர் சபி said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள்said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
பா.கணேஷ் said
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
சத்ரியன்said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
Seenisaid...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
எங்களின் பண்பாட்டு விழுமியங்களுக்குள் ‘உதவி’யும் முன் நிற்கிறதே.முடிந்தவரை உதவி செய்து அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்துவோம் !
ReplyDeleteஹேமா said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
அருமையான கவிதை.
ReplyDeleteவணங்குகிறேன் புலவர் ஐயா.
AROUNA SELVAME said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
காலையில் ஒரு அழகான கவிதையை படித்த திருப்தி ஜயா ...
ReplyDeleteதட்டுதடுமாறும் நெஞ்சினருக்கு தன்னம்பிக்கையும் நன்னம்பிக்கையும் தரும் கவிதை.
ReplyDeleteஇனிய கவிதை நடை அய்யா..
ReplyDeleteசிறப்பான கருத்து.அருமையான கவிதை
ReplyDeleteரெவெரி said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
தி.தமிழ் இளங்கோ said.
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
கோவி said..
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
சென்னை பித்தன் said.
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
மனதினில் உள்ள சுமைகளை வலிகளைப்
ReplyDeleteபோக்க வல்லதோர் அரு மருந்தொன்றினைக்
கண்டேன் அருமை!...அனுபவமும் கவி நயமும்
நிறைந்த தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி ஐயா...
//இன்னார் இனியர் பாராதே-ஏதும்
ReplyDeleteஇல்லை என்றே கூறாதே!
உன்னால் முடிந்தது, ஒரளவே-நீ
உதவின் அதுவே பேரளவே!//
நல்ல பாடம்!அழகு தமிழில் அழகான கருத்துக்கள்.
அழகான வரிகள் .. அருமையான கவிதை
ReplyDeleteஅம்பாளடியாள் said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
T.N.MURALIDHARAN said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteமிக்க நன்றி!
சா இராமாநுசம்
"என் ராஜபாட்டை"- ராஜா said
ReplyDeleteதங்கள் வலை திறக்க மறுக்கிறது மீண்டும்
முயலவேன்!
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
பள்ளிக் குழந்தைகளுக்கு பாடநூலில் சேர்த்துப் பயிற்றுவித்தால் எதிர்காலத்தில் அவர்களை நல்ல குடிமக்களாய் வளர்க்க உதவும். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய அருமையான வாழ்வியல் வழிகாட்டியான கவிதை வரிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.
ReplyDelete