கோடைக் காலம் வந்து துவே
கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே!
ஆடை முழுதும் நனைந் திடவே
ஆனதே குளித்த தாய் ஆகிடவே!
ஓடை போல நிலமெல் லாம்
உருவம் காண வெடித் தனவே!
வீ(ட்)டை விட்டே வெளி வரவே
விரும்பா நிலையை அனல் தரவே!
பச்சைப் பயிரும் பொசுங்கி டவே
பசுமை முற்றும் நீங்கி டவே!
உச்சியில் வெய்யில் வந்த தெனில்
உடம்பைத் தீயென தொட்ட தனல்!
மூச்சை இழுத் தால் அக்காற்றும்
மூக்கை சுடவே அனல் மாற்றும்!
சேச்சே என்ன வெயி லென
செப்பிட வார்தை செவி விழுமே!
பத்து மணிக்கே பகல் தன்னில்
பாதம் பட்டால் சுடும் மண்ணில்!
எத்தனை வேகம் காட்டு கின்றார்
எங்கே நிழலெனத் தேடு கின்றார்!
இத்தனை நாள் போல் வீட்டோடு
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு!
பித்தனைப் போலவர் தமக் குள்ளே
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே!
வற்றிய நீர்நிலை இல் லாமே
வளர்ந்த புல்பூண் டெல் லாமே!
பற்றி எரிய முற்ற றாக
பறந்திடக் காற்றில பஞ் சாக!
வெற்றிடம் தன்னில் கால் நடைகள்
வெறுமையாய் வாயை மென்றி டவே!
சுற்றி சுற்றி மேய்ந் தாலும்
சுருண்டது அந்தோ பசி யாலே!
புலவர் சா இராமாநுசம்
கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே!
ஆடை முழுதும் நனைந் திடவே
ஆனதே குளித்த தாய் ஆகிடவே!
ஓடை போல நிலமெல் லாம்
உருவம் காண வெடித் தனவே!
வீ(ட்)டை விட்டே வெளி வரவே
விரும்பா நிலையை அனல் தரவே!
பச்சைப் பயிரும் பொசுங்கி டவே
பசுமை முற்றும் நீங்கி டவே!
உச்சியில் வெய்யில் வந்த தெனில்
உடம்பைத் தீயென தொட்ட தனல்!
மூச்சை இழுத் தால் அக்காற்றும்
மூக்கை சுடவே அனல் மாற்றும்!
சேச்சே என்ன வெயி லென
செப்பிட வார்தை செவி விழுமே!
பத்து மணிக்கே பகல் தன்னில்
பாதம் பட்டால் சுடும் மண்ணில்!
எத்தனை வேகம் காட்டு கின்றார்
எங்கே நிழலெனத் தேடு கின்றார்!
இத்தனை நாள் போல் வீட்டோடு
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு!
பித்தனைப் போலவர் தமக் குள்ளே
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே!
வற்றிய நீர்நிலை இல் லாமே
வளர்ந்த புல்பூண் டெல் லாமே!
பற்றி எரிய முற்ற றாக
பறந்திடக் காற்றில பஞ் சாக!
வெற்றிடம் தன்னில் கால் நடைகள்
வெறுமையாய் வாயை மென்றி டவே!
சுற்றி சுற்றி மேய்ந் தாலும்
சுருண்டது அந்தோ பசி யாலே!
புலவர் சா இராமாநுசம்
ஐயா..
ReplyDeleteகோடையின் கொடுமையான
தாக்கத்திற்கு குளிர்ச்சியால் ஒரு
இளநீர் குடித்தது போல உள்ளது
தங்களின் கவிதை ..
கோடையின் கொடுமையை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்
ReplyDeleteஆயினும் நல்ல கோடைதானே நல்ல மழைக்காலத்திற்கு அச்சாரம்
காய வேண்டியது நன்றாகக் காய்ந்தால்தானே
பெய்ய வேண்டியதும் சரியாகப் பெய்யும் ?
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
Tha.ma 2
ReplyDeleteகோடையின் வெம்மையால் படுகிற அவஸ்தையை அழகிய கவிதையாய்ப் படித்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteகோடை தந்தது கொடுமை!ஆனால்
ReplyDeleteகவிதை தந்தது குளுமை
கோடை பசும்புல் காய வைத்திடலாம்.
பைந்தமிழை காய வைத்திடுமோ?
கோடையின் கொடுமை மாரியை விட மோசம் ஜயா
ReplyDeleteஉங்கள் கவியை சொல்ல வேண்டுமா?? அருமை..
வணக்கம் ஐயா,
ReplyDeleteநலமா?
கோடையின் கொடும் வெப்பத்தினை உணர்த்தி, வரவேற்பு கவிதையாக வெப்பத்தில் வாடிடும் உயிர்களுக்கு உணர்வூட்டும் வண்ணம் ஓர் கவி கொடுத்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
வெயிலின் கொடுமைக்கு உங்கள் கவி ஆறுதலாய் இருக்கிறது
ReplyDeleteகொடுங்கோடையும் கடுங்குளிரும் வருவது இயற்கை எனினும்,சொல்லிப் புலம்பாமல் இருக்க இயலவில்லையே!நல்ல கவிதி.
ReplyDeleteஐந்தறிவு உயிர்களும் அவதிப்படும் கோடையின் வெங்கொடுமையை உரைக்கும் வரிகளிலும் வெம்மை உணர்ந்தேன். புலவர் வாயால் பாடப்பெறுவது கோடையானாலும் தமிழின் கொடையெனவே கொண்டாடப்படும். பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteவணக்கம் ஐயா! கோடை பற்றிய கவிதை அழகு!
ReplyDeleteவெற்றிடம் தன்னில் கால் நடைகள்
வெறுமையாய் வாயை மென்றி டவே!
சுற்றி சுற்றி மேய்ந் தாலும்
சுருண்டது அந்தோ பசி யாலே!
கோடையின் கொடுமையினை மிக அழகாகப் படம் பிடிக்கும் இடம் இது!
ஒன்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் ஐயா!
இங்கு ஃபிரான்ஸில், நேற்றுத்தான் கடுமையான வெயில் எறித்து முறைப்படி கோடை தொடங்கியது!உண்மையில் மார்ச் மாத நடுப்பகுதியில் வரவேண்டிய கோடை இம்முறை மிகவும் தாமதித்துவிட்டது!
நேற்றைய நாளில் உங்கள் கவிதை வெளியானது இன்னும் சிறப்பானது!
மகேந்திரன் said...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
Ramanisaid...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
Ramanisaid...
ReplyDeleteவாக்களித்தீர் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
கணேஷ் said...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
T.N.MURALIDHARAN said...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
எஸ்தர் சபிsaid...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
நிரூபன் said...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
ܔܢܜܔஇளந்தமிழன்ܔܢܜܔsaid...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
கீதமஞ்சரிsaid...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
மாத்தியோசி - மணி said...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
கால மாற்றம் தேவை தானே புலவர் அய்யா?
ReplyDelete(பின் குறிப்பு..ஏசியில் உட்கார்ந்து திமிரோடு எழுதிய பின்னூட்டம்...-:))
சேச்சே என்னே கவிதை என்று அடிக்கடி சொல்லிட தோன்றுகிறதே ..!
ReplyDeleteகவிதை முழுவதும் அனலடிக்கிறது.
ReplyDeleteசுட்டது ஒவ்வொரு வார்த்தையும்! சொல்கொண்டு
ReplyDeleteகட்டியக் கோடைக் கவி!
நம்மைப் போன்றோரெல்லாம் இந்தக் கோடையில் வெளியில் போகாமலிருப்பது மிக நன்று.
ReplyDeleteகோடையின் வரிகள் குளுகுளுவென இருந்தது ஐயா .
ReplyDeleteரொம்பவும் வெயிலோ ஐயா.இங்க இன்னும் நல்ல வெயில் வரல.மழைக்குளிர் !
ReplyDeleteரெவெரி said..
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள் said..
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
ரிஷபன் said...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
AROUNA SELVAME said..
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
பழனி.கந்தசாமி said...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
சசிகலா said
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteஅன்பான வரவுக்கும் அழகான மறுமொழிக்கும்
மிக்க நன்றி!
சா இராமாநுசம்
ஐயா உங்களின் கவித்திறனுக்கு ஈடாக பதிவுலகில் யாரும் இல்லை என நினைக்கிறன்.:)
ReplyDeleteமிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் கோடையைப் பற்றி..
நன்றி ஐயா