Tuesday, May 22, 2012

பதிவர் சந்திப்பும் பாராட்டுக் கவிதையும்!



காணாது தம்முள்ளே நட்பு கொண்ட-சங்க
   காலத்து பிசிராந்தை சோழன் போல!
காணாது வலைவழியே கண்ட பலரும்-அங்கே
   கண்ணுற்று களித்திட நெஞ்சம் மலரும்!
  

இதயத்தில் வாழ்ந்திடும் திருநா ளாகும்-அது
   என்றுமே மறவாத ஒருநா ளாகும்!
உதயத்து எழுகின்ற கதிரைப் போல-என்
   உள்ளத்தில் உவகையோ எழவும் சால!

தலைநகர் சென்னையில் பதிவர் கூடி-ஏதும்
  தன்னலம் இல்லாத வழியே நாடி!
இலைநிகர் எனச்சொல்ல செய்த பணியே-அதை
   இயம்பிட வேண்டுமா? தங்க அணியே!

குடத்துள்ள விளக்கினைக் எடுத்துச் சென்றே-உயர்
   குன்றின்மேல் வைக்கின்ற செயலைப் போன்றே!
நடத்தினர் அறிமுக நிகழ்வு ஒன்றே-உலக
   நாடுகள் அறிந்துமே புகழ நன்றே!

வயதுக்கு மீறிய அறிவும் பெற்றே-அங்கு
   வந்திட்ட குழந்தையைக் காண லுற்றே!
வியப்புக்கே போனோமே நாங்கள் எல்லாம்-மேலும்
   விளக்கிட தமிழிலும் இல்லை சொல்லாம்!

எண்ணற்ற மரங்களை நாளும் நட்டார்-நம்
    எண்ணத்தில் பதியவே உரையும் இட்டார்!
கண்ணற்ற கயவரே! மரத்தை வெட்டும்-உம்
   கயமைக்கு இனியேனும் முடிவு கட்டும்!

மாப்பிள்ளை கோகுலும் விருது பெற்றார்-அவர்
   மகிழ்விலே கண்ணீரும் தளும்ப லுற்றார்!
மாப்பிள்ளை அழைப்பிதழ் தந்துவி ட்டார்-வந்தோர்
   மனமார அங்கையே வாழ்த்தி விட்டார்!

நிகழ்சிக்கு வித்தாக, சிவக்குமார் நண்பருடன்-அரிய
   நிகழ்ச்சியைத் தொகுத்திட்டார் கேபிள் சங்கர்!
புகழ்ச்சி உரியவரே வந்தோர் எல்லாம்-மேலும்
   போற்றலுக்கே ஆளானார் சங்கர லிங்கம்!

வந்தாரின் வயதில் மூத்தோன் யானே-ஆயின்
   வலைதன்னில் மிகமிக இளையோன் நானே!
தந்தார்கள் பரிசதரும் வாய்பு தானே-இத்
   தரணியில் வாழும்வரை மகிழ நானே!

              புலவர் சா இராமாநுசம்
  
  


  


29 comments:

  1. மகிழ்வு தந்த அந்த மாலை நிகழ்வினை அழகுத் தமிழில் படிக்கையில் மேலும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அருமை ஐயா.

    ReplyDelete
  2. முகமறியா நட்புகளை நேரில் சந்திக்கும் போது மனதில் மிகுந்த உற்சாகம் ஏற்படும் என்பது உண்மையே ..!

    ReplyDelete
  3. “அடடா.... நமக்கு அதில் கலந்துக் கொள்ள கொடுப்பினை இல்லையே...” என்று வருந்துகிறேன் ஐயா.

    இருந்தாலும்....

    திருதராஷ்டிரன் கண்ட போர்க்கால நிகழ்ச்சிபோல் நடந்ததைக் உங்கள் கவிதை வரிகளில் காண்டுவிட்டேன். நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  4. சுருக்குமாக,ஆனால் விளக்கமாக அழகு தமிழில் தாங்கள் கவிதை வடிவில் தந்திருக்கும் செய்தி அருமை ஐயா

    ReplyDelete
  5. சந்திப்புகளின் தருணங்கள் எல்லாம்
    என்னால் கலந்துகொள்ள முடியா வண்ணம்
    தள்ளிக்கொண்டே போகிறது ஐயா...
    என்றாவது ஒருநாள் ஒரு சந்திப்பிலாவது
    கலந்துகொண்டு விடுவேன் என்ற நம்பிக்கையுடன். ...

    ReplyDelete
  6. அன்பின் ஐயா..

    பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததில் அளவில்லா மகிழ்ச்சி..

    நேரில் கண்டதை அழகுத்தமிழில் கவி வரிகளாய் வாசிக்க வாசிக்க பேரானந்தம்

    நன்றி ஐயா

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  7. super kavithai ....kathai sollugirathu azhagu tamilil

    ReplyDelete
  8. புதிய புறநானூற்றுக் கவிதை ஒன்றை படைத்திட்ட புலவர் அய்யாவுக்கு நன்றி!

    ReplyDelete
  9. நன்முறையில் நடந்ததாம் பதிவர் சந்திப்பு-
    கவிதையாய் பதிவு செய்தீர் அதுவும் தித்திப்பு,

    ReplyDelete
  10. அழகு தமிழில் பதிவர் சந்திப்பின் பெருமை கூறிய கவி படித்த தங்களை பாராட்ட வார்த்தையில்லை....!
    உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  11. வந்தாரின் வயதில் மூத்தோன் யானே-ஆயின்
    வலைதன்னில் மிகமிக இளையோன் நானே!
    தந்தார்கள் பரிசதரும் வாய்பு தானே-இத்
    தரணியில் வாழும்வரை மகிழ நானே!

    கவிதையில் ஊடாடும் மகிழ்ச்சி எங்களுக்கும்
    பரவ மிக்க மகிழ்ச்சி கொண்டோம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. அன்றைய நிகழ்வில் நடந்த அனைத்தையும் கவிதையாய் சொல்லிவிட்டீர்கள் ஐயா...

    நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...குறிப்பாக விசாலினிக்கும் மற்றும் விருது பெற்றோருக்கும்

    ReplyDelete
  13. கணேஷ் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. வரலாற்று சுவடுகள் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. AROUNA SELVAME said.

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. சென்னை பித்தன் said..

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. மகேந்திரன் said..

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. சம்பத்குமார் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. Bala Ganesan said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. தி.தமிழ் இளங்கோ said.

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. T.N.MURALIDHARAN said..

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. வீடு சுரேஸ்குமார் said..

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. Ramani said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. Ramani said.

    வாக்கிட்டமைக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. சிட்டுக்குருவி said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் கலந்து கொண்டு களித்தாற்போன்ற நிறைவையும் ஒரு சேர அளித்தது கவின் கவிதை.

    ReplyDelete
  27. கே. பி. ஜனா... said.

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. **வந்தாரின் வயதில் மூத்தோன் யானே-ஆயின்
    வலைதன்னில் மிகமிக இளையோன் நானே!
    தந்தார்கள் பரிசதரும் வாய்பு தானே-இத்
    தரணியில் வாழும்வரை மகிழ நானே!***

    பிரமாதம், sir!

    ReplyDelete