விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை சங்கப் பதிவை- பற்றி
எழுதினேன்! வலைதன்னில்! எனினும், முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
பொறுப்பேற்பீர்! தக்கோரே! வருக! வருக!
தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவை
சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-நல்
அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பீர்-உம்
சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்
தன்நலமே இல்லாமல் சேவை செய்ய-கொள்கைத்
தடுமாற்றம் இல்லாமல் அன்பைப் பெய்ய
பொன்மனமே கொண்டவரே வருக! வருக-நல்
பொதுநலமே சேவையெனத் தருக! தருக!
எத்தனைப்பேர் வருவார்கள் தெரிய வில்லை-உடன்
ஏற்றவழி உறுதி செய்ய இயலவில்லை
சித்தமதை, வருகையுடன் செப்ப வேண்டும்!-மேலும்
செயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்!
புலவர் சா இராமாநுசம்
அருமை ..!
ReplyDeleteமருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
ReplyDeleteமனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே! //////
சூப்பர் ஐயா! இப்படித்தான் எப்பவுமே எண்ணவேண்டும்! அருமையான வரிகள்! :-))
பதிவர்கள் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்துள்ளேன்
ReplyDeleteநேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (:
//பொதுநலமே சேவையெனத் தருக! தருக!... அருமை அண்ணா :)
ReplyDeleteஅருமை, அருமை
ReplyDeleteஅருமையான வழிகாட்டல் கவிதை ஐயா! நீங்கள் எப்போதும் இளைஞர்தான் மனசால்!
ReplyDeleteஎம் எண்ணங்கள் எப்போதும் இளமையாயிருந்தால் நாங்களும் இளமையானவர்கள்தான் என்று என் அப்பாவும் அடிக்கடி சொல்வார்.அவர் பெயரிலேயே குழந்தை இருப்பதால் தான் ஒரு குழந்தையென்றும் சொல்லிக்கொள்வார்.உங்கள் கவிதை அப்பாவை ஞாபகப்படுத்திவிட்டது ஐயா !
ReplyDeleteதங்கத் தமிழில் பதிவர் சந்திப்புக்கு வரவேற்புக் கவிதை
ReplyDeleteஉள்ளத்தை கொள்ளை கொள்கிறது.நானும் கலந்துகொள்ள உள்ளேன் அய்யா!
கவிதைக்கு மயங்கி வாக்களிக்க தானாக செல்கிறது எனது சுட்டி. த.ம.5
ReplyDeleteமனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
ReplyDelete>>
அப்படி சொல்லுங்க மனதிற்கும் புத்துணர்ச்சியா இருக்கும் 20 வயது குறைந்த மாதிரி இருக்கும் ஐயா. பதிவர் சந்திப்பு நல்லவிதமாய் நடந்ததா ஐயா?
ரொம்ப சூப்பரா இருக்குங்க அய்யா
ReplyDeleteமருந்துண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
ReplyDeleteவிருந்துண்டு மருத்துவர் பின் செல்வர்.
ஆஹா அருமையான வரிகள்...!!!
ReplyDeleteஅடுத்த சந்திப்பிலாவது சங்கம் பற்ரிப் பேச முடிகிறதா பார்க்கலாம்.கவிதைக்கு நன்றி ஐயா
ReplyDeleteவண்டி வேகமாக ஓட்டுவீங்க போல இருக்குதே!இப்பத்தான் சென்னைப்பித்தனை வீட்டில் சேர்த்து விட்டு வந்தேன் என்று கேள்விப்பட்டேன்:)
ReplyDeleteநிச்சயம் தங்கள் அவா கூடிய விரைவில் நிறைவேறும்
ReplyDeleteஅதற்கான அச்சாரங்களே இதுபோன்ற சந்திப்புக்கள்
அருமையான கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Tha.ma 8
ReplyDeleteசங்கம் வேண்டித் தங்கத்தமிழில் ஒரு இனிய பா தந்தீர். தங்கள் எண்ணம் நிறைவேறும் ஓர்நாளில். அது திண்ணம். வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDelete