மேதினி போற்றும் மேதினமே-உன்
மேன்மைக்கே களங்கம் இத்தினமே!
தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர்
தேம்பி அலற திசையெட்டே!
வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
வாய்கால் முற்றும சேறாக!
நீதியில் முறையில் கொன்றானே-அந்த
நினைவு நாளே துக்கதினம்!
உலகில் உள்ளத் தமிழரெங்கும்-இன்று
ஒன்றாய்க் கூடி அங்கங்கும்!
அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
அமைதியாய் நெஞ்சில் துயரேந்தி!
வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
வருந்த மக்கள் வழியெங்கும்!
திலகம் வீரத் திலகமவர்-உயிர்
துறந்த தியாக மறவர்!
முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
முடிந்த கதையா அதுவல்ல!
கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்தக்
குடும்பமே அழிந்த நாளன்றோ!?
புள்ளி விவரம் ஐ.நாவே!-அறிக்கை
புகன்றதே நாற்பது ஆயிரமே!
உள்ளம் குமுற அழுகின்றார்-கூடி
உலகத் தமிழர் தொழுகின்றார்!
அகிலம் காணாக் கொடுமையிதே-நாம்
அறிந்தும் அமைதியா-? மடமையதே!
வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
வீரம் விளையாக் களர்நிலமே!
நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
நம்தலை தாழும் நிலையுண்டே!
தகுமா நமக்கும் அந்நிலையே-மாறும்
தமிழகம் பொங்கின் சூழ்நிலையே!
புலவர் சா இராமாநுசம்
மேதினி போற்றும் மேதினமே-உன்
ReplyDeleteமேன்மைக்கே களங்கம் இத்தினமே!
தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர்
தேம்பி அலற திசையெட்டே!
வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
வாய்கால் முற்றும சேறாக!
நீதியில் முறையில் கொன்றானே-அந்த
நினைவு நாளே துக்கதினம்!
படிக்கப் படிக்க நெஞ்சம் பதறுகிறது
மனம் கலங்கச் செய்து போகும் பதிவு
நெஞ்சக் கனல் தொடர்ந்து எரிய
தொடர்ந்து தொடர்ந்து பதிவுகள் தர வேண்டுகிறோம்
என்ன சொல்வது ஐயா? நாம் அனுபவித்த எல்லாக் கொடுமைகளையும் உணர்வு பூர்வமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
ReplyDeleteஇப்படியான கவிதைகளும் படைப்புக்களும் எமக்கு எப்போதுமே ஆறுதல் தருகின்றன!
மிகவும் நன்றி ஐயா!
“வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
ReplyDeleteவீரம் விளையாக் களர்நிலமே!
நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
நம்தலை தாழும் நிலையுண்டே!
தகுமா நமக்கும் அந்நிலையே“
இந்த விசயத்தில் தமிழன் என்றோ தலை குனிந்துவிட்டான் ஐயா. இன்மேல் தான் வெட்கப்பட வேண்டுமா?
நல்ல கவிதை. அருமையாக தீட்டியிருக்கிறீர்கள். நன்றிங்க புலவர் ஐயா.
முள்ளி வாய்க்கால் முடிவல்ல...ஆரம்பம் !
ReplyDeleteசிந்தினோம் சிந்தினோம் கண்ணீரை
ReplyDeleteசிந்திக் கொண்டுதானே நிற்கின்றோம் இன்றும்
எப்போது இத்துயர் மாறுமோ??????
இது முடிவல்லவே...
//கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்தக்
ReplyDeleteகுடும்பமே அழிந்த நாளன்றோ!?//
ஐயோ! என்ன கொடுமை! இதுபோல் இனி ஒருபோதும் நடவாமல் இருக்க வேண்டும்.
காலம் ஆற்றாத சோகங்களுள் ஒன்று முள்ளிவாய்க்கால்! உங்கள் கவிதை எம் தமிழ் உறவுகளை எண்ணி மனதைக் கனக்க வைத்து விட்டது. நண்பர் முரளிதரன் சொல்வது போல இதுபோல இனி ஒரு கொடுமையை என் வாழ்வில் கேட்கக் கூடாது என்றே வேண்டுகிறேன்.
ReplyDeleteமுள்ளிவாய்க்கால் சோகங்கள் இனிமேல் உலகின் எந்த மூலையிலும் நிகழக்கூடாது :(
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதம்பிஎன் றழைத்த தலைவனெல்லாம்
ReplyDeleteதள்ளினர் அவரை படுகுழியில்
நம்பியே வைத்து கழுத்தறுத்த
நயவஞ் சகர்கள் இருக்கும் வரை
இம்மியும் நம்குலம் உயராது -அங்கு
எம்குலச் சுவடும் இருக்காது - நாம்
வெம்பிப் புலம்பி என்ன பயன்? -நம்
வேர்களில் வெந்நீர் ஊற்றிய பின்?
தமிழ்
ReplyDeleteஇனத்தில் வடு(லி) விழுந்த
கரிநாள்
இனி இச்சோகம் உலகின் எந்த மூலையிலும் நடக்காம இருக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.
ReplyDeleteRamani said.
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
Ramani said.
ReplyDeleteஓட்டளித்தமைக்கு நன்றி!
சா இராமாநுசம்
மாத்தியோசி - மணி said
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
AROUNA SELVAME said...
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
ஹேமாsaid...
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
எஸ்தர் சபி said...
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
T.N.MURALIDHARANsaid...
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
கணேஷ் said...
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
சிவகுமாரன் said...
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
செய்தாலிsaid...
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
ராஜி said...
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
தமிழகம் பொங்கின் சூழ்நிலையே!...!
ReplyDeleteநிச்சயமாய் மாறிவிடும் என்ற நம்பிக்கை எமக்குள்.
//முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
ReplyDeleteமுடிந்த கதையா அதுவல்ல!
கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்தக்
குடும்பமே அழிந்த நாளன்றோ!?
புள்ளி விவரம் ஐ.நாவே!-அறிக்கை
புகன்றதே நாற்பது ஆயிரமே//
அருமை..
கண்ணீரின் சூட்டினிலே மூளட்டும் நியதி தீ... அநிதியை சுட்டெரிக்க....
ReplyDeleteசத்தியா said...
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
Athisaya said...
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
GowRami Ramanujam Solaimalaisaid...
ReplyDeleteதங்கள் இன்பமான வரவுக்கும் மறுமொழிக்கும்
என்றும் நன்றி உரியன! .
சா இராமாநுசம்
உள்ளுக்குள் குமுறிக்கொண்டு தானிருக்கிறது.
ReplyDeleteவெகுண்டு வெடித்து பொங்கத்தான் போகிறது.