சென்றப் பதிவில் மாற்றமே
செய்தேன் பாரும்! தோற்றமே!
என்றும் எழுதுவேன் விருத்தமே
எழுதினேன் வெண்பா திருத்தமே!
பலரும் அதனை அறியவில்லை
பதிலில்! ஏனோ? தெரியவில்லை!
சிலரில் ஒருவரே வெண்பாவே
செப்பினார்! அருணா ஒண்பாவே!
மாற்றம் வேண்டி மாற்றியதே
மனமே வெண்பா சாற்றியதே!
ஏற்பதோ உங்கள் கையில்தான்
எழுதுவேன் மேலும் பொய்யில்தான்!
முன்பே சிலபேர் கேட்டார்கள்
மொழிந்திட வெண்பா பாட்டாக!
அன்பரே பிடித்தால் கொள்ளுங்கள்
அல்லது என்றால் தள்ளுங்கள்!
செப்பிடின் வெண்பா எளிதல்ல
செய்யுள் இலக்கண மதைச்சொல்ல!
ஒப்பிட வேண்டும் சீர்தோறும்
ஒவ்வொரு சொல்லும் அடிதோறும்!
எழுதுவேன் மேலும் சிலவற்றை
என்னுள் உள்ள மொழிப்பற்றை!
விழுதெனத் தாங்கிப் பிடிப்பீரா
வேரற்று வீழ்ந்திட விடுவீரா!
புலவர் சா இராமாநுசம்
சென்ற பதிவைத் தவற விட்டு விட்டேனே... அடடா.... என்ன கேட்டீர்கள்... விழுதென தாங்கிப் பிடிப்போம் நாங்கள். அதிலென்ன ஐயம் ஐயா தங்களுக்கு!
ReplyDeleteஐயா
ReplyDeleteஉங்கள் கவிதையும் தமிழும்
அதன் அழகிய இசைத்தலும்
செம்மையானவை அதில் எந்த ஒரு ஐயமும் இல்லை
இலக்கிய நயமுள்ள மரபு ,வெண்பா கவிதைகளை
உங்களின் இசைப்பில் கேட்க(வாசிக்க )துடிக்கிறோம் ஐயா
விழுதென தாங்கிப் பிடிப்போம் நாங்கள்
உரைநடை தமிழில் யார் வேண்டுமானாலும் கவிதை எழுத முடியும், ஆனால் உங்களை போல் இலக்கண தமிழில் வெண்பா எழுத வலையுலகில் எவருமில்லை ..!
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் ..!
மனுசனா சார் நிங்கள் .!!!!!!
ReplyDeleteஎன்னா தமிழ் !!! என்னா கவிதை !!!!
எழுதுவேன் மேலும் சிலவற்றை
என்னுள் உள்ள மொழிப்பற்றை!
விழுதெனத் தாங்கிப் பிடிப்பீரா
வேரற்று வீழ்ந்திட விடுவீரா!
வாழ்த்துக்கள் ஆயிரம் .
மனுசனா சார் நிங்கள் .!!!!!!
ReplyDeleteஎன்னா தமிழ் !!! என்னா கவிதை !!!!
எழுதுவேன் மேலும் சிலவற்றை
என்னுள் உள்ள மொழிப்பற்றை!
விழுதெனத் தாங்கிப் பிடிப்பீரா
வேரற்று வீழ்ந்திட விடுவீரா!
வாழ்த்துக்கள் ஆயிரம் .
கவிதை நான் இன்று மிகவும் ரசித்தேன்
ReplyDeleteவாழ்த்துக்கள்
கவிதை நான் இன்று மிகவும் ரசித்தேன்
ReplyDeleteவாழ்த்துக்கள்
வெண்பாவை மிகவும் விரும்பியவர்களில் சுஜாதாவும் ஒருவர்.நிச்சயமாக விழுதைவிட ஆணிவேராய் தாங்கிப்பிடிப்போம்.
ReplyDeleteசென்ற பதிவைப் பார்க்கத் தவறிவிட்டதற்கு வருந்துகிறேன் ஐயா. வெண்பா அறியாதோரும் எளிதாய் உணர்ந்து கற்கும் வண்ணம் செம்மையாய் இயற்றியுள்ளீர். மனம் மகிழ்வாய் துள்ளுகிறது. பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteவழமைபோல் அருமையான கவிதை
ReplyDeleteமீண்டும் மீண்டும் படித்துச் சுவைத்தேன்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
அன்புடைய புலவர் பெருந்தகையே...
ReplyDeleteவிடுமுறையில் இருப்பதால் வலைப்பக்கம் வரமுடியவில்லை..
பொறுத்தருள்க..
நீங்கள் இட்ட தமிழ் விழுதுகள் ஐயா நாங்கள்..
என்றென்றும் தங்களை தாங்கிப் பிடிப்போம்...
ஐயா! தாங்கள் எந்தப் பாவகை எழுதினாலும் அதில் தமழ் மணக்கிறது
ReplyDelete“ஏற்பதோ உங்கள் கையில்தான்
ReplyDeleteஎழுதுவேன் மேலும் பொய்யில்தான்!“
பொய்யில் எழுதும் புலவரே! பாக்களை
மெய்யில் எழுதுவீர் மென்மேலும்!-மை..வேண்டாம்!
வேரற்று போனால் விழுதாங்கும்! வெண்பாபோல்
சீருற்று வாழ்வீர் சிறந்து!
(உங்கள் பாவில் என் பெயரிருக்க மகிழ்கிறேன் ஐயா. நன்றிங்க.)
ஐயா நீங்கள் எழுதிய கவிதையில் பொய் என்பதை நான் தவறாக புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.
கணேஷ் said...
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
செய்தாலிsaid...
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலிsaid
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலிsaid
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலிsaid
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலிsaid
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
விச்சு said...
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
கீதமஞ்சரி said...
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
Ramanisaid...
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
Ramanisaid...
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
மகேந்திரன் said
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
T.N.MURALIDHARAN said...
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
AROUNA SELVAME said
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! இன்றும் என்றும்!
சா இராமாநுசம்
எனது முதல் வருகை இது...தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை சுவைக்க தயாராகவுள்ளேன்.
ReplyDeleteஇலக்கிய நயமுள்ளதாகவுள்ளது...தொடர்ந்தும் இவ்வாறுதான் எழுதுகிரீர்கள் போல...புது வாசகனாய் இன்றுமுதல் tm 5
ReplyDeleteமிக அருமை ஜயா
ReplyDeleteசெப்பிடின் வெண்பா எளிதல்ல
செய்யுள் இலக்கண மதைச்சொல்ல!
ஒப்பிட வேண்டும் சீர்தோறும்
ஒவ்வொரு சொல்லும் அடிதோறும்!
செப்பிடின் என்பது தெலுங்கு மொழியா? ஜயா ஏனென்றால் புகழ் கொண்ட எழுத்தளர் எல்லாரும் இச் சொல்லாடலை பாவிக்கின்றனர் ஆனால் இது தெலுங்கு மொழி என்று கேள்விபட்டுள்ளேன. அப்படியா? ஜயா???