தனியார் பள்ளிக் கொள்ளைகளே-மீண்டும்
தாங்கிட இயலாத் தொல்லைகளே!
இனியார் எம்மைக் கேட்பாரே-இன்று
எமக்கே உரிமையும் தந்தாரே!
அணியாய்த் திரண்டு வழக்கிட்டார்-நீதி
அவர்கே வெற்றி! முழக்கிட்டார்!
பணிவாய்க் கேட்கிறோம் ஆள்வோரே-இன்னும்
பாரா முகமேன் ஆள்வோரே!
கொண்டதே கொள்கை என்கின்றார்-தாம்
கூறுதல் வேதம் என்கின்றார்!
விண்டதேக் கட்டணம் என்கின்றார்-கேட்டால்
விரட்டியே வெளியே தள்ளுகின்றார்!
தண்டமும் வேறு விதிப்பாரே-இதைத்
தடுத்திட இயலா! பெற்றோரே!
கண்டிட வேண்டும் ஆள்வோரே-உடன்
கண்டிக்க வேண்டும் ஆள்வோரே!
சேவையாய் கல்வியை பள்ளிகளே-எண்ணி
செய்திட வேண்டும் பள்ளிகளே!
தேவையாம் பொருளென வழிதேடி-இப்படி
தேடினால் வருமே பழிநாடி!
எழுத்தே தருபவன் இறைவன்தான்-என
எழுதினர் நமது முன்னோர்தான்!
கழுத்தை நெறிப்பதா பள்ளிகளே-மேலும்
கட்டணம் எரியும் கொள்ளிகளே!
புலவர் சா இராமாநுசம்
நிஜமான உண்மை....!!!
ReplyDelete//கழுத்தை நெறிப்பதா பள்ளிகளே-மேலும்
ReplyDeleteகட்டணம் எரியும் கொள்ளிகளே!//
சந்தேகமின்றி எரியும் கொள்ளிகள்தாம்.
த.ம.1
அரசாங்கம் எடுத்து நடத்த வேண்டிய கல்வித்துறையை தனியாருக்கு விட்டதாலும், மற்றும் தனியார் எடுத்த நடத்த வேண்டிய மதுபான விற்பனையை அரசாங்கம் ஏற்று நடத்துவதாலும் மக்களுக்கு வந்த சோதனை இது.
ReplyDeleteபள்ளிகள் எல்லாம் ஆள்வோரின்
ReplyDeleteபினாமிகள் செய்யம் தொழிலாச்சு
கொள்ளை அடித்து வெளிநாட்டில்
குவிப்பதே அவர்களின் உயிர் மூச்சு.
பிள்ளைகள் படிப்பு மட்டும்தான்
பெற்றோர் காணும் கனவாச்சு
உள்ளக் கொதிப்பை அடக்குதற்கு
உதவுது என்றும் பெருமூச்சு
பணம் உள்ளவர் மட்டும் உயரட்டும் என்ற உயர் கொள்கை போலும் . மூளை உள்ளவர் எல்லாம் நொந்து போவது அவர் இன்பம்போலும் . என் செய்வது எழுதிக் கேட்பது எம் பணி அதை செவி சாய்க்காததுவே அவர் பணி போலும் . நல்ல கவிதை சமுதாய நோக்கு நலம் பெறட்டும்
ReplyDeleteஇவைகள் பாரா முகம் என்று தோன்றவில்லை அண்ணா... அவர்கள் செவிடர்கள் என்றே தோன்றுகிறது... அவர்களிடம் அடித்துக் கொண்டு சென்ற பெட்டிகள் வைக்க இடம் இல்லாது இருப்பதால் அவர்களுக்கு அது பெரிதாய் தெரிவதில்லை... தட்டிக் கேட்பதற்கு நாவும் வரவில்லை...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சிவகுமாரன்said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சந்திரகௌரி said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
GowRami Ramanujam Solaimalaisaid...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
எரியும் கொள்ளிகள் கொழுந்து விட்டு எரிந்துகொண்டே போகின்றன.
ReplyDelete