Thursday, May 10, 2012

தலைமீது கூடையிலே கீரைக் கட்டே!


தலைமீது கூடையிலே கீரைக் கட்டே-தன்
   தலைவிதியை நினத்தபடி துன்பப் பட்டே!
விலைகூறி முடிந்தவரை சத்த மிட்டே-இந்த
    வீதிவழி போகின்றான் நாளுந் தொட்டே!
நிலைகெட்டுத் தடுமாறி நடையும் தளர-சற்று
    நின்றபடிக் கத்துவான் நாக்கு முலர!
விலைகேட்டு அதிகமென விலகிச் செல்ல-படும்
    வேதனையை விளக்கிடலோ! எளிதே யல்ல!

இப்படியே வாழ்கின்றார் எத்தனை பேரே-இந்த
   ஏழைகளின் துயர்தன்னை தீர்ப்போர் யாரே!
தப்படியே வைக்கின்றார் ஆள்வோர் யாரும்-இதை
   தடுத்திடவே முனைவோரும் உண்டா கூறும்!
எப்படியோ போகட்டும்! வேண்டும் நன்மை-என
   எண்ணுகின்ற நிலைதானே நமதுத் தன்மை!
செப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு
   சினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே!

கோபுரமாய் வீடெல்லாம் மாறக் கண்டோம்-ஆட்சிக்
    கோட்டையிலே மாறிமாறி ஏறக் கண்டோம்!
ஆபரண துணிமணிகள் மாற்றம் கண்டோம்-வெட்டி
    அரசியலும் பேசுவதில் இன்பம் கண்டோம்!
பாபிகளாய் ஏழைகளைத் தினமும் கண்டோம்-சற்று
    பரிதாபம் பட்டதுடன் முடித்துக் கொண்டோம்!
ஹாபியென ஆங்கிலத்தில் சொல்லைக் கண்டோம்-மன
   ஆறுதலாய்ச் சொல்வதற்கும் கற்றுக் கொண்டோம்!

                  புலவர் சா இராமாநுசம்


21 comments :

  1. இயல்பான இயைப்புத் தொடையுடனும்
    அருமையான கருவுடனும் அமைந்த பாடல்
    மனம் கவர்ந்தது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இடிச்சி இடிச்சி சொல்லி அசத்திட்டீங்க புலவரே, ரசிச்சேன்...!!!

    ReplyDelete
  3. கோபுரமாய் வீடெல்லாம் மாறக் கண்டோம்-ஆட்சிக்
    கோட்டையிலே மாறிமாறி ஏறக் கண்டோம்!
    >>>
    வீடெல்லாம் கோபுரமாய் மாறிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்?!

    ReplyDelete
  4. //// செப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு சினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே! ///

    சுடும் நிஜம் ..!

    ReplyDelete
  5. செப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு
    சினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே!// உண்மைதானே ஐயா. சிந்திக்க வைக்கும் வரிகள் .THA.MA.4

    ReplyDelete
  6. செப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு
    சினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே

    அருமை அருமை அருமை !

    ReplyDelete
  7. “ஹாபியென ஆங்கிலத்தில் சொல்லைக் கண்டோம்-மன
    ஆறுதலாய்ச் சொல்வதற்கும் கற்றுக் கொண்டோம்!²

    ஆழமான உண்மை! அருமைங்க புலவர் ஐயா!

    ReplyDelete
  8. ராமானுசம் காணும் ராம ராச்சியம்
    பாமரனும் காணும் கனவு ரகசியம்

    ReplyDelete
  9. கடைக்குச் சென்று பேரம் பேசாமல் சொன்ன விலையைக் கொடுக்கும் மனிதர்கள்,கூடை சுமந்து வரும் பெண்ணிடம் பேரம் பேசி விலை குறைக்கும் கொடுமை!

    ReplyDelete
  10. ஏழ்மையில் கண்டு தாங்கள் படும் தவிப்பு தனித் தமிழில் வெளிப்படுவது சிறப்பு

    ReplyDelete
  11. Ramani said...

    அன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  12. MANO நாஞ்சில் மனோsaid...


    அன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  13. ராஜி said...


    அன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  14. வரலாற்று சுவடுகள்said...

    அன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. சசிகலா said...

    அன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  16. ரிஷபன்said...

    அன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. AROUNA SELVAME said...

    அன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. anusham said...


    அன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  19. சென்னை பித்தன்said...

    அன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. திண்டுக்கல் தனபாலன் said...

    அன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...