Saturday, May 5, 2012

ஈழம் ஒன்றே என்னாசை-என் இதயம் முழங்கும் நல்லோசை


ஈழம் ஒன்றே என்னாசை-என்
   இதயம் முழங்கும் நல்லோசை!
வாழும் என்நாள் முடிவுக்குள்-அது
   வந்திடுட வேண்டும் விடிவுக்கே!
சூழல் விரைவில் வந்திடுமா-ஈழம்
   சுதந்திரம் பெற்றுத் தந்திடுமா?
பாழும் மனமே! கலங்காதே!-சிங்கள,
   பாவியின் குலமும் விளங்காதே!

கண்டனம் செய்தால் போதாது-அந்த
   கயவர்கள் திருந்துதல் ஆகாது!
தண்டணைத் தருவதே சரியாகும்-எனில்,
   தமிழரின் வாழ்வே எரியாகும்!
சண்டை முடிந்தும் மூன்றாண்டே-அங்கே
    சாவாதே மேலென மனந்தூண்ட
குண்டர்கள் ஆடசி மாறாதே-அவர்
   கொடுமைக்கு இன்றும் அளவேதே!

முள்ளின் வேலிக்குள் கிடக்கின்றார்-அவர்
   முடங்கி அடங்கியே நடக்கின்றார்!
உள்ளிட வேண்டும் ஐ.நா வே-உடன்
   உலகம் உணர்ந்திடச் செய்வாயே!
கள்ளிப் பாலும் பசும்பாலாய்-பக்சே
   கள்ளனின் நாடகம் சிலநாளே!
வெள்ளி முளைக்கும்! விடிந்திடுமே-ஈழ
   வெற்றிச் சங்கும் ஊதிடுமே!

                                 புலவர் சா இராமாநுசம்
 

   
  

18 comments :

  1. காலம் ஓர் நாள் மாறும்-நம்
    கவலைகள் யாவும் தீரும்
    ஞாலம் அதனை உணரும்-நம்
    உணர்வுகள் ஒன்றெனச் சேரும்
    பாலம் போலே இணைக்கும்-நம்
    தமிழர் உறவு நிலைக்கும்
    ஜாலம் செய்து வாழ்வோர் -அவர்
    சதிகள் அம்பல மாக்கும்

    ReplyDelete
  2. \\ஈழம் ஒன்றே என்னாசை-என்
    இதயம் முழங்கும் நல்லோசை!
    வாழும் என்நாள் முடிவுக்குள்-அது
    வந்திடுட வேண்டும் விடிவுக்கே\\

    கண்ணீர் கசியவைத்த வரிகள். தங்கள் ஆதங்கம் தீரும் நாள் வரும். வேதனை வேண்டாம்.

    \\வெள்ளி முளைக்கும்! விடிந்திடுமே-ஈழ
    வெற்றிச் சங்கும் ஊதிடுமே!\\

    தங்கள் வாக்கு பலிக்கும். பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  3. வெற்றி சங்கின் சத்தம் நிச்சயம் ஒருநாள் முழங்கும். தங்கள் கூற்றும் உண்மையாகும்.

    ReplyDelete
  4. வெற்றி செய்தி விரைவில் கிடைக்கும் - அன்று
    மனம் மகிழ்ச்சியில் திழைத்திடும்.

    ReplyDelete
  5. உலகத்த்தமிழர் அத்தனை பேரினதும் பேராவா. எம் காலத்துள் ஈழம் மலர வேண்டும் என்பது. விரைவில் அது கைகூட எம் இனம் ஒன்று சேரவேண்டும். பட்ட துன்பம் பனிபோல் விலகும் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்வர் இங்கு தமிழர் ஈழம் மலர்ந்தால். தலைவன் வழி நின்ற மாவீரர் மனமும் குளிரும். என் தமிழன்னை குதூகலிப்பாள். உங்கள் வாக்கு விரைவில் பலிக்கட்டும் கவிஞரே.

    ReplyDelete
  6. வழக்கம் போல் அருமையான படைப்பு

    ReplyDelete
  7. ஈழம் ஒன்றே என்னாசை..நிச்சயம் வெற்றி கிடைக்கும்

    ReplyDelete
  8. T.N.MURALIDHARAN said.

    வாழ்த்துக்கு நன்றி

    புலவர் சா இராமாநுச

    ReplyDelete
  9. கீதமஞ்சரி said..

    வாழ்த்துக்கு நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. விச்சு said...

    வாழ்த்துக்கு நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. முஹம்மது யாஸிர் அரபாத் said.

    வாழ்த்துக்கு நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. சத்தியா said...

    வாழ்த்துக்கு நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. வரலாற்று சுவடுகள் said..

    வாழ்த்துக்கு நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. மனசாட்சி™ said

    வாழ்த்துக்கு நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. கண்டனம் செய்தால் போதாது-அந்த
    கயவர்கள் திருந்துதல் ஆகாது!
    தண்டணைத் தருவதே சரியாகும்-எனில்,
    தமிழரின் வாழ்வே எரியாகும்!

    சரியாய் சொன்னீர்கள் ஐயா..

    ReplyDelete
  16. மதுமதி said...

    வாழ்த்துக்கு நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. அருமையான ஆக்கம் புலவர் ஐயா!

    ReplyDelete
  18. மறவர்க்காய் பாடிய மரபு மிக சிறப்புங்கைய்யா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...