உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்
ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!
வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக
வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!
வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்
வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!
நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்
நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!
அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை
அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!
கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்
குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!
உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்
உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!
திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி
தேவதையும் தேடிவர வழிதான்! விண்டோம்!
ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்
உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்
கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு
கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!
எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த
எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!
புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது
பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!
புலவர் சா இராமாநுசம்
நன்மை
ReplyDeleteநல்லத்தை ஊருக்கு
எடுத்துரைத்து உள்ளீர்கள்
இதில் பிழை இல்லை அய்யா
காலம் தான்னே பதில் சொல்லனும்...இப்படியும் சொல்லுவாங்க!
ReplyDeleteபுரட்சி எப்போதும் பின்வாங்காது ..! நிச்சயம் ஒரு நாள் வெல்லும்
ReplyDeleteஇதயத்தின் வலிகளை வரிகளாக்கி, ஈழத்து உரிமைக்கு குரல் கொடுத்து உலகெங்கும் வாழ்கின்ற தமிழர் கூடி குரல் கொடுக்க கோரிக்கை வைத்து அழகான அருமையான கவிதை வரிகள் ஐயா .
ReplyDeleteஎங்கள் இனத்தில் ஒற்றுமையை அழகா சொல்லாமச் சொல்லியிருக்கீங்க ஐயா.உண்மைதான் ஒன்றுபட்டால மட்டுமே......!
ReplyDeleteஅனைத்து தமிழனுக்கும் இருக்கிறது ஈழ கனவு
ReplyDeleteஅது ஆகும் மிக அருகில் நனவு.
உங்களைப் போன்றவர்களின் வாக்குகளை இப்படி விதைத்தால் தான் நாளைப் புது ஈழம் என்ற விருச்சகத்தின் புரட்சிவேர்கள் அழுத்தமாக வேர்விடும்.
ReplyDeleteஅருமையான கவிதைங்க புலவர் ஐயா. நன்றிங்க.
உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்
ReplyDeleteஉருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!
திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி
தேவதையும் தேடிவர வழிதான்! விண்டோம்!
//
அழகான வரிகள் ஐயா...
புலவரவர்களின் புரட்சிக் குரல் எம் உயிர்நாடியை மீண்டும் சிலிர்க்க வைக்கின்றது. நிச்சயமாய் தமிழர் நாம் ஒன்றுபடின் கிடைத்திடும் விரைவில் ஈழம் எனும் தங்கத் தமிழ் நாடு. துன்பமின்றி நிம்மதியாய் சுதந்திரமாய் வாழ ஈழத்தமிழனுக்கு இதுவே வழி.
ReplyDeleteபிழை ஏது ஐயா?எண்ணிய முடிதல் வேண்டும் அதுவே அனைவரின் விருப்பமும்.
ReplyDeleteசெய்தாலி said..
ReplyDeleteஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
விக்கியுலகம் said...
ReplyDeleteஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள் said
ReplyDeleteஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சசிகலா said...
ReplyDeleteஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
முஹம்மது யாஸிர் அரபாத் said.
ReplyDeleteஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
AROUNA SELVAME said.
ReplyDeleteஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said..
ReplyDeleteஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சத்தியா said.
ReplyDeleteஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்