ஒலிக்கிறது தனிஈழம் தீர்வா மென்றே-ஆனால்
ஒற்றுமையோ வரவில்லை இதுவா நன்றே!
களிக்கிறது மனமெல்லாம் சொல்வேன் ஒன்றே-யாரும்
கடந்ததைப் பேசாமல் சேர்வீர் இன்றே!
சொல்வது யாரெனும் ஆய்வு வேண்டாம்-அவர்
சொற்பொருள் யாதென ஆய்த லீண்டாம்!
வெல்வது தனிஈழம் வருமே ஒருநாள்-நாம்
வீறுகொள்ள விரைந்திடுமே அந்தத் திருநாள்!
உலகெங்கும் வாழ்கின்ற தமிழ ரினமே-உன்
உணர்வாலே ஒன்றுபடின் ஈழம் வருமே!
கலகங்கள் நமக்குள்ளே வேண்டா மினியும்-உள்ள
கழகங்கள் ஒன்றாயின் காலங் கனியும்!
நடந்ததை மறப்பதே நமக்குத் தேவை!-ஈழம்
நல்கிட அனைவரும் செய்யும் சேவை!
திடமதை மனதிலே கொள்ள வேண்டும்-போர்
திட்டத்தை அறவழி தீட்ட வேண்டும்!
ஓரணி திரண்டாலே உடனே வெல்வோம்-குரல்
ஓங்கிட உலகுக்கு எடுத்துச் சொல்வோம்!
பேரணி ஆர்பாட்டம் ஊரில் எங்கும்-பேசும்
பேச்சிலே மூச்சிலே ஈழம் பொங்கும்!
குற்றமே பார்ப்பார்கும் சுற்றம் இல்லை-வெறும்
குறைசொல்லி வந்தாலே மேலும் தொல்லை!
செற்றமே நமக்குள்ளே வேண்டாம்! கெடுக்கும்-இரத்தம்
சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்!
புலவர் சா இராமாநுசம்
ஓரணி திரண்டாலே உடனே வெல்வோம்-குரல்
ReplyDeleteஓங்கிட உலகுக்கு எடுத்துச் சொல்வோம்!
பேரணி ஆர்பாட்டம் ஊரில் எங்கும்-பேசும்
பேச்சிலே மூச்சிலே ஈழம் பொங்கும்!//
ஒற்றுமையே பலம் என்பதை உணர்த்தும் வரிகள் மிகவும் அருமை ஐயா . தங்கள் வரிகளை உணர்ந்து படித்து நடந்தாலே வாழ்வு செழிக்கும் .
ஐயா எல்லோர் ஆசையும் அதுதானே ஆனால் அதை வைத்து அரசியல் ஓட்டுவதைத் தானே பொறுக்க முடியவில்லை..
ReplyDeleteஐயா புலவரே உங்கள் எண்ணமே எமதெண்ணமும். ஆயினும் எம் துயர்விற்று அரசியல் புரிவோரை நம்ப மறுக்கின்றது அடிபட்ட எம் உள்ளம். இனியும் அரசியல் இன்றி எமக்காய் மெய்யாய் குரல் கொடுத்தால் நலமே. அனைவரும் இத்தருணம் ஒன்றினைவது எம் தமிழுக்கு நாம் செய்யும் சேவை.
ReplyDeleteஎன்றாவது ஒரு நாள் தமிழில் ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவதை கேட்க வேண்டுமென்றால் தனி ஈழம் தோன்றியே ஆக வேண்டும், அந்த நாள் வரும் நம்பிக்கையோடு காத்திருப்போம் .!
ReplyDeleteநன்று!
ReplyDeleteமெய்யாய் உரைத்துவிடின் அனைத்தும் நன்றே
ReplyDeleteஅன்றேன் அடைத்து வைத்தாய் அதுதான் நன்றோ.?
சீர்மிகு கவிதை ஐயா. சிந்திக்க வேண்டும் நாம் அனைவரும்.
ReplyDeleteகாலம் கனியும் காத்திருப்போம்
ReplyDeleteவரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteஎன்றாவது ஒரு நாள் தமிழில் ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவதை கேட்க வேண்டுமென்றால் தனி ஈழம் தோன்றியே ஆக வேண்டும், அந்த நாள் வரும் நம்பிக்கையோடு காத்திருப்போம் .!
//
Amen.
வாழ்த்துக்கள் அய்யா...
//குற்றமே பார்ப்பார்கும் சுற்றம் இல்லை-வெறும்
ReplyDeleteகுறைசொல்லி வந்தாலே மேலும் தொல்லை!
செற்றமே நமக்குள்ளே வேண்டாம்! கெடுக்கும்-இரத்தம்
சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்!//
பழையதை சொல்லிக்கொண்டிருந்தால் பயன் ஏதும் இல்லை. இனிமேல் தமிழர் நலன் பெற ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை செம்மையாக விளக்குகிறது கவிதை
அண்ணே...இதை வைத்து பிழைப்பு நடத்தி அதன் மூலம் இன்று உயிர் வாழும் ஜந்துக்களை எப்படி பார்க்கிறதுன்னும் சொல்லுங்க!
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteவிடுமுறைக்கு இந்தியா வந்துள்ளதால்
சரியாக வலைப்பக்கம் வரமுடியவில்லை
பொறுத்தருள்க...
"நம்மில் ஒற்றுமை இருந்திடில் இல்லை தாழ்வு..
என உரைக்கும் அழகான கவிதை ஐயா...
சசிகலா said.
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
♔ம.தி.சுதா♔ said..
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
சத்தியா said.
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள் said.
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
AROUNA SELVAME said
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
தினேஷ்குமார் said.
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
சத்ரியன் said.
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
மனசாட்சி™ said
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said..
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
T.N.MURALIDHARAN said
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
விக்கியுலகம் said.
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteவருகை தந்தீர் வாழ்த்தும் தந்தீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்
தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .
ReplyDelete