Sunday, April 29, 2012

என்றும், கோழையாய் இருந்தே பலியானோம்!


கோடை வெயில் தொடங்கியதே-அதன்
   கொடுமையில் தெருவே முடங்கியதே!
ஆடையோ! வேர்வையில் குளித்ததுவே-மிக
   அனலில் உடலும் எரிந்ததுவே!
குடையோ! கையில் விரிந்திடவே-சற்றும்
   குறையா! வெம்மை! புரிந்திடவே!
நடையோ, அடடா! படுவேகம்-அவர்
   நடப்பதைக் காணின் படுசோகம்!

வீடு வந்தால் மின்கட்டே-வழியும்
   வேர்வை ஓடும் தரைத்தொட்டே!
காடும் இதைவிட நன்றாமே!-வெயில்
   கடுமை அங்கு இன்றாமே!
சூடு பட்டும் உணர்வில்லை!-ஏதும்
   சுரணை நமக்கும் வரவில்லை!
கேடு நீங்கும் நாள்வருமா?-இக்
   கேள்விக்குக் காலம் பதில்தருமா?

ஆண்டுகள் தோறும் இதுதானே!-மாறி
   ஆள்பவர் வரினும் இதுதானே!
தூண்டில் சிக்கிய மீனாக,-உயிர்
   துடித்துமே போகும் தானாக,
வேண்டுமா எண்ணிப் பாருங்கள்-வழி
   வேதனைத் தீர கூறுங்கள்!
கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
   கோழையாய் இருந்தே பலியானோம்!

             புலவர் சா இராமாநுசம்





30 comments:

  1. கோடை தணியத் தொடங்கியுள்ளது சில் இடங்களில் மின்வெட்டு அப்படியே நாமும் அப்படியே

    ReplyDelete
  2. "கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
    கோழையாய் இருந்தே பலியானோம்!"

    அற்புதமான கவிதை. மிகவும் அழகிய நடை

    ReplyDelete
  3. ரெம்ப சரியா சொன்னீர்கள் ஐயை

    இந்த
    நிலை மாறவேண்டும்
    அதற்கு ஆட்சி மாற்றமல்ல
    மக்கள் மனங்களில் வேண்டும்
    மாற்றம்

    ReplyDelete
  4. நல்ல சிந்தனைக் கவிக்கு நன்றி ஐயா!
    நேரம் கிடைத்தால் என் கவிதைக்கும் வந்து நீர் பாய்ச்சுங்களேன்!

    ReplyDelete
  5. தமிழானவன் said...


    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. MOHAMED YASIR ARAFATHsaid...

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. செய்தாலி said...

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. தமிழ் மீரான் said...


    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. செய்தாலி இங்கே கூறியுள்ள கூற்றை அப்படியே வழிமொழிகிறேன். படித்ததும் என் மனதில் தோன்றிய எண்ணங்களும் அதுவே! நன்று!

    ReplyDelete
  10. ஆதங்கம் ரொம்ப தெளிவா சொல்லிடீர்கள் - மாறி மாறி வந்து மக்களக்கு ஒன்னும் பண்ணல.

    மாறனும்னா ஒற்றுமை வேண்டும் அதான் இல்லையே.........????

    ReplyDelete
  11. கணேஷ் said....

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. மனசாட்சி™ said.

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. //வீடு வந்தால் மின்கட்டே-வழியும்
    வேர்வை ஓடும் தரைத்தொட்டே!
    காடும் இதைவிட நன்றாமே!-வெயில்
    கடுமை அங்கு இன்றாமே!//

    அருமையான வரிகள், இன்றைக்கு மிகவும் பொருத்தமாக.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. /வீடு வந்தால் மின்கட்டே-வழியும்
    வேர்வை ஓடும் தரைத்தொட்டே!
    காடும் இதைவிட நன்றாமே!-வெயில்
    கடுமை அங்கு இன்றாமே!/

    அருமையான கவிதை அய்யா

    இந்த மின்வெட்டின் கொடுமையிருக்கே.
    பாலையில் இருந்தப்பக்கூட
    இப்படியான கொடுமையை
    ஒருபோதும் அனுபவித்ததில்லை.

    அயல்மண்ணில் அயர்ந்து உறங்கினோம்
    ஆனால் சொந்த மண்ணில் சூட்டில் வேகிறோம்
    அதிலுமிந்த மின்வெட்டில் சாகிறோம்.

    ReplyDelete
  15. என்னே தமிழகத்தின் தலை விதி!

    ReplyDelete
  16. என்றும் கோழையர்களால் பலியாகின்றோம்.

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. அன்புடன் மலிக்கா said.

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. koodal bala said.

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. நல்ல கவிதை...

    பல மாநிலங்களில் இதே நிலைதான்... ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டுமெனச் சொன்னது நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.....

    ReplyDelete
  22. //கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
    கோழையாய் இருந்தே பலியானோம்!//
    உணர்வைத் தட்டி எழுப்பும் வரிகள்

    ReplyDelete
  23. வெங்கட் நாகராஜ் said...

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. T.N.MURALIDHARAN said...

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. புலவரையா... இன்றைய வலைச்சரத்தில் தங்களின் பதிவைக் குறிப்பிட்டுள்ளேன். சமயம் இருப்பின் பார்த்துக் கருத்தி்ட்டால் மிக மகிழ்வேன். நன்றி.

    http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_30.html

    ReplyDelete
  26. வெம்மையின் வேதனையோடு மக்களின் மனத்திண்மையின்மையைப் பிரதிபலிக்கும் வெம்மையான வரிகள். கவிதை மிக நன்று ஐயா.

    ReplyDelete
  27. திரு .ராமானுச ஐய்யா, வரிகளில் வெய்யிலின் வெம்மையையும் வாழ்க்கையின் யதார்த்தத்தையும்
    உணருகிறேன்.

    ReplyDelete
  28. கட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை...நல்ல கவிதை ஐயா...

    ReplyDelete
  29. ஒரு சின்ன 'கரு பொருளை' வைத்து இத்தனை பிரமாதமாக ஒரு கவியை வடிக்க இயலுமா ..?

    ReplyDelete
  30. அருமையானக் கவிதை ஐயா!

    ஆனால் இங்கே கொஞ்சம் வெயிலைப் பாட்டின் மூலமாவது அனுப்பி வையுங்கள் ஐயா.

    ReplyDelete