கோடை வெயில் தொடங்கியதே-அதன்
கொடுமையில் தெருவே முடங்கியதே!
ஆடையோ! வேர்வையில் குளித்ததுவே-மிக
அனலில் உடலும் எரிந்ததுவே!
குடையோ! கையில் விரிந்திடவே-சற்றும்
குறையா! வெம்மை! புரிந்திடவே!
நடையோ, அடடா! படுவேகம்-அவர்
நடப்பதைக் காணின் படுசோகம்!
வீடு வந்தால் மின்கட்டே-வழியும்
வேர்வை ஓடும் தரைத்தொட்டே!
காடும் இதைவிட நன்றாமே!-வெயில்
கடுமை அங்கு இன்றாமே!
சூடு பட்டும் உணர்வில்லை!-ஏதும்
சுரணை நமக்கும் வரவில்லை!
கேடு நீங்கும் நாள்வருமா?-இக்
கேள்விக்குக் காலம் பதில்தருமா?
ஆண்டுகள் தோறும் இதுதானே!-மாறி
ஆள்பவர் வரினும் இதுதானே!
தூண்டில் சிக்கிய மீனாக,-உயிர்
துடித்துமே போகும் தானாக,
வேண்டுமா எண்ணிப் பாருங்கள்-வழி
வேதனைத் தீர கூறுங்கள்!
கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
கோழையாய் இருந்தே பலியானோம்!
புலவர் சா இராமாநுசம்
கோடை தணியத் தொடங்கியுள்ளது சில் இடங்களில் மின்வெட்டு அப்படியே நாமும் அப்படியே
ReplyDelete"கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
ReplyDeleteகோழையாய் இருந்தே பலியானோம்!"
அற்புதமான கவிதை. மிகவும் அழகிய நடை
ரெம்ப சரியா சொன்னீர்கள் ஐயை
ReplyDeleteஇந்த
நிலை மாறவேண்டும்
அதற்கு ஆட்சி மாற்றமல்ல
மக்கள் மனங்களில் வேண்டும்
மாற்றம்
நல்ல சிந்தனைக் கவிக்கு நன்றி ஐயா!
ReplyDeleteநேரம் கிடைத்தால் என் கவிதைக்கும் வந்து நீர் பாய்ச்சுங்களேன்!
தமிழானவன் said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
MOHAMED YASIR ARAFATHsaid...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
செய்தாலி said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
தமிழ் மீரான் said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
செய்தாலி இங்கே கூறியுள்ள கூற்றை அப்படியே வழிமொழிகிறேன். படித்ததும் என் மனதில் தோன்றிய எண்ணங்களும் அதுவே! நன்று!
ReplyDeleteஆதங்கம் ரொம்ப தெளிவா சொல்லிடீர்கள் - மாறி மாறி வந்து மக்களக்கு ஒன்னும் பண்ணல.
ReplyDeleteமாறனும்னா ஒற்றுமை வேண்டும் அதான் இல்லையே.........????
கணேஷ் said....
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
மனசாட்சி™ said.
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
//வீடு வந்தால் மின்கட்டே-வழியும்
ReplyDeleteவேர்வை ஓடும் தரைத்தொட்டே!
காடும் இதைவிட நன்றாமே!-வெயில்
கடுமை அங்கு இன்றாமே!//
அருமையான வரிகள், இன்றைக்கு மிகவும் பொருத்தமாக.
பாராட்டுக்கள்.
/வீடு வந்தால் மின்கட்டே-வழியும்
ReplyDeleteவேர்வை ஓடும் தரைத்தொட்டே!
காடும் இதைவிட நன்றாமே!-வெயில்
கடுமை அங்கு இன்றாமே!/
அருமையான கவிதை அய்யா
இந்த மின்வெட்டின் கொடுமையிருக்கே.
பாலையில் இருந்தப்பக்கூட
இப்படியான கொடுமையை
ஒருபோதும் அனுபவித்ததில்லை.
அயல்மண்ணில் அயர்ந்து உறங்கினோம்
ஆனால் சொந்த மண்ணில் சூட்டில் வேகிறோம்
அதிலுமிந்த மின்வெட்டில் சாகிறோம்.
என்னே தமிழகத்தின் தலை விதி!
ReplyDeleteஎன்றும் கோழையர்களால் பலியாகின்றோம்.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
அன்புடன் மலிக்கா said.
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
koodal bala said.
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
நல்ல கவிதை...
ReplyDeleteபல மாநிலங்களில் இதே நிலைதான்... ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டுமெனச் சொன்னது நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.....
//கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
ReplyDeleteகோழையாய் இருந்தே பலியானோம்!//
உணர்வைத் தட்டி எழுப்பும் வரிகள்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
T.N.MURALIDHARAN said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!புலவர் சா இராமாநுசம்
புலவரையா... இன்றைய வலைச்சரத்தில் தங்களின் பதிவைக் குறிப்பிட்டுள்ளேன். சமயம் இருப்பின் பார்த்துக் கருத்தி்ட்டால் மிக மகிழ்வேன். நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/04/blog-post_30.html
வெம்மையின் வேதனையோடு மக்களின் மனத்திண்மையின்மையைப் பிரதிபலிக்கும் வெம்மையான வரிகள். கவிதை மிக நன்று ஐயா.
ReplyDeleteதிரு .ராமானுச ஐய்யா, வரிகளில் வெய்யிலின் வெம்மையையும் வாழ்க்கையின் யதார்த்தத்தையும்
ReplyDeleteஉணருகிறேன்.
கட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை...நல்ல கவிதை ஐயா...
ReplyDeleteஒரு சின்ன 'கரு பொருளை' வைத்து இத்தனை பிரமாதமாக ஒரு கவியை வடிக்க இயலுமா ..?
ReplyDeleteஅருமையானக் கவிதை ஐயா!
ReplyDeleteஆனால் இங்கே கொஞ்சம் வெயிலைப் பாட்டின் மூலமாவது அனுப்பி வையுங்கள் ஐயா.