Friday, April 27, 2012

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
   அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம்!
மன்னவ ராயினும் மறத்தல் இயலாம்
   மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்!
பின்னை அவர்தமை பேணி மேலும்
   பிள்ளைகள் என்போர் பணிசெய நாளும்
தென்னை மரமாய்ப் பெற்றவர் தாமே
    தினமும் காத்து வளர்தவர் ஆமே!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
   ஆன்றோர் கூறிய மூதுரை, இன்று!
சீலமாய் எண்ணி செயல்படின் நன்மை
   செப்பவும் வேண்டுமா? வருவது உண்மை!
கோலமே போடுவார் புள்ளிகள் இடுவதும்
    கோபுரம்கண்டே கன்னத்தைத் தொடுவதும்
ஞாலமே சுற்றலும் நாயகன்செயலே!
    நம்பியே எதையும் செய்திடமுயலே!

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
   ஈத்து உவப்பவர் இறையெனச் சொல்வர்!
வாய்தனை அடக்கி வைத்திடின் வெல்வர்
   வாழ்வில் அமைதி  வழியெனச் செல்வர்!
நோய்நொடி இன்றே நேர்வழி சென்றே
   நொந்தவர் துயரம் போக்கிட நன்றே!
தாய்மை குணமே தனக்கெனக் கொண்டே
   தன்னலம் இன்றி செய்வீர் தொண்டே!


             புலவர் சா இராமாநுசம்

27 comments:

  1. கோலமே போடுவார் புள்ளிகள் இடுவதும் | கோபுரம்கண்டே கன்னத்தைத் தொடுவதும் | ஞாலமே சுற்றலும் நாயகன்செயலே! -அழகாய்ச் சொன்னீர்கள். எல்லாம் அவன் செயலே என்ற அழுத்தமான நம்பிக்கை வேண்டு். அந்தக் கடைசி இரண்டு வரிகள்... மிகமிக உண்மை. தாய்மை குணத்தை தமக்கெனக் கொண்டு தன்னலமற்ற தொண்டு செய்பவர்கள் இறையை நிகர்த்தவர்களல்லவா? அருமையான பா!

    ReplyDelete
  2. அருமையான பா. பாவிற்கான வார்த்தைத் தேர்வுகள் அபாரம். வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  3. //தாய்மை குணமே தனக்கெனக் கொண்டே
    தன்னலம் இன்றி செய்வீர் தொண்டே!//

    அழகிய அறிவுரை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா.

    மூத்தோர் சொல் வார்த்தைகளை உள்ளடக்கி அருமையான ஓர் கவிதையினை கொடுத்திருக்கிறீங்க.

    நன்றி.

    ReplyDelete
  5. அருமையான கவிதை ஐயா ..!

    ReplyDelete
  6. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
    ஈத்து உவப்பவர் இறையெனச் சொல்வர்!
    வாய்தனை அடக்கி வைத்திடின் வெல்வர்
    வாழ்வில் அமைதி வழியெனச் செல்வர்!“

    வணக்கம் ஐயா.
    பாடலை ரசித்துப் படித்தேன்.மிக்க நன்றிங்க.
    இதில் ஈயார் “தேட்டை“ என்றால் என்ன பொருளுங்க ஐயா?

    ReplyDelete
  7. கோபுரம்கண்டே கன்னத்தைத் தொடுவதும்
    ஞாலமே சுற்றலும் நாயகன்செயலே!
    நம்பியே எதையும் செய்திடமுயலே!
    அற்ப்புதமான வரிகள் ஐயா தன்னலம் இன்றியே தொண்டு செய்பவர்கள் கிடைத்தால் நாடு செழிக்கும் அல்லவா ..

    ReplyDelete
  8. அருமையான அறிவுரைகள் ஐயா!

    ReplyDelete
  9. அழகிய அறிவுரைகள்...அருமையான கவிதை...

    ReplyDelete
  10. உங்கள் அறிவின் பலமும் அநுபவத்தின் பலமும் சேர்ந்து எத்தனை வாழ்வியல் கவிதைகளை நாங்கள் அனுபவிக்கிறோம்.நன்றி ஐயா !

    ReplyDelete
  11. ஐயா உங்களது பதிவை படித்த கணம் கவிதையாக உணரவில்லை, பள்ளி பருவத்தில் தமிழ் பாடத்தின் ஒரு பிரிவை படித்த உணர்வு ...
    இதற்கு பெயர் தான் கவிதை என்றால் என் பதிவை வெளியிடும் போது கவிதை படைப்பின் கீழ் என்று சொல்வதற்கு பெறு தயக்கமே ......

    ReplyDelete
  12. resend..sorry sir..average student made a mistake with ரு;
    ஐயா உங்களது பதிவை படித்த கணம் கவிதையாக உணரவில்லை, பள்ளி பருவத்தில் தமிழ் பாடத்தின் ஒரு பிரிவை படித்த உணர்வு ...
    இதற்கு பெயர் தான் கவிதை என்றால் என் பதிவை வெளியிடும் போது கவிதை படைப்பின் கீழ் என்று சொல்வதற்கு பெரு தயக்கமே ......

    ReplyDelete
  13. அழகாய் பெரியோர்கள் பெற்றவர்கள் என்பதைச் சொல்லும் கவிதை.

    ReplyDelete
  14. கணேஷ் said...

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. வெங்கட் நாகராஜ் said...

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. வை.கோபாலகிருஷ்ணன் said...

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. நிரூபன்said...


    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. வரலாற்று சுவடுகள் said...

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. AROUNA SELVAMEsaid...

    இதில் ஈயார் “தேட்டை“ என்றால் என்ன பொருளுங்க ஐயா?

    தேட்டை என்றால் செல்வம். ஈயார்- ஈகை
    குணமிலார் பொருளைத் தீயவர்கள் கைப்பற்றுவார்கள் என்பதே ஆகும்

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. சசிகலா said...


    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. koodal balasaid

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. ரெவெரி said...

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. ஹேமா said...


    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. தனிமரம்said...

    வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. சரளமான வார்த்தைகள் படிக்கப் படிக்க
    இன்பமும் பிரமிப்பும் ஊட்டிப் போகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. வணக்கம் ஐயா!
    தாங்கள் தந்த விளக்க உரைக்கு மிக்க நன்றிங்க.
    என்னிடம் இருந்த அகராதியில் தேட்டை என்ற வார்த்தைக்குப் பொருள் இல்லாததால் உங்களிடம் கேட்டேன். மீண்டும் நன்றிங்க ஐயா.

    ReplyDelete