அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம்!
மன்னவ ராயினும் மறத்தல் இயலாம்
மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்!
பின்னை அவர்தமை பேணி மேலும்
பிள்ளைகள் என்போர் பணிசெய நாளும்
தென்னை மரமாய்ப் பெற்றவர் தாமே
தினமும் காத்து வளர்தவர் ஆமே!
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஆன்றோர் கூறிய மூதுரை, இன்று!
சீலமாய் எண்ணி செயல்படின் நன்மை
செப்பவும் வேண்டுமா? வருவது உண்மை!
கோலமே போடுவார் புள்ளிகள் இடுவதும்
கோபுரம்கண்டே கன்னத்தைத் தொடுவதும்
ஞாலமே சுற்றலும் நாயகன்செயலே!
நம்பியே எதையும் செய்திடமுயலே!
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
ஈத்து உவப்பவர் இறையெனச் சொல்வர்!
வாய்தனை அடக்கி வைத்திடின் வெல்வர்
வாழ்வில் அமைதி வழியெனச் செல்வர்!
நோய்நொடி இன்றே நேர்வழி சென்றே
நொந்தவர் துயரம் போக்கிட நன்றே!
தாய்மை குணமே தனக்கெனக் கொண்டே
தன்னலம் இன்றி செய்வீர் தொண்டே!
புலவர் சா இராமாநுசம்
கோலமே போடுவார் புள்ளிகள் இடுவதும் | கோபுரம்கண்டே கன்னத்தைத் தொடுவதும் | ஞாலமே சுற்றலும் நாயகன்செயலே! -அழகாய்ச் சொன்னீர்கள். எல்லாம் அவன் செயலே என்ற அழுத்தமான நம்பிக்கை வேண்டு். அந்தக் கடைசி இரண்டு வரிகள்... மிகமிக உண்மை. தாய்மை குணத்தை தமக்கெனக் கொண்டு தன்னலமற்ற தொண்டு செய்பவர்கள் இறையை நிகர்த்தவர்களல்லவா? அருமையான பா!
ReplyDeleteஅருமையான பா. பாவிற்கான வார்த்தைத் தேர்வுகள் அபாரம். வாழ்த்துகள் ஐயா.
ReplyDelete//தாய்மை குணமே தனக்கெனக் கொண்டே
ReplyDeleteதன்னலம் இன்றி செய்வீர் தொண்டே!//
அழகிய அறிவுரை. பாராட்டுக்கள்.
வணக்கம் ஐயா.
ReplyDeleteமூத்தோர் சொல் வார்த்தைகளை உள்ளடக்கி அருமையான ஓர் கவிதையினை கொடுத்திருக்கிறீங்க.
நன்றி.
அருமையான கவிதை ஐயா ..!
ReplyDeleteஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
ReplyDeleteஈத்து உவப்பவர் இறையெனச் சொல்வர்!
வாய்தனை அடக்கி வைத்திடின் வெல்வர்
வாழ்வில் அமைதி வழியெனச் செல்வர்!“
வணக்கம் ஐயா.
பாடலை ரசித்துப் படித்தேன்.மிக்க நன்றிங்க.
இதில் ஈயார் “தேட்டை“ என்றால் என்ன பொருளுங்க ஐயா?
கோபுரம்கண்டே கன்னத்தைத் தொடுவதும்
ReplyDeleteஞாலமே சுற்றலும் நாயகன்செயலே!
நம்பியே எதையும் செய்திடமுயலே!
அற்ப்புதமான வரிகள் ஐயா தன்னலம் இன்றியே தொண்டு செய்பவர்கள் கிடைத்தால் நாடு செழிக்கும் அல்லவா ..
அருமையான அறிவுரைகள் ஐயா!
ReplyDeleteஅழகிய அறிவுரைகள்...அருமையான கவிதை...
ReplyDeleteஉங்கள் அறிவின் பலமும் அநுபவத்தின் பலமும் சேர்ந்து எத்தனை வாழ்வியல் கவிதைகளை நாங்கள் அனுபவிக்கிறோம்.நன்றி ஐயா !
ReplyDeleteஐயா உங்களது பதிவை படித்த கணம் கவிதையாக உணரவில்லை, பள்ளி பருவத்தில் தமிழ் பாடத்தின் ஒரு பிரிவை படித்த உணர்வு ...
ReplyDeleteஇதற்கு பெயர் தான் கவிதை என்றால் என் பதிவை வெளியிடும் போது கவிதை படைப்பின் கீழ் என்று சொல்வதற்கு பெறு தயக்கமே ......
resend..sorry sir..average student made a mistake with ரு;
ReplyDeleteஐயா உங்களது பதிவை படித்த கணம் கவிதையாக உணரவில்லை, பள்ளி பருவத்தில் தமிழ் பாடத்தின் ஒரு பிரிவை படித்த உணர்வு ...
இதற்கு பெயர் தான் கவிதை என்றால் என் பதிவை வெளியிடும் போது கவிதை படைப்பின் கீழ் என்று சொல்வதற்கு பெரு தயக்கமே ......
அழகாய் பெரியோர்கள் பெற்றவர்கள் என்பதைச் சொல்லும் கவிதை.
ReplyDeleteகணேஷ் said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நிரூபன்said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
AROUNA SELVAMEsaid...
ReplyDeleteஇதில் ஈயார் “தேட்டை“ என்றால் என்ன பொருளுங்க ஐயா?
தேட்டை என்றால் செல்வம். ஈயார்- ஈகை
குணமிலார் பொருளைத் தீயவர்கள் கைப்பற்றுவார்கள் என்பதே ஆகும்
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சசிகலா said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
koodal balasaid
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தனிமரம்said...
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சரளமான வார்த்தைகள் படிக்கப் படிக்க
ReplyDeleteஇன்பமும் பிரமிப்பும் ஊட்டிப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 10
ReplyDeleteவணக்கம் ஐயா!
ReplyDeleteதாங்கள் தந்த விளக்க உரைக்கு மிக்க நன்றிங்க.
என்னிடம் இருந்த அகராதியில் தேட்டை என்ற வார்த்தைக்குப் பொருள் இல்லாததால் உங்களிடம் கேட்டேன். மீண்டும் நன்றிங்க ஐயா.