Wednesday, April 25, 2012

உன்னெழில் வாழ்வுக்கு உரமே!


    
சினமது சேர்ந்தாரைக் கொல்லி!-என
  செப்பிய குறள்தன்னை உள்ளி!
இனமது காத்திட வேண்டும்-நல்
  இன்பமேப் பூத்திட யாண்டும்!
மனமது வைத்தாலே போதும்-பொது
  மறையது சொல்வது யாதும்!
தினமது எண்ணியே வாழ்வீர்-சினம்
   தேவையா?ஆய்வாக சூழ்வீர்!

செல்லிடம் காப்பதே! சினமும்-என
   சிந்தித்துச் செயல்பட! மனமும்!
அல்லிடம் காப்பதா!? அன்றே!-இதை
   அறிவது அனைவரும் நன்றே!
பல்லிடம் நஞ்சினை வைத்தே-நல்
    பாம்பென பகைகொண்டுக் கொத்த!
இல்லிடம் நெஞ்சிலே! சினமே-முடிவு
    எடுத்தாலே வாழ்வீரக் கணமே!

தன்னையே தான்காக்க எவரும்-சினம்
    தன்னையே காத்திடின் அவரும்!
நன்னலம் காண்பரே என்றும்-வாழ்வில்
    நடந்திடின் அறிவரே இன்றும்!
பொன்நிகர் வள்ளுவன் குறளே-எடுத்து
    போதிக்கும் வழிதேடி வரலே!
உன்னெழில் வாழ்வுக்கு உரமே-என
   உணர்தலே நாம்பெற்ற வரமே!

                                 புலவர் சா இராமாநுசம்


18 comments :

  1. சிறப்பான கவிதை.

    ஆனாலும், சில வேளைகளில் சினம் தேவையாக இருக்கிறதே ஐயா.

    ReplyDelete
  2. உன்னெழில் வாழ்வுக்கு உரமே-என
    உணர்தலே நாம்பெற்ற வரமே!
    சிறப்பான வரிகள் ஐயா உணர்ந்தாலே போதுமே .

    ReplyDelete
  3. சினம் வரும்போது மனதை அமைதிப்படுத்தினால் பெரும் பாதிப்புக்களைத் தவிர்க்கலாம்.நன்றி ஐயா !

    ReplyDelete
  4. வணக்கம்! சினத்தினால் வரும் கேட்டினை சுட்டிக் காட்டிய கவிதை.

    ReplyDelete
  5. கவிதை நன்றாக உள்ளது ஐயா.
    ஆனால்
    கோபம் வரும்போது இந்த பாட்டெல்லாம்
    இதில் உள்ள கருத்தெல்லாம் ஞாபகத்திற்கு வரவே மாட்டேங்கிறது ஐயா.

    ReplyDelete
  6. தேவையான நேரத்தில் சரியான அளவில் வந்தால் தப்பில்லையோ...

    ReplyDelete
  7. சத்ரியன் said...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. சசிகலா said...


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. ஹேமா said

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. தி.தமிழ் இளங்கோsaid...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. AROUNA SELVAME said


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. ரெவெரிsaid...


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. சினம் கொண்டு உபயோகமில்லை என அழகிய பா மூலம் உரைத்திட்டீர். உண்மையே. நன்றி.

    ReplyDelete
  14. எதுகை மோனைகள் கவியில்
    புலப்படுகிறது ஜயாஇ
    தாங்கள் காளமேகரின் சிஷ்யரோ???
    மிக அருமையாக உள்ளது ஜயா கவி...

    ReplyDelete
  15. வெங்கட் நாகராஜ் said...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. Esther sabi said...


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. சினத்தினை துணையாக கொண்டு சாதிக்க போவதில்லை என உங்க கவி மூலம் அறிந்து கொண்டேன், ஏன்னா எனக்கு நிறைய கோவம் வரும்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...