Friday, April 20, 2012

இளமையில் வறுமை இன்னாது!


இளமையில் வறுமை இன்னாது
   இசையின்றிப் பாடல் இன்னாது!
வளமிலா வயலே இன்னாது
   வன்சொல் கூறல் இன்னாது!
அளவிலாச் செலவும் இன்னாது
   ஆயாது செய்தலும் இன்னாது!
களமின்றி ஆடல் இன்னாது
      காதலில் தோல்வியும் இன்னாது!


கூடா ஒழுக்கம் இன்னாது
  குறையேக் காணல் இன்னாது!
வீடே இன்றெனில் இன்னாது
  விவேகம் இன்றெனில் இன்னாது!
ஆடா அரங்கும் இன்னாது
  அன்பிலா இல்லம் இன்னாது!
காடாம் நாடெனில் இன்னாது
  கடமையை மறப்பது இன்னாது!


உழைப்பின்றி உண்பது இன்னாது
  உணராது வாழ்வதும் இன்னாது!
அழைப்பின்றிச் செல்வதும் இன்னாது
  அனுபவ மின்மையும் இன்னாது!
பிழைப்பின்றி வாடுதல் இன்னாது
  பிறனில் விழைதல் இன்னாது!
மழையின்றி பயிரிடல் இன்னாது
   மறதியும் சோம்பலும் இன்னாது!

                          புலவர் சா இராமாநுசம்




20 comments:

  1. இனனாத விஷயங்களை அருமையாக அடுக்கிச சொன்னீர்கள் ஐயா. இவற்றை விலக்கி இனியவற்றையே கொண்டு வளமோடு வாழ்வோம் யாம். இதயம் நிறை நன்றி தங்களுக்கு...

    ReplyDelete
  2. அனைத்து இன்னாத் விஷயங்களையும் அருமையாகச் சொல்லிவிட்டீர்களே! ;)))))

    ReplyDelete
  3. இன்னாத செயல்களை இனிமையாக கூறி விட்டீர்கள் ஐயா.

    ReplyDelete
  4. இன்னா 24 கவிதை அருமை!

    ReplyDelete
  5. சில நாட்கள் நீங்கள் கவிதை பதியாமலிருப்பது இன்னாது...

    ReplyDelete
  6. ஐயாவின் கவிதையின்றி பதிவுலகம் இன்னாது!

    ReplyDelete
  7. இந்த இன்னாதுக்களை மனதில் பதித்தாலே போதும்.வாழ்வு இனிக்கும் !

    ReplyDelete
  8. இந்த அழகு கவிதையை படித்துவிட்டு கருத்துரைக்காம போனா அதுவும் இன்னாத்தே. பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  9. கணேஷ் said...

    நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    சா இராமாநுசம்

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன்said...

    நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    சா இராமாநுசம்

    ReplyDelete
  11. சசிகலா said

    நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    சா இராமாநுசம்

    ReplyDelete
  12. koodal balasaid...

    நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    சா இராமாநுசம்

    ReplyDelete
  13. ரெவெரி said...


    நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    சா இராமாநுசம்

    ReplyDelete
  14. சென்னை பித்தன்said

    நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. ஹேமா said...


    நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    சா இராமாநுசம்

    ReplyDelete
  16. ராஜிsaid...


    நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. வறுமையும் சோம்பலும் இன்னாது கவிதை கண்டு ரசித்தேன் புலவரே.
    முதுகு வலி நலம் தானே ஐயா.

    ReplyDelete
  18. இன்னாது செயல்களை அந்தந்த பருவங்களுக்கேற்ற விதத்தில் சொல்லியுள்ளீர்கள ஜயா... மிக அருமை இனிய வாழ்வுக்கு வழிவகுக்கும் இனிய கவி......

    ReplyDelete
  19. வணக்கம்! இன்னாது அம்ம இவ்வுலகம்! இனியது காண்க! இதன் இயல்புணர்ந்தோரே!

    ReplyDelete
  20. முழுமையான சரியான வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளது
    உங்கள் கவிதை ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete