Sunday, April 15, 2012

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
   உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!
ஆதாரம் இல்லாமல் பேச  வேண்டாம்
   அவதூறு செய்வாரின் உறவே வேண்டாம்!
யாதானும் வாழும்வழி காண வேண்டாம்
    என்றென்றும் பகைமையே பூண வேண்டாம்!
தீதாகப் பொருள்தேடி சேர்த்தல் வேண்டாம்
    திட்டமிட்டு வாழ்வதை மறக்க வேண்டாம்!


வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!
களவான மனங்கொண்டுப் பழக வேண்டாம்
    கருணையின்றி பிறர்நோகப் பேசல் வேண்டாம்!
உளமின்றி வெறுப்போடு உதவல் வேண்டாம்
    உதட்டளவு வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்!
அளவின்றி யாரோடும் பழக வேண்டாம்
     ஆசைகளை பல்வகையில் பெருக்க வேண்டாம்!


கோழையெனப் பிறர்சொல்ல நடக்க வேண்டாம்
     குறைகளைய எள்ளவும் தயங்க வேண்டாம்!
ஏழையெனில் இரங்காத மனமே வேண்டாம்
     ஏமாற்றிப் பிழைக்கின்ற பிழப்பே வேண்டாம்!
பேழையுள் பணம்போல உறங்க வேண்டாம்
    பிறருக்கு பயன்படத் தயங்க வேண்டாம்!
தாழையின் பாம்பாக இருக்க வேண்டாம்
     தரமில்லா மனிதர்க்கு இணங்க வேண்டாம்!

                                       புலவர் சா இராமாநுசம்






25 comments:

  1. //பேழையுள் பணம்போல உறங்க வேண்டாம்
    பிறருக்கு பயன்படத் தயங்க வேண்டாம்!//

    - என்னை மிகவும் கவர்ந்த வரிகள். மட்டுமல்ல. அத்தனையும் வைர வரிகள். ஒரு புதிய ஆத்திசூடி போல் இருக்கிறது. மனம் கவர்ந்த பதிவு. வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
  2. அவ்வையின் வார்த்தையில் தொடங்கி, இன்றைய காலத்திற்கேற்ப வேண்டாதவைகளைப் பட்டியலிட்ட தங்கள் கவிதை அருமை.

    ReplyDelete
  3. //வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்! //

    காலத்துக்கு ஏற்ற அறிவுரை,ஐயா.

    ReplyDelete
  4. நல்ல கருத்துக்கள்.//அவதூறு செய்வாரின் உறவே வேண்டாம்!// இந்த வரிகள் யாரை நினைத்து எழுதியதோ!!!

    ReplyDelete
  5. எமக்காய் வாழ்வியல் கூறுகளை
    அழகுத் தமிழில் புனைந்துதரும்
    நீவீர்..
    ஆண் உருக்கொண்டு வந்த
    கலியுலக ஒளவையே ஐயா...

    ReplyDelete
  6. உதட்டளவு வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்!
    அளவின்றி யாரோடும் பழக வேண்டாம்//நிறைய பேர் இதை செய்கிறார்கள் நான் உட்பட அருமை

    ReplyDelete
  7. உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!
    ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம்////

    ரொம்ப ரொம்ப சரி

    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!///

    ஆம் உண்மைதான்

    ReplyDelete
  8. துரைடேனியல் said

    நன்றி!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. T.N.MURALIDHARAN said


    நன்றி!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. Vigna said...


    நன்றி!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. மகேந்திரன்said...

    நன்றி!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. PREM.S said

    நன்றி!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. Vairai Sathishsaid...


    நன்றி!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. விச்சு said...


    நன்றி!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. Nice one

    http://vazhithunai.blogspot.in/2012/04/blog-post.html

    ReplyDelete
  16. அருமையான கருத்துள்ள கவிதை ஐயா.

    ReplyDelete
  17. ம்ம்ம் ரெம்ப ரெம்ப அருமை அய்யா
    அன்று
    பால்யத்தில் கற்றதை
    மீண்டும் ஒருமுறை
    இக் காலத்திற்கேற்ப அருமை அருமை

    என்றும் நினைவில் கொள்ளவேண்டிய வரிகள்

    அர்த்தமுள்ள பாடலுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  18. //வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!//

    மிக அருமையான பாடல்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  19. Ramasubramaniam said...

    நன்றி!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. AROUNA SELVAME said

    நன்றி!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. செய்தாலி said...


    நன்றி!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. வெங்கட் நாகராஜ் said..

    நன்றி!
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. இன்றைய வாழ்வுக்குரிய வேண்டுதல்கள்.மனதில் பதித்துக்கொள்வோம் !

    ReplyDelete
  24. மிகமிகமிக அருமையான வாழ்வியல் நெறிகள் சொல்லும் ஆக்கம் இது ஐயா.

    //தாழையின் பாம்பாக இருக்க வேண்டாம்//

    அடடா! என்னவொரு உட்பொருள் மிக்க வரியிது!

    ReplyDelete
  25. அய்யா!

    வாழ்வியல் தத்துவங்கள்-
    அய்யா!

    அறிவுரைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete