எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது-நல்
இல்லறம் ஒன்றேதான் என்றுமினிது!
பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்
பிழையின்றி பேசலே மொழிக்கினிது!
கண்ணியம் காத்தலே மாந்தர்க்கினிது-கல்வி
கற்றாரைக் காமுற்று காணலினிது!
புண்ணியம் தேடலே வாழ்விலினிது-செய்யும்
பொதுவாழ்வு தன்னிலே நேர்மையினிது!
கொல்லாமை விரதாமாய்க் கொள்ளலினிது-நல்
கொள்கையின் வழிநாடி நடத்தலினிது!
இல்லாமை நோயின்றி இருத்தலினிது-தம்
இயல்பாலே காண்போரைக் கவர்தலினிது!
சொல்லாமை பொய்தன்னை அறத்திலினிது-எதுவும்
சொந்தமெனச் சொல்வதை மறத்தலினிது!
கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக்
கயவரைக் கண்டாலே விலகலினிது!
பாராட்டி பகைவரை பேசலினிது-அப்
பகைமையும் அதனாலே நீங்கலினிது!
ஊரோடு ஒத்துமே போதலினிது-தம்
உறவோடு ஒற்றுமையே ஆதலினிது!
வேரோடு முள்தன்னைக் களைதலினிது-நல்
வேந்தன்கீழ் வாழ்தலே மாந்தர்க்கினிது!
சீரோடு இதுபோலப் பலவுமினிது-எடுத்துச்
செப்பிட ஆனாலும் போதுமினி(யி)து!
புலவர் சா இராமாநுசம்
Hai Sir, your poem is nice really..
ReplyDeleteஇனியவை 40 போல வாழ்க்கைக்குத் தேவையான இனிய 24 அருமை புலவரே.
ReplyDeleteபுலவரின் கவிதைகளைப் படித்தலினிது
ReplyDeleteபடித்தலினும் அதன்படி ஒழுகலினிது.
அற்புதமான வாழும் வழிகளினிது.
அத்தனையும் பின்பற்ற வாழ்க்கை இனிது.
நன்றியும் பாராட்டும் ஐயா.
இனியது என்ன என்று வினா புனைந்த
ReplyDeleteமுருகனுக்கு ஔவை மொழியுரைத்தது போல
அழகாக உரைத்தீர்கள் ஐயா.
K DhanaseKar said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
guna thamizh said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கீதமஞ்சரி said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
பாராட்டி பகைவரை பேசலினிது-அப்
ReplyDeleteபகைமையும் அதனாலே நீங்கலினிது!
-எல்லா வரிகளும் கவர்ந்தன. எனினும் இந்த வரிகள் மிகமிகப் பிடித்தன. இதன் மூலம் எதிரியை அழித்து விடுகிறோம். நண்பனாய் உருவாக்கிக கொள்கிறோம். அருமை ஐயா...
இனியவைகளை என்றும் நாம் தேடிச் செல்ல அவசியம் இல்லை எல்லாம் எண்ணத்தின் விதைதனிலே இனிதாய் எங்கும் கிட்டும் என்பதனை உணர்த்திய வரிகளின் நிழலில் சிறிது நேரம் தலை சாய்த்தாலும் மாறத உலகிது மாறுவோர் சிலரெனும் அவரை ஆட்டிப் படைத்துவிடும் அகதியாக.......
ReplyDeleteஇனியவை பாடல்
ReplyDeleteநல் வாழ்க்கைக்கான
அழகிய தத்துவம்
அருமை ஐயா
கணேஷ் said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தினேஷ்குமார் said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
செய்தாலி said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
பொன்னான வரிகள் ...இனிது!
ReplyDeleteஇவையெல்லாம் வாழவேண்டுமெனில் "அன்பினிது ".
ReplyDeleteதாங்கள் பட்டியலிட்டுள்ள இனியவகளை பின்பற்றினால் வாழ்க்கை இனியதாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை ஐயா. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteத ம 7
ReplyDeleteஇனிது இனிது ஐயாவின் கவிதையினிது.
ReplyDeleteஇனிப்பான பாடல் வரிகள் ஐயா!
ReplyDeleteஇனிய கவிதை அய்யா! தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete"தமிழக அரசின்-புத்தாண்டு" வாழத்துக்கள்!
ReplyDeleteவருடம் பிறக்கும் தருணத்தில் இனியவைகள் கோர்த்தெடுத்த கவிதை.இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா !
ReplyDeleteஇனிது இனிது அத்தனையும் மிக இனிது
ReplyDeletekoodal bala said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சசிகலா said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ராஜி said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
AROUNA SELVAME said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
shanmugavel said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நம்பள்கி! said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
T.N.MURALIDHARAN said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
எதெது இனிதென்று சொன்ன மரபுக் கவிதையும் இனிதென்று நானல்ல வையகமே சாட்சி கொடுக்கிறதே. நன்று அய்யா.
ReplyDelete