Wednesday, March 14, 2012

வங்கக் கடலில் புயல்போல வருவீர்! எழுவீர்! அலைபோல!


இனியும் எதற்காம் வேடிக்கை-மத்தியில்
   எடுத்த முடிவவர் வாடிக்கை!
கனியும் காயல பிஞ்சவரே-ஆடிக்
   காற்றில் பறக்கும் பஞ்சவரே
பணிந்து வேண்டுதல் நம்தவறே-அறப்
   போரினைத் தொடர நம்மவரே
துணிந்து செயல்படின் இப்போதே-உடன்
   தொல்லைத் தீரும் அப்போதே!

ஊருக்கு ஊரும் ஊர்வலமே-உணர்வு
   ஓங்கிடத் தருவீர் ஒலிவளமே
யாருக்கும் அஞ்சிட வேண்டாமே-மேலே
    எதுவும் நடப்பினும் ஈண்டாமே
பேருக்கு செய்வது இதுவல்ல-வீண்
    போட்டிக்கும் செய்வது இதுவல்ல
கோரிக்கை வைத்தோம் பயனில்லை-என்றும்
    கோழையா? நாங்கள்! இனியில்லை

இலவு காத்த கிளியாகி-இரக்கம்
    இல்லா அரசால் பலியாகி
உலவ ஈழம் நடைப்பிணமாய்-நாம்
     உணர்வே இன்றி கிடப்போமா
நலமே பெற்றவர் வாழட்டும்-இன்றேல்
    நம்மினம் முற்றும் அழியட்டும்!
பலமே நமக்கு மனஉறுதி-சிங்கள
    பாவிகள் தமக்கு அதுயிறுதி

பொங்கி எழுவாய் தமிழகமே-சில
    போலிகள் ஒதுங்கட்டும் தமிழினமே
எங்கும் தொடங்கட்டும் அறப்போரே-இன
     அழிவைத் தடுத்திட இப்போரே
தங்குத் தடையது இல்லாமல்-ஏதும்
     தனிவழி யாரும் செல்லாமல்
வங்கக் கடலில் புயல்போல
     வருவீர்! எழுவீர்! அலைபோல!

                புலவர் சா இராமாநுசம்

19 comments:

  1. நேர்மையும் சத்தியமும் இல்லாத தலைவர்களை வைத்துக் கொண்டு போராட்டம் என்பது ஒரு கனவுதான். குறைந்த பட்சம் கவிதையிலாவது போராடுவோம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  2. தொடங்கட்டும் அறப்போர்.விடியட்டும் விடிவெள்ளி.

    ReplyDelete
  3. புயல் அலை போல பொங்கி எழட்டும்
    மக்கள் அலை வங்கக் கடலோரம்...

    ReplyDelete
  4. உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் கவிதை.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. வங்கக் கடலோரம் அறப்போர் தொடங்கட்டும்...வீரியக்கவிதை இது புலவர் அய்யா...

    ReplyDelete
  6. இன்குலாப் ஜிந்தாபாத்
    புரட்சி ஓங்குக

    ReplyDelete
  7. தொடங்கட்டும் புதிய அத்தியாயம்

    ReplyDelete
  8. நன்று! புதுப்போர் தொடங்கட்டும்! மலரட்டும் நல் விடியல்!

    ReplyDelete
  9. //பேருக்கு செய்வது இதுவல்ல-வீண்
    போட்டிக்கும் செய்வது இதுவல்ல//

    உண்மையை உணர்ந்து நாம் ஒவ்வொரு தமிழனும் செய்யவேண்டியதை சிறப்பாக கவிதை படைத்திருக்கிறீர்கள் ஐயா.

    ReplyDelete
  10. koodal bala said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. Sankar Gurusamy said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. Sekar said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. மகேந்திரன் said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன்

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. ரெவெரி said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. suryajeeva said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. சென்னை பித்தன் said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. கணேஷ் said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. சத்ரியன் said...

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete