மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே
மின்சார சுடுகாடாம் ஆமேஈண்டே
பொன்போல கட்டணமே விண்ணைமுட்ட-மற்ற
பொருள்களின் விலையேற்றம் கண்ணீர்சொட்ட
என்செய்வர் மக்களும் அம்மாயம்மா-மேலும்
அடிமேலே அடியா சும்மாயம்மா!
மின்சாரக் கட்டணம் குறைப்பீரம்மா-இந்த
மின்வெட்டே! வாட்டுவது, போதுமம்மா!
நாதியின்றி வாழ்பவர் நாட்டிலின்றே-இன்று
நடுத்தர குடும்பங்கள் பாவமன்றே!
வீதியிலே இறங்கிவர இயலாரென்றே-இந்த
வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர்நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பாருமம்மா-அப்
பாவிகளின் துயரத்தைத் தீருமம்மா!
நீதிக்கும் குரல்கொடுக்க துணியமாட்டார்-இரவு
நிம்மதியும் இல்லாமல் உறங்கமாட்டார்!
பணக்காரர் இதுபற்றி கவலைகொள்ளார்-இங்கே
பரமயேழைக்கும் இலவசம்! தொல்லையில்லார்
கணக்காக செலவுதனை திட்டமிட்டும்-மாதக்
கடைசியிலே கடன்வாங்கித் துயரப்பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப்பலரும்-வாழும்
பேதைகளாம் நடுத்தரமே! பொழுதாபுலரும்!?
குணமான குன்றேறி நின்றாரவரே!-அவர்
கொதித்தாலே எதிர்வந்து நிற்பாரெவரே!
வெந்துவிட்ட புண்ணிலே வேலும்பாயா-மேலும்
வேண்டுமா?முயல்வீரே! நாளும் ஆய!
நொந்துவிட்டார் ஏற்கனவே அறிவீர்நீரே-அந்த
நோக்காடே தீரவில்லை! இதுவும்வேறே
வந்துவிட்டால் துயர்நீங்க வழியேயில்லை!-எதிர்
வரலாற்றில் என்றென்றும் பழியேயெல்லை!
கந்துவட்டி மேலாகும் இந்தவுயர்வே-எம்மைக்
கடங்காரன் ஆக்காதீர் கருணைகாட்டும்!
புலவர் சா இராமாநுசம்
அனைத்து தேர்தல்களும் முடிந்துவிட்டன .....இனி அடுத்த தேர்தல் வரும்போதுதான் மக்களாட்சியை உணர முடியும் .....மக்கள் உணர்வை அழகிய கவிதையாக வடித்துள்ளீர்கள்...அருமை!
ReplyDeleteமின்சாரமே இல்லாதபோது கட்டணம் ஏறினால் என்ன,இறங்கினால் என்ன?விரக்திதான்!
ReplyDeleteஅம்மாவுக்கு ஒட்டு போட்டதற்கு ஆப்பு மேலே ஆப்பு தான் ஒன்னும் சொல்லுவதற்கில்லை. கவிதை அருமை.
ReplyDeleteசெய்யது
துபாய்
என்னைப் போன்ற நடுத்தர மக்களின் அவல நிலையை சொல்லும் ஏக்கக் கவிதை; ஆதங்கக் கவிதை. நன்று.
ReplyDeleteஆமேஈண்டே வா ஆமோண்டே வா? என்ன அர்த்தம் அய்யா? அல்லது என்ன மொழி வார்த்தை அது? மலையாளமா? விளக்கவும்.
- அப்புறம் அய்யா! என் தளம் திறக்க மறுக்கிறது என்று வலைச்சரத்தில் என் பதிவில் கருத்துரையிட்டிருந்தீர்கள். ஒரு சின்ன யோசனை. உங்கள் பிரவுசரை மாற்றிப் பாருங்கள். பயாபாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரை முயற்சி செய்யுங்கள். திறக்கும். அப்படியும் திறக்கவில்லை என்றால் தயைகூர்ந்து என் மின்னஞ்சலில் தெரிவியுங்கள். எப்படியாவது சரி செய்து விடுகிறேன். நன்றி அய்யா!
வேதனை தான். எல்லாம் தட்டுப்பாடு. விலையேற்றம். வாழ்க்கையே மலைப்பாகத் தான் இருக்கிறது.
ReplyDelete//பொன்போல கட்டணமே விண்ணைமுட்ட-மற்ற
ReplyDeleteபொருள்களின் விலையேற்றம் கண்ணீர்சொட்ட
என்செய்வர் மக்களும் அம்மாயம்மா-மேலும்
அடிமேலே அடியா சும்மாயம்மா!
மின்சாரக் கட்டணம் குறைப்பீரம்மா-இந்த
மின்வெட்டே! வாட்டுவது, போதுமம்மா!
//
unmaiyaana patheeippu .. ammma karunaiyudan maarram kondu varuvaarkal ethirpaarppom..
Arumai iya
ReplyDeleteகவிதை உண்மை நிலை தருகிறது.
ReplyDeleteஅவல ஆட்சி.. இது பெருமையா..
பஸ், பால், மின்சாரம் ஏற்றம், அதிகரிக்கும் குற்றங்கள், சாலை பணியாளர் ஒழிப்பு,....எவ்வளவோ .
எங்கு போய் நிற்குமோ ?
இப்படி ஆட்சி செய்ய அறிவாளி தேவையா?
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் கதை தான் ஐயா..
ReplyDeleteவணக்கம்!
ReplyDelete// மின்சாரக் கட்டணம் குறைப்பீரம்மா-இந்த
மின்வெட்டே! வாட்டுவது, போதுமம்மா! //
இரண்டே வரிகளில் நாம் படும் துயர். அம்மாவின் காதுகளில் விழ வேண்டும்.
அனைவரும் வெந்து சாவதை இதை விட அழுத்தமாகச்
ReplyDeleteசொல்ல யாராலும் முடியாது
யதார்த்த வேதனை நிலையை னேர்த்தியாய் சொல்லிப்போகும் பதிவு அருமையிலும் அருமை
பகிர்வுக்கு நன்றி
கவிதை அருமை...
ReplyDeletehttp://www.dunkindonutscoupons.com
tha.ma23
ReplyDeleteஐயா.....
ReplyDeleteஅரசை நம்பி ஏமாந்துட்டோம்.
இன்றைய நிலையை வேதனையோடு சொல்லி செல்கிறது உங்க கவிதை. பகிர்வுக்கு நன்றி ஐயா
ReplyDeleteகருணைக்காய் ஏங்கியது போதும்! போதும்! - இனி
ReplyDeleteவிடிவில்லை விடிவில்லை நமக்கு!
நம் வீட்டையே சுடுகாடாய் மாற்றிவிட்ட
புல்லர்களை சுடுகாட்டிற்கு அனுப்பும்வரை!