காலம் ஓடும் நிற்காதே-வீண்
காலம் கடத்தல் ஆகாதே!
ஞாலம் சுற்றும்! யாராலே-தினம்
நடப்பது இயற்கைப் பேராலே
ஆலம் கூட மருந்தாகும்-தூய
அன்பே ஏழைக்கு விருந்தாகும்
கோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
கொள்கை அழகு! பேசலுக்கு
திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
எண்ணா செயல்தரும் துயரன்றோ
மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நம்
குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுய
சிந்தனை தன்னில் ஆழ்வோமே
வையம் தன்னில் வாழ்வாங்கு-நாம்
வாழ என்றும் புகழோங்கும்
செய்யும் செயலைத் தெளிவாக-நாம்
சீர்பட செய்யின் களிவாக
உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
உண்மை, உழைப்பு எருவாகும்!
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
பூமியில் புகழச் சொல்லேது!
புலவர் சா இராமாநுசம்
காலம் தொடங்கி, அன்பு, திட்டமிடல், பணம், மனம், சொல்லாடல் என வாழ்க்கை முழுமைக்குமான அத்தனை நற்செய்திகளையும், தனித்தனியே சொன்னால் காலம் விரயமாகும் என ஒரே புனைவில் பகன்ற விதம் அருமை. வாழ்க்கை முழுமைக்குமான கவிதை.
ReplyDeleteவைர வார்த்தைகள் ஐயா...அருமை!
ReplyDeleteவையம் தன்னில் வாழ்வாங்கு-நாம்
ReplyDeleteவாழ என்றும் புகழோங்கும்
செய்யும் செயலைத் தெளிவாக-நாம்
சீர்பட செய்யின் களிவாக
உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
உண்மை, உழைப்பு எருவாகும்!
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
பூமியில் புகழச் சொல்லேது!
அருமையான வரிகள்
பகிர்வுக்கு நன்றி
tha.ma4
ReplyDeleteகுறைகள் செய்யாதவர் யார்?
ReplyDeleteஅவர்களின் நிலையிலிருந்து யோசித்தாலே அவை குறைகளாக தெரியாது.
நன்றி ஐயா.
வாழ்வியல் சிந்தனைகள் கவிதையில் பொதிந்து கிடக்கின்றன. அற்புத கவிதை! அழகு. நன்று ஐயா!
ReplyDeleteதமஓ 6.
ReplyDeleteஅழகாகச் சொன்னீர்கள் புலவரே.
ReplyDeleteநன்று.
''''ஆலம் கூட மருந்தாகும்-தூய
ReplyDeleteஅன்பே ஏழைக்கு விருந்தாகும்
கோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
கொள்கை அழகு! '''''
சிறந்த வாழ்வியல் கூறுகளை
சிந்தையில் ஏறும்படி
அழகாய் உரைத்திட்டமைக்கு
நன்றிகள் ஐயா...
\\மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
ReplyDeleteமனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நம்
குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுய
சிந்தனை தன்னில் ஆழ்வோமே\\
அழகிய பாவின் மூலம் அற்புதமாய் வாழும் வழிமுறைகளை அறியத் தந்தத் தங்களுக்கும் அனுபமுதிர்ந்த வரிகளுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.
koodal bala said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteவாக்கிட்டமைக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கோகுல் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
துரைடேனியல் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
துரைடேனியல் said...
ReplyDeleteவாக்கிட்டமைக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
guna thamizh said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கீதமஞ்சரி said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஒவ்வொரு வார்த்தையும் முத்துப்போல் தெறித்து வாழ்வின் அனுபவத்தைச் சொல்கிறது.மனதில் பதித்துக்கொள்கிறேன் !
ReplyDeleteவாழ்வாங்கு வாழ்வதற்கான சிந்தனைப் பெட்டகம்!
ReplyDeleteபுலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!
ReplyDelete// ஞாலம் சுற்றும்! யாராலே-தினம்
நடப்பது இயற்கைப் பேராலே //
நீதிநெறி விளக்கமாய் அமைந்த கவிதை! நூல் வடிவில் வெளிவந்துள்ள தங்கள் படைப்புகளைப் பற்றியும் தங்கள் வலைப் பதிவில், அட்டைப் படங்களோடு வெளியிட்டால் நல்லது. என்னைப் போன்று வீட்டு நூலகத்திற்கு புத்தகம் வாங்குவோருக்கு உதவியாக இருக்கும். நன்றி!
வாழ்வின் தத்துவத்தை இனிய கவிதையாக வடித்திருக்கின்றீர்கள் ஐயா!
ReplyDeleteமற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
ReplyDeleteமனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
சொற்களை அம்பென எய்யாதீர்
-அட்சர லட்சம் பெறும் வரிகள். மனதில் பதித்துக் கொள்ள வேண்டியவை. அருமை ஐயா...
அர்த்தமுள்ள கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
தமிழ்மணம் 27 மகுடம் வாழ்த்துக்கள்
அண்ணே அருமையா சொல்லி இருக்கீங்க ஆனா நடை முறையில்....!
ReplyDeleteவையம் தன்னில் வாழ்வாங்கு-நாம்
ReplyDeleteவாழ என்றும் புகழோங்கும்
செய்யும் செயலைத் தெளிவாக-நாம்
சீர்பட செய்யின் களிவாக
உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
உண்மை, உழைப்பு எருவாகும்!
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
பூமியில் புகழச் சொல்லேது!
-----------------------------------------------------------------------------
புலவர் அவர்களுக்கு வணக்கம்
மகுடத்தில் வந்ததால் மட்டும் அல்ல
தமிழ்த்தாய் உங்களை எப்பொழுதும்
மகுடத்தில் வைத்திருக்கிறாள்...
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
பூமியில் புகழச் சொல்லேது!
உண்மையான வார்த்தைகள்
பொய்ப்புகழ் கானல் நீர் போன்றது
சிலர் அறிந்தால் நல்லது....
மைனஸ் ஓட்டு போடாதிங்கப்பா....
கவிதைய நல்லா வாசிங்க
///ஏழைக்கு விருந்தாகும்
ReplyDeleteகோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
கொள்கை அழகு! பேசலுக்கு//
அருமையான வரிகள் ஐயா பகிர்வுக்கு நன்றி
காலத்திற்(கு) எத்தனைக் கால்கள்! கவியே
ReplyDeleteஞாலத்தில் நாம்வாழ யாத்தீர்! – கோலக்கவி!
சீர்பெற்ற நற்கருத்து செந்தமிழே! என்றென்றும்
பார்போற்ற வாழுமுன் பாட்டு!
அருணா செல்வம்
http://arouna-selvame.blogspot.com
அருமை நன்றி அய்யா
ReplyDeleteமரபுக் கவிதைகள் இப்பொழுது குறைந்தே விட்டன.அதனை தமிழ்மணத்தில் நீங்கள் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்.நன்றி.
ReplyDeleteசூப்பரு ஐயா
ReplyDeleteரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?
அன்பின் இராமாநுசம் ஐயா,
ReplyDeleteநான் ஸ்ரீராம். 2002ம் ஆண்டு வரை தங்களுடன் ரங்கராசபுரத்தில் வசித்தவன். Exnora அமைப்பில் உங்க தலைமையின் கீழ் செயல்பட்டவன். ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன்.
2002ல் தில்லிக்கு குடிபெயர்ந்தேன், பின்னர் 2007ல் பாஸ்டனுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. நாங்கள் நலமாக இருக்கிறோம், நீங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
bostonsriram.blogspot.com என்ற தளத்தில் கைக்கு வந்ததையெல்லாம் கிறுக்கி வருகிறேன். இன்று வேறொரு தளத்தில் உங்க படம் கண்டு இங்கு வந்தேன். உங்க தளம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
என்னுடைய மின் மடல் முகவரி: nsriram73@gmail.com.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்