நேற்று ஊடகங்களில் மக்கள் நலப் பணியாளர்
பிச்சை எடுக்கும் காட்சியைக் கண்டதின்
விளைவே இம், மீள்பதிவு!
நியாயம் தானா அம்மாவே-இது
நியாயம் தானா அம்மாவே
ஆயிரம் கணக்கில் அம்மாவே-ஓர்
ஆணையில் நீக்கினீர் சும்மாவே
தாயென உம்மை அழைக்கின்றார்-வேலை
தந்திடின் உயிரும் பிழைக்கின்றார்
ஆயன உடனே செய்வீரா-நீக்க
ஆணயை இரத்தும் செய்வீரா?
நீதி கேட்டே அலைகின்றார்-தம்
நிலையை எண்ணிக் குலைகின்றார்!
வீதியில் புரண்டே அழுகின்றார்-உமை
வேதனை நீக்கத் தொழுகின்றார்!
நாதியில் அவர்கே எண்ணுங்கள்-உடன்
நலன்பெற வழியும் பண்ணுங்கள்
சாதியில் ஏழைகள் அனைவருமே-அவர்
சந்ததி வாழ்ந்து நலம்பெறுமே!
தவறா செய்தார் அன்னவரே-வேலை
தந்தது ஆண்ட முன்னவரே!
இவரென் செய்தார் பரிதாபம்-அம்மா
எதற்கு இந்த முன்கோபம்
சுவரா என்ன இடித்துவிட-ஒரு
சொல்லில் வாழ்வை முடித்துவிட
அவரால் வாழ இயலாதே-அவரை
அநாதை ஆக்க முயலாதீர்
இரண்டு முறையேப் பட்டார்கள்-பாபம்
இனியும் தலையில் குட்டாதீர்
திரண்டு உதிக்கும் கண்ணீரே-அவர்
தினமும் வடிக்க பண்ணீரே
மிரண்டு ஓடும் மாடாக-உடல்
மேலும் வற்றிக் கூடாக
வரண்டு போகும் அவர்வாழ்வே-இனி
வாழ்வதும் தாழ்வதும் உம்கையில்!
புலவர் சா இராமாநுசம்
பிச்சை எடுக்கும் காட்சியைக் கண்டதின்
விளைவே இம், மீள்பதிவு!
நியாயம் தானா அம்மாவே-இது
நியாயம் தானா அம்மாவே
ஆயிரம் கணக்கில் அம்மாவே-ஓர்
ஆணையில் நீக்கினீர் சும்மாவே
தாயென உம்மை அழைக்கின்றார்-வேலை
தந்திடின் உயிரும் பிழைக்கின்றார்
ஆயன உடனே செய்வீரா-நீக்க
ஆணயை இரத்தும் செய்வீரா?
நீதி கேட்டே அலைகின்றார்-தம்
நிலையை எண்ணிக் குலைகின்றார்!
வீதியில் புரண்டே அழுகின்றார்-உமை
வேதனை நீக்கத் தொழுகின்றார்!
நாதியில் அவர்கே எண்ணுங்கள்-உடன்
நலன்பெற வழியும் பண்ணுங்கள்
சாதியில் ஏழைகள் அனைவருமே-அவர்
சந்ததி வாழ்ந்து நலம்பெறுமே!
தவறா செய்தார் அன்னவரே-வேலை
தந்தது ஆண்ட முன்னவரே!
இவரென் செய்தார் பரிதாபம்-அம்மா
எதற்கு இந்த முன்கோபம்
சுவரா என்ன இடித்துவிட-ஒரு
சொல்லில் வாழ்வை முடித்துவிட
அவரால் வாழ இயலாதே-அவரை
அநாதை ஆக்க முயலாதீர்
இரண்டு முறையேப் பட்டார்கள்-பாபம்
இனியும் தலையில் குட்டாதீர்
திரண்டு உதிக்கும் கண்ணீரே-அவர்
தினமும் வடிக்க பண்ணீரே
மிரண்டு ஓடும் மாடாக-உடல்
மேலும் வற்றிக் கூடாக
வரண்டு போகும் அவர்வாழ்வே-இனி
வாழ்வதும் தாழ்வதும் உம்கையில்!
புலவர் சா இராமாநுசம்
ஆஹா நான்தான் முதல் கவிதை, சூப்பர் அய்யா...!!!
ReplyDeleteவாழ்வதும் தாழ்வதும் அம்மா கையில். ஏதாவது செய்திடின் நன்று ஐயா.
ReplyDeleteஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா??
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
Kavithaiyil tholilalar nilai arinthen , nenju kanakkirathu valthukal
ReplyDeleteசிந்திக்க வேண்டிய வரிகள் சிந்திப்பார்களா ?
ReplyDeleteஅநியாயத்திற்கு எதிரான
ReplyDeleteநியாயமானக் கவிதை ஐயா!
வணங்குகிறேன்.
//வாழ்வதும் தாழ்வதும் உம்கையில்!//
ReplyDeleteவாழ வைப்பார்களா?
ஊர் சொத்தை கொள்ளையடித்து தின்று உடம்பை வளர்த்த அந்த பொம்பளையை அம்மா என்று சொல்லி... மனம் கூசுகிறது புலவரே...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கணேஷ் said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Sankar Gurusamy said
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
yathan Raj said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சசிகலா said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
AROUNA SELVAME said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம்!
ReplyDelete// தவறா செய்தார் அன்னவரே-வேலை
தந்தது ஆண்ட முன்னவரே!
இவரென் செய்தார் பரிதாபம்-அம்மா
எதற்கு இந்த முன்கோபம் //
மக்கள் நலப் பணியாளர்கள் படும் பாட்டிற்கு எது உண்மையான காரணம் என்பதனை உடைத்து சொல்லிவிட்டீர்கள்.
நம்ம வாழ்க்கைய அவங்க கைல ஒப்படைக்கவா ஓட்டு போட்டு உக்கார வைச்சோம்,கொடுமைங்க ஐயா.
ReplyDeleteமக்கள் நலன் பாராது தற்பெருமை முக்கியம் என்று நினைப்பதன் விளைவு, இத்தனை தொழிலாளர் வாழ்வில் நெருப்பு.
ReplyDeleteமுன்னவர் செய்ததை விட இன்னும் அதிகம் செய்து பெருமை பெற வாய்ப்பு இருந்தும் இழக்கின்றார் சிறுமையால்.