Thursday, March 22, 2012

கூடங்குளம் நமக்கெல்லாம் கூறுவதும் முக்காலும்!


நாடகமே உலகமென
      நவின்றதுவும் அக்காலம்!
பாடகரும் பாடியதை
      பயின்றதுவும் பிற்காலம்!
ஊடகங்கள் ஏடகங்கள்
      உணர்த்துவதும் தற்காலம்!
கூடங்குளம் நமக்கெல்லாம்
      கூறுவதும் முக்காலும்!

மாதக்கணகாக அங்கே
      மாதர்களும் போராட
ஆதரவு காட்டியவர்
      அம்மம்மா கைவிட்டார்!
சேதமில்லை என்றின்றே
      செப்பிவிட்டார்! ஒப்பிவிட்டார்!
வாதமென்ன செய்வாரா?
      வாயில்லா மக்களவர்!

ஊக்கம் கொடுத்தவரும்
    உற்றதுணை என்றவரும்
நோக்கம் என்னவென
     நோக்கவில்லை! அம்மம்மா!
காக்கும் கரமின்றே
      கைவிரித்து விட்டதம்மா!
ஆக்கம் அறியாதவர்
      அழுதமனம் தவிக்குதம்மா!

வேலியேப் பயிர்மேய
      விட்டகதை ஆயிற்றே
கூலிதந்து சூனியத்தை
     கொண்டநிலை ஆயிற்றே
காலிரண்டைக் கட்டிவிட்டும்
     கண்களையும்  கட்டிவிட்டும்
மேலிருந்து தள்ளிவிடும்
      மே(ல்)தாவி அரசியலே!
           வாழ்க!

             புலவர் சா இராமாநுசம்



   

18 comments :

  1. எதையும் அரசியல் நோக்கிலேயே பார்க்கும்
    அரசியல்வாதிகள் குணமும்
    எதையும் ஏற்றுக் கொள்கிற மன நிலையில்
    வாழும் மக்களின் குணமும் என்றுதான் மாறித் தொலைக்குமோ ?
    என்றுதான் தமிழகத்திற்கு விடிவு பிறக்குமோ ?
    மனம் கவர்ந்த பதிவு
    தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இல்லாதவர் குரல் சபையேறுவதில்லை...

    அதனால் தான் அப்பாவி பொது மக்களின் ஓலம் யாருக்கும் விழவில்லை போலும்



    இந்த அரசியலை என்ன சொல்ல...

    ReplyDelete
  3. நல்ல பசி என்றபோதும் நரகலை நாம் தொடுவதிலலை.
    மின் பசி (யார) தீர மட்டும் உயிர் திண்ணும் உலை பொங்க விட்டார்?
    பரமகுடி பார்த்த மனம் பதறுதிங்கே - பாவிகளே ! பாமரகுடி மக்கள் உயிராவிகளை மதித்திருங்கள்

    ReplyDelete
  4. Ramani said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. Ramani said...

    ஓட்டளித்தமைக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. கவிதை வீதி... // சௌந்தர் // said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. Harrispan said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. ஜப்பான்ல அல்லது ரஷ்யாவுல அல்லது அமெரிக்காவுல நடந்தது மாதிரி ஒரு அணு உலை இங்க வெடிச்சு அதில சில கேடுகெட்ட அரசியல்வாதிகளும் அவர்களின் சொத்துக்களும் பாதிக்கப்பட்டால் ஒழிய இதற்கு விடிவு காலம் இல்லை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  10. மேல்தாவி அரசியலை நினைத்தால் வயிறு எரியத்தான் செய்கிறது. அப்பாவி பொதுஜனத்தினால் என்ன செய்துவிட முடியும் இங்கே..? பாவம்!

    ReplyDelete
  11. Sankar Gurusamy said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. கணேஷ் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. என்று இந்த நிலை மாறும்..
    மக்களின் நிலையறிந்து செயல்படும்
    அரசியல் வாதிகள் என்று வரபோகிறார்கள்..
    விழி பூத்துவிடும் போல...

    ReplyDelete
  14. இந்த
    அரசியலும்
    ஆட்சியாளர்களும் இப்படித்தான் ஐயா

    நல்ல கவிதை அய்யா

    ReplyDelete
  15. இன்றைய அரசியல் மற்றும் மக்கள் நிலையை அழகாய் எடுத்தியம்புகிறது உங்க கவி. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  16. வேலியேப் பயிர்மேய
    விட்டகதை ஆயிற்றே
    கூலிதந்து சூனியத்தை
    கொண்டநிலை ஆயிற்றே...//

    மொத்த நிலையும் இந்த வரிகளில்...அற்புதம் புலவரே...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...