Tuesday, March 20, 2012

மதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை!மேலும்,


மதில்மேல் பூணை நிலைபோலும்-நம்
   மத்திய அரசின் நிலை!மேலும்
புதிர்போல் பதிலும் தோன்றிடுமே-ஐயம்
   புகுந்திட மனதில் ஊன்றிடுமே!
எதிலும் இதுவே வாடிக்கையா-என
   எண்ணிட செய்வது வேடிக்கையா
பதிலில் குழப்பமே! தெளிவில்லை!-எங்கள்
   பாரதப் பிரதமரே! இதுஎல்லை!


முழுவதும் அரசுக்குக் கிடைக்கிலையா-அன்றி
   முழுமனம் கொண்டிட இடமிலையா
அழுவது போலிது நாடகமா-பதில்
    அளித்தது எதற்கோ? பூடகமா!
தொழுவது எல்லாம் முடிந்தகதை-இங்கே
    தோன்றும் மற்றோர் இடிந்தகரை!
எழுவது தடுத்திட முனைவீரே-ஓட்டு
    இலங்கைக்கு எதிர்ப்பாய் தருவிரே!


சென்றது சென்றன ஆகட்டும்-நாம்
   செய்தன பாபம்! போகட்டும்!
கொன்றன ஒன்றா ஆயிரமா?-சிங்களக்
    கொடியோர் செய்தது? பல்லாயிரமா!
இன்றென வந்தது சிறுவிடிவே!-இதில்
   எடுப்பீர் பிரதமரே நல்முடிவே!
நன்றென உலகம் வாழ்த்தட்டும்-தமிழ்
    நாடும் மகிழ்ந்து போற்றட்டும்!

              புலவர் சா இராமாநுசம்
 

25 comments :

  1. பிரதமர் நல்முடிவு எடுத்தால் அனைவருக்கும் மகிழ்வே. நன்றே நடக்குமென விழைவோம் ஐயா...

    ReplyDelete
  2. நம் பிரதமர் வாயைத்திறந்து இது விசயமாக பேசியதே ஒரு அதிசயம். இன்னும் தமிழனுக்கு சாதகமாக நடவடிக்கை எடுத்தால் இந்த உலகம் அழிந்து விடும். இவர்கள் ஆதரவு இலங்கை நடவடிக்கைகளுக்கு எப்போதும் இருப்பது தெளிவு. அதை வேறு வேறு வார்த்தைகளில் சுழற்றி சுழற்றி சொல்லி இருக்கிறார் நம் பிரதமர். அதை இப்படி நம் ஊடகங்கள் செய்தி பரப்பி ஒரு நாடகத்தை நடத்துகிறார்கள். எல்லாம் நம் முத்தமிழறிஞர் கைங்கர்யம் என்று நினைக்கிறேன். இன்னொரு முறை 2 மணிநேர உண்ணாவிரதம் இருந்தால் அசிங்கம் என இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள்.

    அழகான கவிதை. பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  3. நல்லதே நடக்கட்டும்.அருமை ஐயா

    ReplyDelete
  4. அருமையான சவுக்கடி கவிதை

    ReplyDelete
  5. செப்பிய வார்த்தை சம்மட்டி-அது
    கொட்டிய விதமோ வடிகட்டி!
    துப்பிடும் வெற்றிலை வாயுதப்பி-போலஇவ்
    அரசுமே நின்றிடும் கைகட்டி!!
    மப்பிலே சுற்றிடு மிளம்பன்றி-சினி
    போதையில் இற்றையர் போலன்றோ!!!
    தப்பிசை கொண்டே ஒலித்திடினும்
    அன்னவர் செவிகளில் விழன்றோ!!!!

    இருப்பினும் அருங்கருத்துப் பாடலது,புலவர் ஐயா!,

    ReplyDelete
  6. பிரதமர் நல்ல முடிவை எடுத்தாலும், அந்தக் கட்சியை இனி அருங்காட்சியகத்திற்கு அனுப்புவதே உண்மைத் தமிழர்களின் தலையாயக் கடமை.

    ReplyDelete
  7. நல்ல கவிதை அய்யா .. அருமை ..
    // சென்றது சென்றன ஆகட்டும்-நாம்
    செய்தன பாபம்! போகட்டும்!
    கொன்றன ஒன்றா ஆயிரமா?-சிங்களக்
    கொடியோர் செய்தது? பல்லாயிரமா!
    இன்றென வந்தது சிறுவிடிவே!-இதில்
    எடுப்பீர் பிரதமரே நல்முடிவே!
    நன்றென உலகம் வாழ்த்தட்டும்-தமிழ்
    நாடும் மகிழ்ந்து போற்றட்டும்!//
    நல்ல வேண்டுதல் அய்யா ..

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  8. சென்றது சென்றன ஆகட்டும்-நாம்
    செய்தன பாபம்! போகட்டும்!
    கொன்றன ஒன்றா ஆயிரமா?-சிங்களக்
    கொடியோர் செய்தது? பல்லாயிரமா!
    இன்றென வந்தது சிறுவிடிவே!-இதில்
    எடுப்பீர் பிரதமரே நல்முடிவே!
    நன்றென உலகம் வாழ்த்தட்டும்-தமிழ்
    நாடும் மகிழ்ந்து போற்றட்டும்!//சவுக்கடி

    ReplyDelete
  9. எப்போதும் இந்திய அரசாங்கம் எப்போவுமே அமெரிக்காவுக்கு ஜால்ரா தானே..,

    ReplyDelete
  10. நல்லதே நடக்கட்டும் புலவர் ஐயா...இம்மாக்களை கொன்று புதைத்தாலும் பத்தாது...

    ReplyDelete
  11. என் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதை. நானும் எழுதியிருக்கிறேன். ஆனால் தங்களைப் போல நாகரீகமாக அல்ல.

    ReplyDelete
  12. நல்லதே நடக்கட்டும்.வேண்டிக்கொள்வோம் !

    ReplyDelete
  13. கணேஷ் said...

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. Sankar Gurusamy said...

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    21 March 2012 7:52 PM

    ReplyDelete
  15. சென்னை பித்தன் said...
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. Dhana Sekaran said...

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. NICE ventures said...

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. சத்ரியன் said...

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. Vishnu... said...


    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. மாலதி said...

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. αηαη∂.... said...


    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. ரெவெரி said...


    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. சிவகுமாரன் said...

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. ஹேமா said...

    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. எழுச்சிகவிதை நெஞ்சைத் தொட்டுவிட்டது. அய்யா!ஒட்டு மொத்த தம்ழர்களின் குரல் அவர்களுக்கு எட்டிவிட்டது.இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துவிட்டது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...