Monday, March 19, 2012

பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்தப் பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!


பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த
    பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!
புலராப் பொழுதே ஆனதுவே-துயர்
   பொங்கிட நிலையாய்ப் போனதுவே
தளரா அந்தோ! மின்வெட்டே-நம்
    தமிழகம் முற்றும் தொழில்கெட்டே
வளராப் பயிரும் கருகிவிடும்-பெரும்
    வறுமையும் பஞ்சமும் பெருகிவிடும்

சிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
    செப்பிட இயலா! திடுக்கிடுவேன்
உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
    உள்ள நிலைமை இதுவாகும்!
செலவும் வரவும் அறியோமே-எடுத்து
    செப்பிட ஏதும் இயலாமே
அலைபோல் உள்ளம் அலைகிறதே-என்ன
   ஆகுமோ? என்றே குலைகிறதே!

பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
  பவர்கட் தருவதும் சரிபாதி!
அகலும் நாளும் வந்திடுமா-படும்
   அல்லல் நீக்கித் தந்திடுமா?
புகல அரசால் முடியாதே-திட்டம்
   போட்டால் அன்றி விடியாதே!
இகலே அரசியல் ஆனதுவே-காணல்
   இயல்பாய் நமக்கும் போனதுவே!


ஓட்டு ஒன்றே குறியாக-இங்கே
   உள்ள கட்சிகள் நெறியாக
காட்டும் நிலையே காண்கின்றோம்-இதைக்
   கண்டே மனமும் நாணுகின்றோம்
போட்டிகள் எதிலும் நாள்தோறும்-சண்டைப்
    போடுவர் உள்ள ஊர்தோறும்
வாட்டுது அந்தோ! மின்கட்டே-ஐயா!
   வந்திடும் மேலும் மின்வெட்டே!

                            புலவர் சா இராமாநுசம்



    

33 comments:

  1. சென்னையில இருக்கறவங்க பரவாயில்லை, மத்த ஊர்லல்லாம் மின்வெட்டு மிக அதிகம்னு புலம்பினாங்க முன்ன. இப்ப சென்னைல இருக்கறவங்களும் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. பதிவுலகைத் தவிர, நாட்டின் உற்பத்தி எவ்வளவு தூரம் இதனால பாதிச்சிருக்கும்னு நினைக்கவே முடியலை. எல்லாருடைய ஆதங்கத்தையும் அழகாய் கவிதையில் சொல்லி விட்டீர்கள்!

    ReplyDelete
  2. மின்வெட்டால் படும் அவதியையும் அழகிய தமிழால் அலங்கரித்துள்ளீர். பாவுக்காய்ப் பாராட்டுகள். பாழும் மின்வெட்டுக்காய்ப் பரிதாபங்கள்.

    ReplyDelete
  3. மின் வெட்டின் பாதிப்புகளைப் பற்றி அழகாக விளக்கிய கவிதை.. நானும் அடுத்த மாதம் முதல் சென்னைவாசி ஆகப் போகிறேன். மின்வெட்டை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  4. பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
    பவர்கட் தருவதும் சரிபாதி!
    அகலும் நாளும் வந்திடுமா-படும்
    அல்லல் நீக்கித் தந்திடுமா?

    மின் வெட்டும் கவிதை தந்திடுமோ !!!!!!!!!

    ReplyDelete
  5. மின்வெட்டுக்கு நல்ல ஒரு கவிதை....!!!

    ReplyDelete
  6. என் கவலை சொல்லும் கவிதை.

    ReplyDelete
  7. மின்வெட்டு எரிச்சலைக் கொடுத்தாலும்
    மின்வெட்டுக் கவிதை மனதை குளிரச்செய்கிறது
    மனம் கவர்ந்த படைப்பு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. என் பகுதி மின்வெட்டு நேரம்....

    காலை 9 - 12
    மதியம் 3 - 6

    மாலை 6.45 - 7.30

    இரவு 9.00 - 9.45

    நள்ளிரவு 11.00 - 12.00

    அதிகாலை 4.00 - 5.30



    இப்படியிருந்தா நான் என்னத்தை பண்ஙது...

    ReplyDelete
  9. மின்வெட்டிற்கு இடையே மின்னலாய் ஒரு கவி . ரசிக்கும் நேரமாவது இருக்குமா அச்சத்துடனே .....

    ReplyDelete
  10. மின்வெட்டு தாண்டியும் உங்களது கவிதை ரசிக்க வைத்தது.... எத்தனை நாள் தான் இந்த நிலையோ புரியவில்லை!

    அரசியல் ஆதாயங்கள் தேடுவதில்தான் கட்சிகள் இருக்கின்றனவே தவிர பிரச்சனைக்கு பதில் தேட முயல்வதே இல்லை.... :(

    ReplyDelete
  11. மின்வெட்டால் படும் அவதியை அழகாகச் சொல்லி நிற்கிறது கவிதை

    ReplyDelete
  12. கணேஷ் said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. கீதமஞ்சரி said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. Sankar Gurusamy said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. இராஜராஜேஸ்வரி said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. MANO நாஞ்சில் மனோ said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. Dhana Sekaran said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. Ramani said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. கவிதை வீதி... // சௌந்தர் // said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. சசிகலா said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. வெங்கட் நாகராஜ் said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. சென்னை பித்தன் said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. மின்வெட்டு வந்தும் மிளிர்கிறது! தங்களின்
    பண்பட்(டு) எழில்நிறைந்த பாட்டு!

    ReplyDelete
  24. எல்லாருடைய ஆதங்கத்தையும் அழகாய் கவிதையில் சொல்லி விட்டீர்கள் புலவரே..

    ReplyDelete
  25. வணக்கம்! மின் வெட்டால் பதிவர்கள் படும் பாட்டை சரியாகச் சொல்லி விட்டீர்கள்.
    // உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
    உள்ள நிலைமை இதுவாகும்! //
    என்ற வரிகள் ஊர் நிலைமையைச் சொல்லும்.

    ReplyDelete
  26. இதை எழுதவாவது மின்சாரம் இருந்ததே. அதுவே மகிழ்ச்சி தரும் செய்திதான்.

    ReplyDelete
  27. வணக்கம் ஐயா!
    சரியான திட்டமிடுதல் இல்லாததுதான் இந்த மின் வெட்டுக்கு காரணம்.. இதில் பரீச்சைக்கு படிக்க இருக்கும் மாணவர்கள்தான் பாவம். :-(

    ReplyDelete
  28. AROUNA SELVAME said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. ரெவெரி said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. தி.தமிழ் இளங்கோ said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. சிவகுமார் ! said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. தனிமரம் said...

    வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete