பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த
பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!
புலராப் பொழுதே ஆனதுவே-துயர்
பொங்கிட நிலையாய்ப் போனதுவே
தளரா அந்தோ! மின்வெட்டே-நம்
தமிழகம் முற்றும் தொழில்கெட்டே
வளராப் பயிரும் கருகிவிடும்-பெரும்
வறுமையும் பஞ்சமும் பெருகிவிடும்
சிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
செப்பிட இயலா! திடுக்கிடுவேன்
உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
உள்ள நிலைமை இதுவாகும்!
செலவும் வரவும் அறியோமே-எடுத்து
செப்பிட ஏதும் இயலாமே
அலைபோல் உள்ளம் அலைகிறதே-என்ன
ஆகுமோ? என்றே குலைகிறதே!
பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
பவர்கட் தருவதும் சரிபாதி!
அகலும் நாளும் வந்திடுமா-படும்
அல்லல் நீக்கித் தந்திடுமா?
புகல அரசால் முடியாதே-திட்டம்
போட்டால் அன்றி விடியாதே!
இகலே அரசியல் ஆனதுவே-காணல்
இயல்பாய் நமக்கும் போனதுவே!
ஓட்டு ஒன்றே குறியாக-இங்கே
உள்ள கட்சிகள் நெறியாக
காட்டும் நிலையே காண்கின்றோம்-இதைக்
கண்டே மனமும் நாணுகின்றோம்
போட்டிகள் எதிலும் நாள்தோறும்-சண்டைப்
போடுவர் உள்ள ஊர்தோறும்
வாட்டுது அந்தோ! மின்கட்டே-ஐயா!
வந்திடும் மேலும் மின்வெட்டே!
புலவர் சா இராமாநுசம்
சென்னையில இருக்கறவங்க பரவாயில்லை, மத்த ஊர்லல்லாம் மின்வெட்டு மிக அதிகம்னு புலம்பினாங்க முன்ன. இப்ப சென்னைல இருக்கறவங்களும் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. பதிவுலகைத் தவிர, நாட்டின் உற்பத்தி எவ்வளவு தூரம் இதனால பாதிச்சிருக்கும்னு நினைக்கவே முடியலை. எல்லாருடைய ஆதங்கத்தையும் அழகாய் கவிதையில் சொல்லி விட்டீர்கள்!
ReplyDeleteமின்வெட்டால் படும் அவதியையும் அழகிய தமிழால் அலங்கரித்துள்ளீர். பாவுக்காய்ப் பாராட்டுகள். பாழும் மின்வெட்டுக்காய்ப் பரிதாபங்கள்.
ReplyDeleteமின் வெட்டின் பாதிப்புகளைப் பற்றி அழகாக விளக்கிய கவிதை.. நானும் அடுத்த மாதம் முதல் சென்னைவாசி ஆகப் போகிறேன். மின்வெட்டை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
ReplyDeleteபவர்கட் தருவதும் சரிபாதி!
அகலும் நாளும் வந்திடுமா-படும்
அல்லல் நீக்கித் தந்திடுமா?
மின் வெட்டும் கவிதை தந்திடுமோ !!!!!!!!!
மின்வெட்டுக்கு நல்ல ஒரு கவிதை....!!!
ReplyDeleteஎன் கவலை சொல்லும் கவிதை.
ReplyDeleteமின்வெட்டு எரிச்சலைக் கொடுத்தாலும்
ReplyDeleteமின்வெட்டுக் கவிதை மனதை குளிரச்செய்கிறது
மனம் கவர்ந்த படைப்பு.வாழ்த்துக்கள்
Tha.ma 4
ReplyDeleteஎன் பகுதி மின்வெட்டு நேரம்....
ReplyDeleteகாலை 9 - 12
மதியம் 3 - 6
மாலை 6.45 - 7.30
இரவு 9.00 - 9.45
நள்ளிரவு 11.00 - 12.00
அதிகாலை 4.00 - 5.30
இப்படியிருந்தா நான் என்னத்தை பண்ஙது...
மின்வெட்டிற்கு இடையே மின்னலாய் ஒரு கவி . ரசிக்கும் நேரமாவது இருக்குமா அச்சத்துடனே .....
ReplyDeleteமின்வெட்டு தாண்டியும் உங்களது கவிதை ரசிக்க வைத்தது.... எத்தனை நாள் தான் இந்த நிலையோ புரியவில்லை!
ReplyDeleteஅரசியல் ஆதாயங்கள் தேடுவதில்தான் கட்சிகள் இருக்கின்றனவே தவிர பிரச்சனைக்கு பதில் தேட முயல்வதே இல்லை.... :(
மின்வெட்டால் படும் அவதியை அழகாகச் சொல்லி நிற்கிறது கவிதை
ReplyDeleteகணேஷ் said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கீதமஞ்சரி said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Sankar Gurusamy said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Dhana Sekaran said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சசிகலா said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மின்வெட்டு வந்தும் மிளிர்கிறது! தங்களின்
ReplyDeleteபண்பட்(டு) எழில்நிறைந்த பாட்டு!
எல்லாருடைய ஆதங்கத்தையும் அழகாய் கவிதையில் சொல்லி விட்டீர்கள் புலவரே..
ReplyDeleteவணக்கம்! மின் வெட்டால் பதிவர்கள் படும் பாட்டை சரியாகச் சொல்லி விட்டீர்கள்.
ReplyDelete// உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
உள்ள நிலைமை இதுவாகும்! //
என்ற வரிகள் ஊர் நிலைமையைச் சொல்லும்.
இதை எழுதவாவது மின்சாரம் இருந்ததே. அதுவே மகிழ்ச்சி தரும் செய்திதான்.
ReplyDeleteவணக்கம் ஐயா!
ReplyDeleteசரியான திட்டமிடுதல் இல்லாததுதான் இந்த மின் வெட்டுக்கு காரணம்.. இதில் பரீச்சைக்கு படிக்க இருக்கும் மாணவர்கள்தான் பாவம். :-(
AROUNA SELVAME said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சிவகுமார் ! said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தனிமரம் said...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்