ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம்
உடனடி செய்வது பொறுத்தமே!
இருநாள் வீணே போயிற்றே-தமிழ்
இனமே விரைந்து செயலாற்றே!
வெறிநாய் சிங்களர் உணரட்டும்-படை
வீரர்கள் அணியென திரளட்டும்!
வருநாள் உலகம் அறியட்டும்-இறுதி
வாழ்வா சாவா? தெரியட்டும்!
கூடங் குளமாய் ஆகட்டும்-மக்கள்
கொதித்து ஊர்வலம் போகட்டும்!
பாடம் வடவரும் கற்கட்டும்-அதைப்
பார்த்தே சிங்களர் மிரளட்டும்!
வேடம் கலைந்திட சிலரிங்கே-தலை
வெட்கிக் குனிய வருமிங்கே
நாடகம் முடியும் அப்போதே-இதை
நடத்துவோம்! உண்மை! தப்பாதே!
இனவழி அனைவரும் ஒன்றாக-நாம்
இணைந்தால் போதும் நன்றாக!
மனவழி கட்சிகள் மறையட்டும்!-தமிழ்
மரபைக் காத்திட பறைகொட்டும்
சினவழி முடிவு எடுக்காமல்-நன்கு
சிந்தித்து எதையும் கெடுக்காமல்
அனைவ ஒன்றென செய்வீரே-பெரும்
அறப்போர்! விரைவில் உய்விரே!
வணிகர் மாணவர் தொழிலாளி-உணவு
வழங்கும் உழவர்! இன்னபிறர்
அணியென பெண்ணினம் எழுமானால்-உலக
அரங்கில் அக்குரல் விழுமானால்
பணிந்திடும் மத்தியும் அப்போதே-நாள்
பார்த்தா..?புறப்படும்! இப்போதே!
பிணியிது! மருந்திது! செயல்படுவீர்!-நம்
பேரினம் அழியவா வழிவிடுவீர்!?
புலவர் சா இராமாநுசம்
ஆம் ஐயா... எவ்வகையிலேனும் நம் எதிர்ப்பை, கொதிப்பை வெளிக்காட்டியே ஆக வேண்டும். உங்கள் கவிதையின் ஆதங்கம் என்னுள்ளும்!
ReplyDeleteநல்லதொரு வழி ஐயா.
ReplyDeleteமற்றுமோர் வீரிய ஆதங்க கவிதை புலவரே...
ReplyDeleteஎட்டு திக்கும்... குறிப்பாக டெல்லி செவிடர்கள் காதில் விழ எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும்..
ஏதாவது செய்துதான் தீர வேண்டும்,நன்று
ReplyDeleteமிகவும் ஆறுதல் தரும் உணர்வுமிக்க கவிதை ஐயா! வதங்கிய நெஞ்சினை வார்த்தை கொண்டு தடவி, ஆறுதல்படுத்தியுள்ளீர்கள்! மிக்க நன்றி!!
ReplyDeleteநாம் இணைந்தால் போதும் நன்றாக!
ReplyDeleteமுற்றிலுமாக காயடிக்கப்பட்ட நம் தமிழ் சமூகத்திடம் இருந்து சற்று அதிகமாகவே எதிர்பார்க்கிறீர்கள்.. இதை எதிர்த்து முனகினாலே என்ன செய்வார்களோ என்ற பயம்தான் இப்போது விரவிக்கிடக்கிறது.. மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
சும்மா விடக்கூடாது ....
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஉங்கள் உணர்வுகளுக்குத் தலைசாய்க்கிறோம்.ஆனால் அரக்கர்கள் உலகில் எதுவும் நல்லது நடக்கச் சாத்தியமில்லை !
ReplyDeleteகவிதை எழுச்சியை ஊட்டுகிறது.
ReplyDeleteகணேஷ் said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அருள் said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Sekar said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Ideamani - The Master of All said
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ராஜ நடராஜன் said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Sankar Gurusamy said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
பட்டிகாட்டு தம்பி said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
T.N.MURALIDHARAN said
ReplyDeleteநன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்